நான் வந்த அப்பறம்தான்.. சூசகமாக சொன்ன முருகன்.. அப்போ மீனா? தெலுங்கானா சம்பவத்தை பாருங்க! குழப்புதே
சென்னை: பொதுவாக பாஜக கட்சியை தேசிய அளவிலும், மாநில அளவிலும் கணிக்கவே முடியாது. எப்போது யாரை எந்த பதவிக்கு கொண்டு வருவார்கள் என்றெல்லாம் கணிக்க முடியாது. இந்த நிலையில்தான் சமீபத்தில் பாஜகவில் நடந்த சில மாற்றங்கள் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு மாநிலங்களிலும், தேசிய அளவிலும் பாஜக கடுமையான மாற்றங்களை சந்தித்து வருகிறது. பாஜகவின் பல்வேறு பதவிகளுக்கு தேர்தல்களும் நடக்க தொடங்கி உள்ளன. விரைவில் பாஜகவிற்கு புதிய தேசிய தலைவர் தேர்வு செய்யப்படலாம். அதாவது தற்போது தலைவராக உள்ள ஜே பி நட்டா விரைவில் மாற்றப்பட உள்ளார்.

அதோடு இல்லாமல் பாஜகவிற்கு புதிய பொதுச்செயலாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் அண்ணாமலை பெயரும் அடிபட்டு வருகிறது. பாஜக தேசிய பொதுச்செயலாளர்களில் அண்ணாமலையும் ஒருவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மாநில அளவில் பாஜகவில் நடக்கும் மாற்றம்
தேசிய அளவில் மட்டுமன்றி பல மாநிலங்கள் அளவிலும் பாஜகவில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. உதாரணமாக டெல்லி உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பாஜக டி. ராஜா சிங் கட்சியில் இருந்தே விலகி உள்ளார். ஹைதராபாத் கோஷமஹால் சட்டமன்றத் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ டி. ராஜா சிங் பாஜகவின் தெலுங்கானா மாநில தலைவர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.சி.,யுமான என். ராமச்சந்தர் ராவ் தெலங்கானா மாநில பாஜக தலைவராக தேர்வாக வாய்ப்புள்ளதாக வந்த தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜா சிங் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங், தெலங்கானா மாநில பாஜக தலைவராக என்.ராமச்சந்தர் ராவ் நியமிக்கப்படுவதை எதிர்த்து தனது ராஜினாமா கடிதத்தை மாநில பாஜக தலைவர் மற்றும் மத்திய நிலக்கரி துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டிக்கு அனுப்பியுள்ளார். கட்சி தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய மாநில கட்சி அலுவலகத்திற்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்தார். மேலும், எம்.எல்.ஏ.,வாக தன்னை தகுதி நீக்கம் செய்யுமாறும் கடிதம் எழுதி உள்ளார்.
தெலுங்கானா என்று மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் இதேபோன்ற அரசியல் மாற்றங்கள் பாஜகவில் நடந்து கொண்டு இருக்கிறது.
பாஜகவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்
இதை குறிப்பிட்டு பேசும் பாஜக நிர்வாகிகள் சிலர் , பாஜகவில் என்ன நடக்கும் என்று உறுதியாக எங்களால் கூட சொல்ல முடியாது. ராஜா சிங் கட்சிக்காக பல வழக்குகளை எதிர்கொண்ட நிர்வாகி. கட்சியின் முக்கியமான எம்எல்ஏ. தெலுங்கானாவில் அவர் கட்சியின் முகம். அவரே கட்சியை விட்டு போவதாக கூறிவிட்டார்.
அதோடு நிற்காமல்.. தமிழ்நாட்டிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை போன்றவர்கள் பதவி போன பின் வேறு பதவி, எம்பி போஸ்ட் கிடைக்காமல் உள்ளனர். இதனால் பாஜகவில் எப்போது என்ன நடக்கும் என்றே கணிக்க முடியவில்லை. சிலரை திடீரென எடுப்பார்கள். பதவி கொடுப்பார்கள். எங்கிருந்து என்றே தெரியாமல் ஒருவரை கொண்டு வந்து வளர்த்துவிடுவார்கள். சிலரை வீட்டிற்கும் அனுப்புவார்கள்.
அதனால் எதையும் கணிக்க முடியாது. நடிகை மீனா போன்றவர்களுக்கு பதவி வழங்கப்படுமா.. மத்திய இணை அமைச்சர் ஆவாரா என்பதையும் இதே காரணத்திற்காக கணிக்க முடியாத சூழல் உள்ளது. மீனா விவகாரத்தில் பாஜக தேசிய தலைமை எப்போது என்ன முடிவை எடுக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாத சூழல் உள்ளது என்கின்றனர்.
பாஜகவில் மீனா
மீனா விரைவில் பாஜகவில் இணையலாம் என்றும், கட்சியில் அவருக்கு முக்கியப் பதவி அளிக்கப்படலாம் என்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. இந்தச் செய்தி பாஜகவின் மூத்த தலைவர்கள் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் மீனா குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரைச் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பின்னரே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற செய்திகள் வெளியாகத் தொடங்கின. சமீபத்தில் மாநில அளவிலான 28 பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்றன. அப்போதைய ஆலோசனையின்போது, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் ஆதரவாளர்களும் நியமனப் பட்டியலில் இருக்குமாறு நயினார் நாகேந்திரனுக்கு அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நியமனங்களில் நடிகை மீனா, குஷ்பு மற்றும் இன்னும் இரண்டு பேருக்குப் பொறுப்புகள் வழங்கப்பட இருப்பதாகக் கூறப்பட்டது. பாஜகவில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இந்தத் தகவலால் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மீனாவின் நியமனம் குறித்து கட்சியில் பலரும் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிகிறது. "அவருக்கு மட்டும் எப்படி உடனே பதவி வழங்கலாம்? அதுவும் அமைச்சர் பதவியா? அவர் அடிப்படை உறுப்பினர் கூட இல்லையே. இதை எப்படி அனுமதிப்பது?" என்ற கேள்விகளை மூத்த நிர்வாகிகள் எழுப்புவதாகக் கூறப்படுகிறது. நடிகை மீனாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் பாஜகவின் மூத்த தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நயினார் நாகேந்திரன் மீனா
பாஜகவில் மீனாவிற்கு பதவி கிடைக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது நயினார் நாகேந்திரன், ங்கள் சொல்கின்ற விஷயத்திலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. பாஜகவில் நிறைய பேர் தற்போது இணைந்து வருகிறார்கள். அப்படி வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம். நான் வந்த பிணம்பே கட்சியில் பலர் இணைந்தனர்.
நான் வந்த பின்பே.. என் சந்திப்பிற்கு பிறகு சரத்குமார், அவரின் கட்சியை கலைத்து விட்டு பாஜகவில் இணைந்தார். குஷ்பு உடன் நடந்த சந்திப்பிற்கு பின்னர், அவர் பாஜகவில் இணைந்தார். நடிகை மீனா அதேபோல் பாஜகவுக்கு வந்தால் வரவேற்கத்தக்கது, என்று நயினார் நாகேந்திரனும் சூசமாக கூறி உள்ளார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications