Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

83 லட்சம் கடனுக்கு வட்டி 60 லட்சம்.. கலங்கிய சென்னை பெண்.. வீட்டு அடமான கடன் வாங்குறீங்களா? பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டை அடமானம் வைத்து வங்கியில் கடன் வாங்குறீங்களா.. இந்த விஷயங்கள் தெரியாமல் கடன் வாங்கிவிடாதீர்கள்.. சென்னை பெண் ஒருவர் 83 லட்சம் கடனுக்கு வட்டி மட்டும் ஐந்து ஆண்டுகளில் 60 லட்சம் கட்டி உள்ளார். மேலும் ரூ.83 லட்சம் கட்டச்சொல்லி வங்கி வற்புறுத்தி உள்ளது. வங்கியில் வட்டி சிஸ்டம் எப்படி என்பதை அறியாமல் கடன் வாங்கிவிடாதீர்கள்.

வீட்டை அடமானம் வைத்து வங்கியில் கடன் வாங்கிய பெண்; ரூ.83 லட்சம் கட்டச்சொல்லி வங்கி வற்புறுத்தியதால் உயிரையே விட முடிவு செய்து அதற்கு முயற்சியும் செய்துள்ளார்.. தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்.. அதேநேரம் என்ன நடந்தது? சென்னை பெண் அறியாமல் போனது என்ன? வங்கி கடன் வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன என்பதை பார்ப்போம்.

What happened to the Chennai woman who took a home mortgage loan

சென்னை அரும்பாக்கம், ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், இவருக்கு 40 வயது ஆகிறது. தொழில் அதிபரான ராமகிருஷ்ணன் சொந்தமாக ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி (36). இவர்கள், 2019-ம் ஆண்டு ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கள் வீட்டை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் அடமானம் வைத்து ரூ.83 லட்சம் கடன் பெற்றுள்ளார்கள்.

இதற்காக மாதா மாதம் அசல், வட்டி என ரூ.1 லட்சம் வீதம் 5 வருடங்களாக சுமார் ரூ.60 லட்சம் வரை செலுத்தி உள்ளார்கள் தனலட்சுமி ராமகிருஷ்ணன் தம்பதி. இதற்கிடையில் ராமகிருஷ்ணன் நடத்திய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வங்கியில் அடகு வைத்த வீட்டை மீட்டு விற்று விட முடிவு செய்துள்ளார். இதற்காக வங்கியில் சென்று தம்பதி கேட்டபோது, இதுவரை செலுத்திய ரூ.60 லட்சம் வெறும் வட்டி மட்டுமே, மேலும் ரூ.83 லட்சம் கட்டினால் மட்டுமே வீட்டு பத்திரத்தை ஒப்படைக்க முடியும் என வங்கி நிர்வாகம் கூறியிருக்கிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி தனது வீட்டில் அளவுக்கு அதிமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு உயிரை விட முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுபற்றி அரும்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

பொதுவாக வங்கியில் எந்த கடன் வாங்க போகிறீர்கள் என்றாலும், நீங்கள் வாங்கிய கடனுக்கு முதல் சில ஆண்டுகள் வட்டிதான் கட்டுவீர்கள் அசல் அதன்பிறகு தான் கழியும். உதாரணத்திற்கு நீங்கள் 3.50 லட்சம் 3 ஆண்டுக்கு தனிநபர் கடன் எடுக்கிறீர்கள் என்றால், அந்த கடனுக்கான வட்டியை முதல் ஆண்டிலேயே பெருமளவு எடுத்துவிடுவார்கள்..அதாவது முதல் ஆண்டு முழுவதும் வட்டிதான் வசூலிப்பார்கள். அதன்பிறகு அடுத்த ஆண்டில் மிக குறைந்த அளவு அசல் மற்றும் வட்டி எடுப்பார்கள். கடைசி ஆண்டில் தான் அசல் பணம் முழுமையாக கழியும்..

நீங்கள் வங்கியில் தனிநபர் கடன் மட்டுமல்ல, வீட்டுக்கடன் வாங்கினாலும் இதுதான் நிலைமை. வீட்டுக்கடனை பொறுத்தவரை 5 ஆண்டுகளை கடந்தும் வட்டி தான் கட்டிக்கொண்டிருப்பீர்கள், அசல் மெதுவாகவே கழியும். எனவே நீங்கள் வாங்கிய கடன் தொகையுடன் கட்டிய இஎம்ஐ தொகையை ஒப்பிடாதீர்கள்.. அப்படி ஒப்பிட்டால் தவறாகவே தெரியும். அப்படித்தான் சென்னை பெண்ணுக்கும் நடந்துள்ளது.

எனவே வங்கிகளில், தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கினால் முதல் பாதி ஆண்டுகள் வட்டியில் தான் போகும், கடைசி கட்டத்தில் தான் அசல் கழியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதேநேரம் வங்கியில் முன்கூட்டிய கடனை அடைக்க முயற்சி செய்தாலும் அது உங்களுக்கு நஷ்டத்தில் தான் முடியும். எனவே இதுபற்றி முழுயைமாக அறிய பொருளாதார நிபுணர்களிடம் கேளுங்கள் அல்லது நீங்கள் கடன் வாங்கும் வங்கியில் எல்லா தகவலையும் தெளிவாக கேட்டுவிட்டு முடிவெடுங்கள்.. கடன் தருகிறார்களே என்று வாங்கி அவஸ்தை பட வேண்டாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+