பரங்கிமலை ரயில் நிலையத்தில்.. காதலனுடன் ஓடிப்போக.. அப்பாவிடமே காசு கேட்ட கல்லூரி மாணவி
சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த 19 வயது பெண் கல்லூரியில் படித்து வருகிறார் . இவர் சென்னையில் உள்ள துணிக்கடையில் பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறார்.இவர் பரங்கிமலை ரயில் நிலையத்தில் இறங்கி வீட்டிற்கு வருவது வழக்கம். அந்த பெண்ணை தந்தை அழைத்து செல்ல வந்த போது, ஒரு பையனையும் அழைத்து வந்துள்ளார். அந்த பெண், தந்தையிடம் எங்காவதுபோய் பிழைத்துக் கொள்கிறோம். பணம் கொடு என்று தந்தையிடம் கேட்டுள்ளார். இதை கேட்டு தந்தையும் உறவினர்களும் காதல் ஜோடியை என்ன செய்தார்கள் தெரியுமா? பாருங்கள்.
இன்றைக்கு இளம் பெண்கள், இளைஞர்கள் தங்கள் துணையை தாங்களே தேர்வு செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். பெற்றோர்களை இந்த விஷயத்தில் ஒரு பொருட்டாக கூட மதிப்பு இல்லை. அவர்களே ஒருவரை பார்த்து பிடித்து போய் காதலிக்கிறார்கள். அவர் யார், அவரது உறவினர்கள் யார், அவர் சம்பளம் எவ்வளவு, அவர் குண நலன்கள் என்ன, அவரது குடும்பத்தினர் எப்படி நடந்து கொள்வார்கள் என்று தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு காதல் வலையில் விழுகிறார்கள். முதலில் இதை கேட்கும் பெற்றோர் எதிர்ப்பார்கள். இறுதியில் மகள் காதலித்தவர் யார், என்ன என்று அறிவதற்குள் அவரை கூட்டிக்கொண்டு ஓடிப்போவதில் உறுதியாகி விடுகிறார்கள்.

ஓடிப்போகும் காதல் ஜோடி
தங்களை பிரித்து விடுவார்களோ என்று எண்ணி வீட்டை விட்டு ஓடுகிறார்கள். பல வருடம் வளர்த்த பெற்றோரை ஒரே நாளில் மறந்துவிடுகிறார்கள். ஆனால் அப்படிகாதல் வலை விரிக்கும் ஆண், நல்ல சம்பளம் வாங்கும் நபராகவோ, நல்ல வேலையில் உள்ளவராகவோ, நல்ல குடும்பமாகவோ இருந்தால் பிரச்சனை இல்லை..
ஊர் சுற்றும் நபர்கள்
மாறாக கஞ்சா அடித்துக் கொண்டு, ஊர் சுற்றும் நபராக இருந்தால் அல்லது தந்தையின் செல்வ செழிப்பில், மதுஅருந்திவிட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றும் நபராகவோ அல்லது குற்ற வழக்குகள் உள்ள நபராகவோ இருந்தால் பெரிய சிக்கல் தான் வரும். கொஞ்ச நாள் வாழ்ந்துவிட்டு அந்த இளைஞன் வாழ்க்கை பிடிக்கவில்லை என்று பெற்றோர் பக்கம் சாய்ந்துவிடுகிறார். அல்லது அந்த பெண்ணை விட்டு ஓடிப்போய்விடுகிறார். இறுதியில் பெண்ணை பெற்றவர்கள் அவஸ்தைக்கு உள்ளாகிறார்கள். இது பல பகுதிகளில் நடக்கிறது. சென்னை பரங்கிமலை பகுதியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
கல்லூரி மாணவி
சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தை சேர்ந்த 19 வயது பெண் கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார். கல்லூரியில் படித்தபடி, சென்னையில் உள்ள துணிக்கடையில் பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ரயிலில் பரங்கிமலை ரயில் நிலையம் வரும் மகளை அழைத்து செல்ல அவரது தந்தை வந்துள்ளார்.
பரங்கிமலை ரயில் நிலையம்
ரயிலில் இருந்து இறங்கிய மாணவி, அவருடன் 25 வயதான வாலிபர் ஒருவரையும் அழைத்து வந்திருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் ரயில் நிலையம் அருகே நின்றிருந்த தனது தந்தையிடம் சென்று அந்த வாலிபருக்கு, பணம் தரும்படி கூறினாராம். அதற்கு தந்தை, "அந்த இளைஞர் யார்?. எதற்காக நான் பணம் தரவேண்டும்" என கேட்டிருக்கிறார்.
காதலனுக்கு பணம் கொடு
அதற்கு மாணவி, "அது எனது காதலன். நீங்கள் பணம் தந்தால் நாங்கள் இருவரும் வெளியூருக்கு சென்று பிழைத்துக்கொள்வோம்" என்று கூறியிருக்கிறார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை, தனது நண்பர்கள் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள், காதல் ஜோடியை விரட்டிப்பிடித்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலவேசம் மற்றும் போலீசார், காதல் ஜோடியை மீட்டார்கள்.
குற்ற வழக்கு இருக்கிறது
விசாரணையில் கல்லூரி மாணவி வேலை செய்யும் துணிக்கடைக்கு சென்றபோது அந்த வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் காதலாக மாறியிருக்கிறது. மேலும் அந்த வாலிபர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதை அறிந்த பெற்றோர், தனது மகளான கல்லூரி மாணவியை அழைத்துள்ளனர். ஆனால் அந்த பெண் தனது பெற்றோருடன் செல்ல மாட்டேன். காதலனுடன் தான் செல்வேன் என்று பிடிவாதமாக கூறியிருக்கிறார்.
இளைஞருக்கு அறிவுரை
இதனிடையே திருமணம் ஆகாததால் கல்லூரி மாணவியை பெண்கள் பாதுகாப்பு அதிகாரிகள் முன் ஆஜர்படுத்தி மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அந்த இளைஞருக்கு பெற்றோர் யாரும் இல்லாததால் உறவினர்களை அழைத்து வந்து பெண்கள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் முறையிட்டு அந்த பெண்ணை திருமணம் செய்வது பற்றி பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை கூறி எழுதி வாங்கி அனுப்பி வைத்திருக்கிறார்கள்..
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications