இஸ்லாமியர்களுக்கு இதுவரை திமுக அரசு செய்தது என்ன? இஃப்தார் விழாவில் லிஸ்ட் போட்ட ஸ்டாலின்!
சென்னை: இஸ்லாமியர்களுக்கு இதுவரை திமுக அரசு செய்தது என்ன என்பது குறித்த பட்டியலை சென்னையில் நடைபெற்ற இஃப்தார் விழாவில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இஸ்லாமியர்கள் வேறு, தான் வேறு என்று என்றுமே கருணாநிதி நினைத்தது கிடையாது என ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் அந்த விழாவில் ஸ்டாலின் போட்ட லிஸ்ட் வருமாறு;
1. முதல்முறை ஆட்சிக்கு வந்ததுமே மிலாதுநபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் கலைஞர். அதைக்கூட அதற்குப் பிறகு வந்த ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி அதை ரத்து செய்தது. மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன், ரத்து செய்ததை ரத்து செய்து மீண்டும் அரசாணை வெளியிட்டு மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தார்.

2. உருது பேசும் முஸ்லீம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது தலைவர் கலைஞர்.
3. சிறுபான்மையினர் நல ஆணையத்தை தொடங்கியவரும் கலைஞர்
4. வக்பு வாரிய சொத்துக்களைப் பராமரிக்க முதன்முதலாக மானியம் வழங்கியவரும் தலைவர் கலைஞர்.
5. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தொடங்கியவரும்கலைஞர் தான்.
6. உருது அகாடமியைத் தொடங்கியவர் கலைஞர்.
7. காயிதேமில்லத் மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கி இடம் ஒதுக்கியதும் கலைஞர்.
8. பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு 3.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு கொடுத்தவரும் கலைஞர்.
9. காயிதேமில்லத் மகளிர் கல்லூரியை உருவாக்கியவர் கலைஞர்.
10. காயிதேமில்லத் ஆண்கள் கல்லூரிக்கு இடம் கொடுத்தவர் கலைஞர்.
- இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இஸ்லாமியர்கள் வேறு, தான் வேறு என்று கலைஞர் என்றைக்கு நினைத்ததில்லை. இஸ்லாமிய சமூகத்தவர் நன்றி தெரிவிக்கும் விழா நடத்திய போது, அப்போது கலைஞர் பேசுகிறபோது சொன்னார், 'எனக்கு நன்றி சொல்லி பேசினார்கள். எனக்கு நன்றி சொல்லி உங்களிடம் இருந்து என்னைப் பிரித்துவிடாதீர்கள்' என்று சொன்னவர் கலைஞர்.
* இந்த ஆட்சி அமைந்தவுடனே சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது.
* சிறுபான்மையினர் விடுதியில் பண்டிகைகளுக்குச் சிறப்பு உணவு தரப்படுகிறது.
* உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியங்களில் பதிவுசெய்துள்ள உறுப்பினர்களுக்கு உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
* சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் கட்டப்பட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தேனி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் முஸ்லீம் உதவி சங்கம் துவங்க ஆணையிடப்பட்டுள்ளது.
* உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளன.
* உலமாக்கள் மற்றும் பணியாளர் வாரிய உறுப்பினர்களுக்கு சைக்கிள் வழங்கப்படுகிறது.
* தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கான நிர்வாக மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
* 4 வக்பு சரக அலுவலகங்களுக்குச் சொந்தக் கட்டடம் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
* பள்ளிவாசல்கள், தர்க்காக்கள், வக்பு நிறுவனங்கள் பழுது பார்ப்பதற்காக ஆண்டு தோறும் வழங்கப்படும் மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
* வக்பு சொத்துகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- இவை அனைத்தும் 2021-இல் நாம் ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு செய்து கொடுக்கப்பட்டிருப்பவை. இதெல்லாம் நீங்கள் கோரிக்கை வைக்காமலேயே செய்து கொடுக்கப்பட்டவை, அதுதான் முக்கியம்.












Click it and Unblock the Notifications