ஒரு செகண்ட்.. அப்படியே ஆபிஸே ஸ்டன் ஆக.. சரமாரியாக கேட்டுட்டாங்களே.. அதிமுக அலுவலகத்தில் நடந்த திக்
சென்னை: அதிமுக அலுவலகத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் விவாதங்களை, பரபரப்பை கிளப்பி உள்ளது. இந்த விவகாரம் கட்சியினர் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து அதிமுகவினருடன் தொகுதி வாரியாக இரண்டாம் கட்ட ஆலோசனையை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. முதல் கட்ட ஆலோசனையில் கலந்து கொண்ட நிர்வாகிகளிடம், மனம் திறந்து பேசலாம் ; எவ்வித கட்டுப்பாடும் இல்லை என சொல்லப்பட்டதால் மாவட்ட நிர்வாகிகள் பலரும் மா.செ.க்களுக்கு எதிராகவும், மாஜி மந்திரிகளுக்கு எதிராகவும் மடை திறந்தார் போல் பேசினர்.

ஒரு கட்டத்தில், வேட்பாளர்கள் தேர்வில் தலைமையே (எடப்பாடி பழனிச்சாமி) சறுக்கி விட்டது என்கிற தொணியில் அவர்களின் பேச்சும் இருந்தது. இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் எடப்பாடி உள்ளிட்ட சீனியர்கள், மா.செ.க்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
வேறு விவகாரங்கள் பேச வேண்டாம்: இந்த நிலையில்தான், இரண்டாம் கட்ட ஆலோசனையில், தேர்தல் தோல்வி குறித்து மட்டும் பேசுங்கள் ; வேறு விவகாரங்கள் பேச வேண்டாம். 2026 தேர்தலை எதிர்கொள்ள ஆலோசனை சொல்லுங்கள். தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுங்கள். அம்மா (ஜெ.) இருந்திருந்தால் தலைமைக்கு எதிராக பேசுவீர்களா? என்றெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி ஆகியோர் கோபம் காட்டியிருக்கி றார்கள்
திமுக குழு: இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இப்போதே திமுகவில் ஒருங்கிணைப்புக் குழு அமைத்து பணிகளை திமுக துவக்கி யிருப்பது குறித்து, ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் சீனியர்களிடம் ஆலோசித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது, ஆளும் கட்சியாக இருப்பதால் சில முடிவுகளை அவர்கள் எடுக்கிறார்கள். இப்போதே தேர்தல் பணிகளைத் துவக்குங்கள் என நாம் சொன்னால், பெரிய தாக்கம் எல்லாம் இருக்காது, என்றெல்லாம் பேசி இருக்கிறார்கள்.
ஷாக் சம்பவம்: அதிமுக அலுவலகத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் விவாதங்களை, பரபரப்பை கிளப்பி உள்ளது. இந்த விவகாரம் கட்சியினர் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் எடப்பாடியை 6 மாஜி அமைச்சர்கள் எதிர்த்ததாக செய்திகள் வந்தன.
6 மாஜி அமைச்சர்கள் எடப்பாடியை போய் சந்தித்து இருக்கிறார்கள் போல, 6 பேர் எடப்பாடியை எதிர்க்கின்றனர். அடுத்த முறை 12 பேர் கூட வரலாம். எடப்பாடி பழனிசாமி இவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மணியான மாஜி அமைச்சர்கள் உட்பட 6 மாஜிக்கள் எடப்பாடியை சந்தித்து பேசி உள்ளனர். லோக்கல் தொண்டர்கள் பிரஷர் காரணமாக போய் பேசி உள்ளனர். அவரிடம் நெருக்கமாக இருந்தவர்களே எடப்பாடியிடம் போய் பேசி உள்ளனர். எவ்வளவு நாள் எடப்பாடி நான்தான் எல்லாம் என்று பேசிக்கொண்டு இருக்க முடியும். இடைநிலை தலைவர்கள் இதை புரிந்து கொண்டனர், என்றெல்லாம் செய்திகள் வந்தன.
செங்கோட்டையன்: இந்த 6 பேர் லிஸ்டில் செங்கோட்டையனும் இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் செங்கோட்டையனை நோக்கி அதிமுக மீட்டிங்கில் திருப்பூர் நிர்வாகிகள் பலர் கேள்வி கேட்டனர்.
உங்களை பற்றி அவ்வளவு செய்திகள் வந்ததே.. 6 பேர் போர்க்கொடி தூக்கியதாக செய்திகள் வந்ததே.. நீங்கள் ஏன் அதை எல்லாம் மறுக்கவில்லை என்று கட்சி கூட்டத்திற்கு வந்த நிர்வாகிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். திடீரென நிர்வாகிகள் எழுப்பிய கேள்வியால் ஒரு நிமிடம் கட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications