சென்னையில் படிக்க வந்த இளைஞருக்கு கொட்டிய பணமழை.. தடுமாறிய புத்தியால்... வரவேற்ற புழல் சிறை
சென்னை: ஆந்திர மாநிலம் பழைய குண்டூர் பகுதியைச் சேர்ந்த 30 வயதாகும் முதாசீர், சென்னை செங்குன்றத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்த காலத்தில், குறுக்கு வழியில் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அதற்காக சேரக்கூடாத இடத்தில் சேர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் செய்த வேலையால் இப்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார். கோடீஸ்வர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டவர் திசை மாறி ஜெயிலில் இருக்கிறார்.
45 அல்லது 50 வயதில் தான் சொந்த வீடு, கார் என்று வாழ்க்கையில் பலர் செட்டில் ஆகும் என்கிற நிலையில், இன்றைய இளைஞர்கள் குறுக்கு வழியில் கோடீஸ்வரராக ஆசைப்படுகிறார்கள். அதாவது 25 வயது, 30 வயதிலேயே சொந்த வீடு, வாரம் வாரம் பார்டி, மாதம் ஒரு முறை மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா, அவ்வப்போது வெளிநாடு சுற்றுலா,சொந்தமாக கார், பைக், ஆடம்பரமான திருமணம், சொகுசு உணவகங்களில் சாப்பாடு, எந்த கவலையும் இல்லாத வாழ்க்கையை விரும்புகிறார்கள். இதற்கு அதிகமாக பணம் சம்பாதிக்க, குறுக்கு வழியை நாடுகிறார்கள்.

கொள்ளை அடிப்பது, போதைப்பொருள் விற்பது, கஞ்சா விற்பது, நம்ப வைத்து ஏமாற்றுவது, அதிக பணம் கிடைக்கும் என்று ஆசையை தூண்டி பணத்தை பறிப்பது , வசதியான பெண்களை நம்ப வைத்து ஏமாற்றி பணம் பறிப்பது என்று சுகபோகமாக வாழ திட்டமிடுகிறார்கள். அதை வெற்றிகரமாக செயல்படுத்தவும் செய்கிறார்கள். ஆனால் கடைசியில் உண்மை அம்பலத்திற்கு வருமாறு எல்லாமே பறிபோவதுடன், சிறையிலேயே எதிர்காலத்தை திட்டமிடும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது எதார்த்தமாக இப்போது நடக்கிறது. ஆந்திராவில் இருந்து சென்னைக்கு படிக்க வந்த இளைஞரும் குறுக்கு வழியில் முன்னேற ஆசைப்பட்டு வாழ்க்கையை தொலைத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் பழைய குண்டூர் பகுதியைச் சேர்ந்த 30 வயதாகும் முதாசீர் என்பவர், கடந்த ஆண்டு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பதுக்கி விற்பனை செய்து வந்துள்ளார். இது தொடர்பாக அவரது கூட்டாளிகளான மகேஷ், பரூக், மிதுன், காதர் மொய்தீன், தீபன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் முதாசீர், போலீசிடம் சிக்காமல் தலைமறைவாகிவிட்டார். முதாசீரை சென்னை வடக்கு கடற்கரை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் பதுங்கி இருந்த முதாசீரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்த போது தான், ஆயிரம் விளக்கு, நந்தம்பாக்கம், எழும்பூர் போலீஸ் நிலையங்களில் போதைப்பொருள் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
ஆந்திர மாநிலம் பழைய குண்டூர் பகுதியைச் சேர்ந்த முதாசீர் , செங்குன்றத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது குறுக்கு வழியில் கோடீஸ்வரர் ஆக விரும்பினார். அப்போது சேரக்கூடா நபர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் விற்பனையில் இறங்கினார். ஒருக்கட்டத்தில் முதாசீர், போதைப்பொருள் ஏஜெண்டாக மாறியுள்ளார்.
வடமாநில போதைப்பொருள் கும்பலிடமிருந்து மெத்தபெட்டமைன் போதைப்பொருளை வாங்கி ஓட்டலில் நடக்கும் விருந்து நிகழ்ச்சி, இன்ஜினியர்கள் தங்கி இருக்கும் இடங்களை குறிவைத்து விற்க தொடங்கி உள்ளார் . இதில் பணமழை கொட்டியதால், கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டு, சிறு வியாபாரிகள் மூலம் ஒரு கிராம் பாக்கெட் போதைப்பொருளை விற்று கொடுத்தால் கமிஷன் கொடுத்து வந்துள்ளார். இறுதியில் கைதாகி புழல் சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.
-
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications