Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாமியார் வீடு டூ புழல் சிறை .. சென்னையில் முதலிரவுக்கு மறுத்த புதுப்பெண்.. மாப்பிள்ளைக்கு ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த அகஸ்டின் ஜோஸ்வா என்பவருக்கும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த நவம்பர் 23ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 24ம் தேதி முதலிரவு நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அப்போது மணமகன், தாம்பத்திய உறவுக்கு உடனே ஆசைப்பட்டாராம். ஆனால் அந்த பெண் உடனே உறவுக்கு மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அகஸ்டின் ஜோஸ்வா சுத்தியலால் சரமாரியாக தாக்கினாராம். இதில் காயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுமாப்பிள்ளை சிறையில் கம்பி எண்ணுகிறார்.

திருமணத்திற்கு காத்திருக்கும் மணமகன்கள், புதுமாப்பிள்ளை ஆன அன்றே முதலிரவு நடக்க விரும்புகிறார்கள்.அதேநேரம் புதுப்பெண்களை பொறுத்தவரை பொறுமையாக இருவருக்கும் பிடித்த விஷயங்களை பேசி, மனம் விட்டு பேச விரும்புகிறார்கள். அதன் பின்னரே ஆரம்பிக்க விரும்புகிறார்கள். ஆனால் பொறுமை இல்லாமல் சிலர் ஆக்ரோஷமாக மாறுகிறார்கள். சென்னையில் அப்படித்தான் ஒருசம்பவம் நடந்துள்ளது. புதுமாப்பிள்ளை சிறையிலும், மணப்பெண் மருத்துவமனையிலும் இருக்கிறார்கள்.

What happened to the new girl who refused on the first night in Chennai

சென்னை புரசைவாக்கம் பார்த்தசாரதி தெருவை சேர்ந்த 33 வயதாகும் அகஸ்டின் ஜோஸ்வா என்பவருக்கும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகப்பா நகரைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் கடந்த 23-ந்தேதி அன்று கல்யாணம் நடந்தது. திருமண தகவல் மையம் மூலமாக இருவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது.

திருமணம் முடிந்து புதுப்பெண் கணவர் வீட்டிற்கு பல கனவுகளுடன் வந்தார். 24-ந்தேதி அன்று முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அறைக்குள் நுழைந்தவுடன் புதுமாப்பிள்ளை அகஸ்டின் ஜோஸ்வா தாம்பத்திய உறவுக்கு உடனே ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், புதுப்பெண் உறவுக்கு மறுத்தாராம். 'முதல் 2 நாட்கள் இருவரும் மனம் விட்டு பேசலாம். அதன்பிறகு உறவை தொடங்கலாம்' என்று புதுப்பெண் தெரிவித்தாராம். ஆனால், அகஸ்டின் ஜோஸ்வா அதற்கு சம்மதிக்கவில்லை. உடனடியாக உறவை தொடங்க வேண்டும் என்று நோக்கத்துடன் இருந்தாராம்.

ஆனால் மனம் விட்டு பேசாமல், புதுப்பெண் தற்போது உறவு வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தாராம். இதனால், ஆத்திரம் அடைந்த அகஸ்டின் ஜோஸ்வா அறையில் இருந்த சுத்தியலை எடுத்து புதுப்பெண்ணை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. புதுப்பெண்ணின் கைகள், கால்கள் மற்றும் நெற்றியிலும் காயம் ஏற்பட்டது. முதலிரவு அறைக்குள் கூச்சல் போட்டபடியே புதுப்பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அகஸ்டின் ஜோஸ்வா, புதுப்பெண்ணை அறைக்குள் போட்டு வெளியில் பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டாராம்.

மயக்கமடைந்த புதுப்பெண் இரவு முழுவதும் அறையிலேயே கிடந்தாராம். மறுநாள் காலையில் தான் உறவினர்கள் முதலிரவு அறையை திறந்து பெண்ணை மீட்டிருக்கிறார்கள். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் புதுப்பெண் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் ராஜூ ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். புதுமாப்பிள்ளை அகஸ்டின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

நேற்று புதுப்பெண் மீது தாக்குதல் நடத்திய சுத்தியலோடு அகஸ்டின் ஜோஸ்வா வேப்பேரி காவல் நிலையத்துக்கு வந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்தனர். இதனிடையே புதுப்பெண் அளித்த வாக்குமூலத்தில்,
திருமண தகவல் மையம் மூலம் வரதட்சணையாக நகைகள் எதுவும் வேண்டாம் என்று அகஸ்டின் கூறினார். நானும் அவர் நல்ல கணவராக இருப்பார் என்று திருமணம் செய்தேன்.

ஆனால் அகஸ்டின் ஜோஸ்வா வீட்டிற்கு வந்தவுடன் தான் அவர் ஏற்கனவே 2 பெண்களோடு தொடர்பில் இருந்ததாக எனக்கு தெரியவந்தது. ஆனால், அதை பொருட்படுத்தாமல் நான் அவரோடு நல்லபடியாக வாழ வேண்டும் என்றே நினைத்தேன். அவர் என்னிடம் மனம் விட்டு பேசாமல், என்னிடம் அப்படி நடந்து கொண்டார். நல்ல வேளையாக நான் உயிர் பிழைத்தேன். இனிமேல் அவரோடு வாழமுடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளேன்" இவ்வாறு கூறியிருக்கிறாராம் புதுப்பெண்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+