பெருங்களத்தூரில் கடலூர் காதல் ஜோடி.. ஆசையோடு வாழ்க்கையை ஆரம்பிக்க இருந்தவர்கள்.. இப்படி பண்ணாதீங்க
சென்னை: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், பஞ்சநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விக்ரம். சிதம்பரம், காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி. இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் என்ஜினியரிங் படித்தபோது காதலித்து வந்துள்ளனர். படிப்பை முடித்தவர்கள் சென்னையில் வேலைக்காக வந்தனர். அப்படி வந்தவர்கள் பெருங்களத்தூர் பகுதியில் தனித்தனியாக அறை எடுத்து தங்கினார்கள். ஆசையோடு வாழ்க்கையை ஆரம்பிக்க இருந்தவர்களின் வாழ்க்கையை மின்சார ரயில் முடித்துவிட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொறுத்தவரை மின்சார ரயில்கள் தான் உயிர் நாடியாக உள்ளது. சென்னைக்குள் வந்து வேலைக்கு செல்வதற்கு மின்சார ரயில் போக்குவரத்துதான் முக்கியமானதாக உள்ளது. தினசரி செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை உள்ள மக்கள் ரயில்களை நம்பித்தான் வாழ்கிறார்கள்.

ஆனால் எந்த மின்சார ரயில் அவர்களை வாழ வைக்கிறதோ, அதே மின்சார ரயில்களால் அவர்கள் அவ்வப்போது சிக்கலையும் சந்திக்கிறார்கள். ரயில்வே கேட்களால் அவர்கள் அவதிப்படுகிறார்கள். இதேபோல் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் போது விபத்தில் சிக்கி கொள்வதும் அடிக்கடி நடக்கிறது. அப்படித்தான் பெருங்களத்தூர் அருகே ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற காதல் ஜோடி, மின்சார ரயில் மோதி பரிதாபமாக இறந்தனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், பஞ்சநல்லூர் கிராமத்தை சேர்ந்த 21 வயதாகும் விக்ரம் மற்றும் சிதம்பரம், காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 22 வயதாகும் ஆதிலட்சுமி இருவரும் ஒரே கல்லூரியில் என்ஜினியரிங் படித்து வந்துள்ளனர். அப்போதே அவர்கள் இருவரும் காதலித்து வந்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு படிப்பை முடித்துவிட்டு சில மாதத்துக்கு முன்பு இருவரும் சென்னையில் வேலை செய்வதற்காக கிளம்பி வந்திருக்கிறார்கள். பெருங்களத்தூர் பகுதியில் தனித்தனியாக அறை எடுத்து தங்கி, தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்துள்ளார்கள்.
கடந்த பிப்ரவரி 11ம் தேதி அன்று இரவு இவர்கள் இருவரும், வேலைக்கு சென்றுவிட்டு அரசு பஸ் மூலம் பெருங்களத்தூர், இரணியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கினர். அங்கிருந்து தாங்கள் தங்கி இருக்கும் அறைகளுக்கு செல்வதற்காக பேசிக்கொண்டே பெருங்களத்தூர் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளார்கள். அப்போது செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த ஆதிலட்சுமி, விக்ரம் இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து தாம்பரம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் மற்றும் போலீசார் பலியான காதல் ஜோடிகளின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் காதலர்கள் இருவரும் பேசிக்கொண்டே நடந்து சென்றதால் ரயில் வருவதை கவனிக்கவில்லை. கவனக்குறைவால் இருவரும் ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்து விட்டதும், அவர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரயில் தண்டவாளங்களில் எந்த காரணம் கொண்டும் நடந்து செல்ல வேண்டாம். ரயில் தண்டவாளங்களை கடந்து செல்ல ரயில் நிலையத்தில் உள்ள நடை மேம்பாலங்களை பயன்படுத்துவதே சிறந்தது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications