திண்டுக்கல் பஸ்ஸில் ஒரு நொடி தவறு.. முடிந்து போன அமராவதி வாழ்க்கை.. தயவு செய்து இப்படி பண்ணாதீங்க
திண்டுக்கல்: அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஏறும் பலர் உட்கார இடம் கிடைக்காமல் போனால் நின்று கொண்டே வருகிறார்கள். அப்படி பேருந்தில் ஏறும் போது, டிக்கெட் எடுப்பதற்காக பணத்தை எடுக்கிறார்கள். அவர்கள் பணத்தை எடுக்கும் போது கம்பியை பிடிக்காமல் நிற்கிறார்கள். அந்த நேரத்தில் திடீரென டிரைவர் பிரேக் அடித்து வண்டியை ஓட்டினால் சட்டென வண்டியில் இருந்து பயணிகள் தவறிவிழுந்து விடுகிறார்கள். அப்படித்தான் திண்டுக்கல் தனியார் பேருந்தில் நடந்துள்ளது.
இன்றைக்கு பல்வேறு ஊர்களில் பேருந்துகளில் ஏறும் மக்கள், கூட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தால், நின்று கொண்டே பயணிக்கிறார்கள். அப்படி பேருந்துகளில் உட்கார இடம் இல்லாத காரணத்தால், நின்று கொண்டே செல்லும் பயணிகள் திடீரென தவறி விழும் சம்பவங்கள் நடக்கின்றன. ஏனெனில் பேருந்தில் ஏறும் போது, டிக்கெட் எடுப்பதற்காக பணத்தை எடுக்கிறார்கள். அவர்கள் பணத்தை எடுக்கும் போது கம்பியை பிடிக்காமல் நிற்கிறார்கள்.

அந்த நேரத்தில் திடீரென டிரைவர் பிரேக் அடிக்கும் போது, தவறி விழுகிறார்கள். சில பெண்கள் கம்பி எட்டாத காரணத்தால் சைடில் உள்ள கம்பி பிடித்து நிற்கிறார்கள். சைடு கம்பியை பிடித்து நிற்கும் போது சிலர், சாய்ந்து நின்று கொண்டு நிற்கிறார்கள். கம்பியை பிடிக்க தவறி விடுகிறார்கள். அப்படி கம்பியை பிடிக்க தவறும் சில வினாடிகள் கூட அவர்களுக்கு எமனாக மாறி உள்ளது. நத்தம் அருகே தனியார் பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டியை அடுத்த வி.எஸ் கோட்டை அருகேயுள்ள வையாளிப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி அமராவதிக்கு 50 வயது ஆகிறது.இவர் நேற்று புதன்கிழமை காலை கோபால்பட்டியில் இருந்து நத்தம் நோக்கி தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கணவாய்பட்டி கருப்பு கோயில் அருகே பேருந்து சென்ற போது அமராவதி பேருந்தில் இருந்து எதிர்பாராத விதமாக படிக்கட்டு வழியே கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி அமராவதி உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து சாணார்பட்டி காவல் ஆய்வாளர் பிரபாகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் அமராவதி தனியார் பேருந்தில் இருந்து தவறி விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications