குன்றத்தூர் ரூபாவதிக்கு இப்படியா ஆகணும்.. பல்லாவரம் சாலையை ஸ்தம்பிக்க வைத்த உறவினர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் புறநகர் பகுதியான குன்றத்தூர் அருகே வசிக்கும் ரூபாவதி என்பவர் கீரை வியாபாரம் செய்து வந்தார். நேற்று உடல்நிலை சரியில்லாததால் இரண்டாம் கட்டளை பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் அங்கு டாக்டர்கள் ஊசி போட்ட பிறகு அவருக்கு நடந்த சம்பவம் உறவினர்களை ஆடிப்போக வைத்துள்ளது.

மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற செல்லும் போது, திடீரென எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது. நன்றாகத்தான் இருப்பார்.. ஆனால் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துவிடுவார்கள். இது அவ்வப்போது நடக்கக்கூடிய நிகழ்வாகவே இருக்கிறது. பொதுவாக இதுபோன்ற நிலைக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக குற்றம்சாட்டப்படுகிறது. மருத்துவர் அலட்சியமாகவோ அல்லது கவனக்குறைவாகவோ சிசிச்சை அளித்ததில் நோயாளி உயிரிழந்திருந்தார் அது சிக்கலாக மாறுகிறது..

What happened to Rupavathi of Kundrathur at the hospital

மற்றப்படி மருத்துவர்கள் உயிரை காப்பற்ற போராடுவார்கள்.. அதிலும் அவர் குணமாகமால் உயிரிழந்தால், அதற்கு மருத்துவர்கள் பொறுப்பில்லை.. அதேநேரம் சம்பந்தமே இல்லாமல், தவறான சிகிச்சை காரணமாக நோயாளி இறந்தால், அது டாக்டருக்கு மட்டுமல்ல பணிபுரியும் மருத்துவமனைக்கும் சிக்கலாகும்.. குன்றத்தூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த தரமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிரி என்பவருடைய மனைவி ரூபாவதிக்கு 54 வயது ஆகிறது. இவர் கீரை வியாபாரம் செய்து வந்தார். நேற்று உடல்நிலை சரியில்லாததால் இரண்டாம் கட்டளை பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். அங்கு டாக்டர்கள் ஊசி போட்ட பிறகு திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

அங்கு பரிசோதனை செய்து டாக்டர்கள் ரூபாவதி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் குன்றத்தூர்- பல்லாவரம் செல்லும் சாலை, தரமா நகர் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடச் செய்தார்கள்.

இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், ரூபாவதி கால்வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ஊசி போட்ட சில நிமிடங்களில் திடீரென இறந்துவிட்டார்.இந்த விவாகரத்தில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குன்றத்தூர் தரமா நகர் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+