அதிகாலையில் அவஸ்தை! ஸ்டன் ஆன திருச்சி - சென்னை ஹைவே! ஒரு இன்ச் கூட நகர முடியாமல்.. சிக்கிய வாகனங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று இரவு ஏற்பட்ட விபத்து காரணமாக திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் ஒரு இன்ச் கூட நகர முடியாமல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மணல் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற போது சிறுகனூர் அருகே விபத்து ஏற்பட்டு உள்ளது.

trichy

நள்ளிரவில் விபத்து காரணமாக திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மணல் லாரி மீது மோதியதில் அரசுப் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதம் அடைந்து உள்ளது. விபத்தில் சிக்கிய 2 வாகனங்களும் கிரேன் மூலம் மீட்டு அப்புறப்படுத்தினர் போலீசார்.

கடுமையான போக்குவரத்து நெரிசல்: தென் தமிழ்நாட்டை வடதமிழ்நாட்டோடு இணைக்கும் முக்கியமான சாலைகளில் ஒன்று ஆகும் இது.

இந்த சாலை வழியாக சென்னை செல்பவர்கள் அதிகம் பயணிப்பது வழக்கம். அதேபோல் சென்னையில் இருந்து மதுரை, கன்னியாகுமரி, நெல்லை, கேரளாவில் திருவனந்தபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்பவர்களும் அதிகம் பயணிப்பது வழக்கம். இப்படிப்பட்ட சாலையில்தான் விபத்து ஏற்பட்டு உள்ளது.

இந்த சாலை இரவு நேரத்திலும் தீவிர பிசியாக இருக்கும் பாலம் ஆகும். அதிக அளவில் இந்த சாலையில் வாகனங்கள் செல்வது வழக்கம். நேற்று ஞாயிறு என்பதால் இன்று சென்னைக்கு திரும்ப பல வாகனங்கள் இந்த சாலையில் வந்தன. இதனால் ஏற்கனவே இங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விபத்து: இந்த பிஸியான சாலையில்தான் இன்று விபத்து ஏற்பட்டு உள்ளது. அதிகாலையில் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது, பனிமூட்டம் காரணமாக டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. லாரிதான் முதலில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

தொடரும் விபத்துகள்; தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன. கடந்த 12 ஆண்டுகளில் 1010க்கும் அதிகமான விபத்துகளை சந்தித்த தொப்பூர் கணவாயில் இன்னொரு விபத்து ஒன்றும் சமீபத்தில் ஏற்பட்டு உள்ளது. இந்த வீடியோவின் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தருமபுரி மாவட்ட தொப்பூரில் வருடா வருடம் நூற்றுக்கணக்கில் விபத்துகள் ஏற்படுவது வழக்கம். இந்த கணவாய் கிட்டத்தட்ட ஒரு கொலைகார கணவாய் என்று கூட அழைக்கப்படும். கடந்த 2020ம் வருடம் டிசம்பர் மாதம் தருமபுரி மாவட்ட தொப்பூரில் ஏற்பட்ட விபத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சரக்கு லாரி ஒன்று டோல் டிராபிக்கில் நின்று கொண்டு இருந்த 13 வாகனங்கள் மீது வரிசையாக மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது.

கொடூர விபத்து: இந்த கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியானார்கள். 40 பேர் காயம் அடைந்தனர். 11 கார்கள் சின்னாபின்னமானது. தொப்பூரில் நடந்த விபத்துகளில் இது மிக மோசமான ஒன்று. தொப்பூரில் இப்படி கொடூர விபத்துகள் நடப்பது இது புதிதல்ல.. கடந்த சில வருடங்களாக இங்கு விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+