Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூந்தமல்லியில் வீட்டில் தனியாக இருந்த 25 வயது பெண்.. அத்துமீறி, ஆடையில்லாமல் அசிங்கம் செய்த இளைஞர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் திருமணம் ஆன 25 வயது இளம் பெண் வசித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். இளைஞர் ஒருவர் அந்த பெண் வீட்டின் கதவை தட்டியுள்ளார். அப்போது முகவரி கேட்பதுபோல் பேசியிக்கிறார். பின்னர் வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த அவர், திரும்பவும் வீட்டிற்கு வந்துள்ளார். அந்த பெண்ணை திருப்புளியை காட்டி மிரட்டி கை, கால்களை கட்டிப்போட்டு அத்துமீறியதுடன், தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளார். அவரை ஆடையில்லாமல் வீடியோவும் எடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை பகுதியில் திருமணம் ஆகி 25 வயது இளம்பெண் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது 'டிப்டாப்' ஆசாமி ஒருவர் வந்து அந்த பெண்ணின் வீட்டின் கதவை தட்டியிருக்கிறார்.

What happened to the 25-year-old woman who was alone at home in Poonamallee

அத்துமீறியுள்ளார்

அந்த பெண் கதவை திறந்ததும் முகவரி கேட்பதுபோல் அந்த வாலிபர் பேசியுள்ளார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு அங்கிருந்து புறப்பட்டார். சிறிது நேரத்தில் அவர் மீண்டும் வந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த அந்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே முகத்தில் திருப்புளியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளாராம். பின்னர் கை, கால்களை கட்டி போட்டுள்ளாராம்.

செல்போனில் வீடியோ எடுத்தார்

பின்னர் அந்த இளைஞர், பலவந்தப்படுத்தி பெண்ணின் ஆடைகளை களைய வைத்துள்ளார். பின்னர் அத்துமீறியுள்ளார். அதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்துக்கொண்டிருக்கிறாராம், தொடர்ந்து அந்த பெண்ணிடம் வீடியோவை காட்டி மிரட்டியே, வீட்டில் இருந்த 11 பவுன் நகைகளை மிரட்டி வாங்கி கொண்டு இதுகுறித்து புகார் அளித்தால் ஆடையில்லாத வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெயியிட்டு விடுவேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளாராம்.

பெண் புகார்

இதுகுறித்து அந்த பெண் நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாய் கணேஷ் தலைமையில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்கள். அதில் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 25 வயதாகும் அஜய்குமார் என்பதை கண்டுபிடித்தனர்.

கோவையில் கைது

அவர் கோவையில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசார் கோவை விமான நிலையத்தில் வைத்து அஜய் குமாரை அதிரடியாக கைது செய்தனர். அப்போது போலீசாரின் பிடியிலிருந்து தப்பி சென்றபோது தவறி விழுந்ததில் அஜய் குமாரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

கடனால் கொள்ளை

கைதான அஜய் குமார் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சில தகவல்கள் தெரியவந்துள்ளது. அதன்படி டிகிரி முடித்த அஜய்குமார் பல்வேறு தொழில்கள் செய்துள்ளாராம். அதி நஷ்டம் ஏற்பட்டு ரூ.9 லட்சம் வரை கடனாகியுள்ளது. அந்த கடனை அடைப்பதற்கு கடந்த சில மாதங்களாக அஜய் குமார் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு வந்தாராம், சம்பவத்தன்று தனது நண்பரிடம் வேலைக்கு இண்டர்வியூ செல்வதாக கூறி பைக்கை வாங்கி விட்டு நசரத்பேட்டைக்கு சென்றுள்ளாராம். பின்னர் பைக்கை ஒரு பகுதியில் நிறுத்தி விட்டு பட்டப்பகலில் வீடுகளை நோட்டம் விட்டுள்ளார். தனியாக இருந்த பெண்ணை மிரட்டி நகைகளை கொள்ளையடித்துள்ளார்' என தெரிவித்தனர்.

அஜய்குமார் மீது வழக்கு

அஜய்குமார் மீது பெண் வன்கொடுமை, கொலை மிரட்டல், திருட்டு, பாலியல் சீண்டல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். வீட்டில் தனியாக இருந்த பெண்ணை ஆடைகளை களைய செய்து இளைஞர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பூந்தமல்லி நசரத்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+