ஏஐ இப்போதான் வர ஆரம்பிச்சது.. அதுக்குள்ள இது என்ன புது தலைவலி.. மக்களிடம் பரவும் புது நோய்? ஷாக்!
சென்னை: ஏஐ காரணமாக மக்கள் இடையே புது வித அச்சம் ஒன்று நோய் போல பரவிக்கொண்டு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுக்க தற்போது ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் ஏஐ ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. நாம் தினசரி பயன்படுத்தும் ஒவ்வொரு சேவைகளிலும் ஏஐ பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதிலும் கடந்த சில மாதங்களில் ஏஐ இன்னும் வேகமாக வளர தொடங்கிவிட்டது. உதாரணமாக உலகம் முழுக்க சாட் ஜிபிடி தற்போது பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறது. ஏஐ தொழில்நுட்பம் கொண்ட தேடுபொறி நிறுவனமான இது நாம் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளிக்கும். அதோடு ஏற்கனவே அளிக்கப்படும் பதில்களை வைத்து.. அது தன்னை தானே மெருகேற்றிக்கொள்ளும்.
கூகுள் போல் அல்காரிதம் அடிப்படையில் இதை ஏமாற்ற முடியாது. மாறாக இது மெய்நிகர் சிந்திக்கும் திறன் கொண்டது. அதாவது குறிப்பிட்ட எல்லை வரை சுயமாக சிந்தித்து இது பதில்களை வழங்கும். உலகம் முழுக்க உச்சத்தில் இருக்கும் ஏஐ தொழில்நுட்பத்தின் புதிய பாய்ச்சலாக இந்த சாட் ஜிபிடி பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் உலகில் பல பெரிய நிறுவனங்களில் வேலை இழப்புகள் ஏற்பட்டன. இந்த வேலை இழப்புகளுக்கு ஏஐ ஆதிக்கமும் ஒரு காரணமாக கூறப்பட்டது. பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் இதை காரணமாக சொல்லி பலரை வேலையில் இருந்து தூக்கின.
உதாரணமாக சாட் ஜிபிடியை எடுத்துக்கொள்வோம். ஓபன் ஏஐ நிறுவனத்தின் மூலம் இந்த சாட் ஜிபிடி ஏஐ உருவாக்கப்பட்டது. ஓபன் ஏஐ என்பது வருமானம் சாராத நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தை உலகின் டாப் பணக்காரர்கள், அறிவியலாளர்கள் இணைந்து உருவாக்கினார்கள். இந்த ஓபன் ஏஐ தற்போது உலகின் 5வது பெரிய சூப்பர் கணினியில்தான் இயங்கிக்கொண்டு இருக்கிறது.
அமெரிக்காவின் சான் பிரான்சிசுகோவில் இந்த நிறுவனம் 2015ல் தொடங்கப்பட்டது. சாம் ஆல்ட்மன், ரீட் ஹாஃப்மேன், ஜெசிகா லிவிங்ஸ்டன், எலான் மஸ்க், இல்யா சுட்ஸ்கேவர், பீட்டர் தியேல் ஆகியோர் இணைந்து இந்த நிறுவனத்தை உருவாக்கினார்கள்.
இந்த ஏஐ மனிதர்களின் பல வேலைகளை செய்ய கூடியது. முக்கியமாக மனிதர்கள் பல நாள் எழுதும் கோடிங்கை இது ஒரு நாளில் எழுதிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் வரும் காலங்களில் பலர் ஐடி நிறுவனங்களில் வேலை இழக்கும் அபாயம் ஏற்படலாம். ஏஐ மூலம் பலர் தங்களின் வேலை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.
முக்கியமாக 30 வயதுகளில் ஐடி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலருக்கு இந்த அச்சம் ஏற்பட்டு உள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு வித நோய்க்கு சமம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதாவது ஏஐ மூலம் வேலை போய்விடும் என்று அஞ்சுவதற்கு பெயர் ஏஐ ஆங்க்சைட்டி (anxiety) என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

சமீபத்தில் கோல்ட்மேன் சாக்ஸ் என்று பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் ஒரு AI மூலம் 300 மில்லியன் பேர் முழுநேரம் செய்யும் வேலைகளை எளிதாக செய்து விட முடியும். அவர்களின் வேலைகளை இது பறிக்க போகிறது என்று கூறி இருந்தார்.
இப்படி ஏஐக்கள் மிக வேகமாக வளர்ந்து வருவதால் ஐடி தொழிலாளர்கள் இடையே அச்சம் அதிகரித்து உள்ளது. அதைத்தான் ஏஐ ஆங்க்சைட்டி (anxiety) என்கிறோம். விரைவில் இது பலருக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது ஒரு ஆரோக்கிய பிரச்சனையாக மாறும் வாய்ப்பு உள்ளது என்று கூறி உள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications