ஒரே கல்லு.. 3 மாங்காய்.. எதிர்கட்சிகளை தவிடு பொடியாக்க மாஸ்டர் பிளான்.. ஸ்டாலின் சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆளும் திமுக இப்போதே செய்ய தொடங்கிவிட்டது. மற்ற கட்சிகளுக்கு முன்பாக வேகமாக தேர்தல் பணிகளுக்கான காய்களை திமுக நகர்த்தி வருகிறது. தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 20 மாதங்கள் உள்ளன.

20 மாதங்கள் தேர்தலுக்கு இருந்தாலும் திமுக வேகமாக மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.

mk stalin dmk udhayanidhi stalin politics

இக்குழுவில், திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இளைஞரணி செயலாளராக உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்ற பேச்சுகள் எழுந்த நிலையில், அடுத்த சட்டப்பேரவை தேர்தலை ஒருங்கிணைக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.

அவசர மீட்டிங்: 2026 சட்டசபை தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கட்சியில் அமைப்பு நீதியாக சீரமைப்பை மேற்கொள்வது பற்றி ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்த முறை உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு உள்ளது. கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்க போவது உதயநிதி ஸ்டாலின்தான் என்பது இந்த மீட்டிங் மூலம் தெரிய வந்துள்ளது.

3 பிளான்கள்: 2024 சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆளும் திமுக இப்போதே செய்ய தொடங்கிவிட்டது. மற்ற கட்சிகளுக்கு முன்பாக வேகமாக தேர்தல் பணிகளுக்கான காய்களை திமுக நகர்த்தி வருகிறது. தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 20 மாதங்கள் உள்ளன.

பிளான் 1: கூட்டணியை ஒருங்கிணைப்பது. திமுக கூட்டணியை இதேபோல் காத்து வைக்க முடிவு செய்துள்ளதாம். விசிக உடன் நட்பை கடைபிடிக்கும். திருமாவளவன் இது அனைத்திலும் உறுதியாக இருக்கிறாராம். திமுக மீது சில விஷயங்களில் அவருக்கு விமர்சனங்கள் இருக்கிறதாம். என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் கூட.. என்ன நடந்தாலும் கூட்டணியை உடைக்க விருப்பம் இல்லை என்பதில் திருமா உறுதியாக இருக்கிறாராம்.

இந்த கூட்டணி வெற்றி கூட்டணி. இதை ஏன் உடைக்க வேண்டும். இந்த கூட்டணியில் இருப்பதே சிறப்பானது. முக்கியமாக நாங்கள் தனி சின்னத்திலேயே வலிமையாக இருக்கிறோம். தனி சின்னத்திலேயே வென்று உள்ளோம். அப்படி இருக்க ஏன் கூட்டணியை உடைக்க வேண்டும் என்று திருமா நினைக்கிறாராம். ஆனால் காங்கிரஸ் இன்னும் அந்த முடிவில் இல்லை.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்கிறதாம். கூட்டணி ஆட்சிதான் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறதாம். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறதாம். இதை சமாளிப்பது பற்றியும் ஆலோசனைகள் நடந்து உள்ளதாம்.

பிளான் 2: இரண்டாவதாக எதிர்கட்சிகளை தவிடுபொடியாக்கும் வகையில் பென் அமைப்பு மூலம் பல சர்வேக்களை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

தேர்தலில் முடிவுகளை மாற்றும் பகுதிகள், சாதி ரீதியிலான வாக்குகள் என்று பல விஷயங்களை இந்த சர்வே மூலம் எடுக்க உள்ளனராம். தேர்தல் களத்தில் பல்வேறு வியூகங்களை செயல்படுத்த ரகசியமாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது திமுக அரசு. உளவுத்துறை கொடுக்கும் தகவல்களின் அடிப்படையிலும், பென் என்ற அமைப்பின் மூலம் கொடுக்கப்படும் ஆலோசனைகள் அடிப்படையிலும் புது புது வியூகங்கள் திட்டமிடப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் திமுக எதிர்பார்க்காத பிரச்சனையாக, அழுத்தமாக பல விஷயங்கள் தமிழ்நாடு அரசியலில் உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்றை கேட்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.

அதன்படி கள்ளக்குறிச்சி விவகாரம் மக்கள் இடையே எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது, கள்ளச்சாராய விவகாரத்தில் இன்னும் சிக்காதவர்கள் யார் யார்? அரசுக்கு எதிரான மனநிலை உள்ளதா? எடப்பாடி பழனிசாமியை மக்கள் எப்படி பார்க்கின்றனர்? விஜய்யின் அரசியலுக்கு ஆதரவு எப்படி உள்ளது களத்தில் என்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சில ரிப்போர்ட்டுகளை கேட்டு உள்ளாராம்.

பிளான் 3: கடைசியாக திமுக கூட்டணி 200+ இடங்கள், திமுக கூட்டணி 170+ இடங்களை வெல்வது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொள்ள ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். இதற்காக கட்சியில் அமைப்பு ரீதியிலான மாற்றங்களை செய்வது பற்றியும் ஸ்டாலின் பேசி உள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+