வேளச்சேரியில்..மூட்டையில் "துள்ளிய" உயிர்கள்.. கிட்ட போய் பார்த்து உறைந்த ஆபீசர்ஸ்.. நம்ம சென்னையில்
சென்னை: சென்னை வேளச்சேரியில் நடந்த சம்பவத்தை பார்த்து தமிழக மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.. என்ன நடந்தது?
கடந்த வருடம் தலைநகரம் சென்னையில் ஒரு பகீர் சம்பவம் நடந்தது.. சென்னையின் சில பிரதான இடங்களில், பூனைக்கறி வியாபாரம் கொடிகட்டி பறந்திருக்கிறது.. அதாவது, பூனைகளை கொன்று, அதன் தோலை உரித்து, ஆட்டுக்கறியுடன் கலந்து விற்றுள்ளார்கள்.

நரிக்குறவர்களிடமிருந்து எலும்பில்லா பூனைக்கறியை விலை கொடுத்து வாங்கப்பட்டு, பிராட்வே, அயனாவரம், சவுகார்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் ஹோட்டல் மற்றும் சாலையோர கடைகளில் குறைந்த விலைக்கு, சாலையோர வியாபாரிகளுக்கு இந்த பூனை இறைச்சியை விற்றுள்ளனர்..
பூனைக்கறி: அந்த பூனைக்கறியை, மட்டனுடன் மிக்ஸ் செய்து கோலா உருண்டை, மட்டன் பிரியாணி போன்றவைகளை தயாரித்து கடைகளில் விற்றுள்ளனர். அதேபோல, இரவு நேரங்களில் அப்பார்ட்மென்ட் பகுதிகளின் அருகில் சுற்றித்திரியும் பூனைகளையும் இப்படி பிடித்து வந்து கறியாக விற்றுவிடுவார்களாம்.
அனைத்து ஓட்டல்களிலும் இப்படி நடக்கவில்லை.. ஒருசில நடைபாதை ஓட்டல்களில் இப்படி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.. உடனே உணவுத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் இறங்கி, பூனைக்கறி விற்ற 2 பேரை கைது செய்திருந்தனர்.. சென்னையில் பூனைக்கறி விற்பது மிகப்பெரிய அதிர்ச்சியை அப்போது ஏற்படுத்தியிருந்தது.
இப்படிப்பட்ட சூழலில், சென்னையில் இன்னொரு பகீர் கிளம்பி உள்ளது.. சென்னையைச் சேர்ந்தவர் முரளீதரன். இவர் மத்திய விலங்குகள் நல வாரத்திற்கு புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார்.
புகார் மனு: அதில், "வேளச்சேரியில் உள்ள புளுகிராஸ் அமைப்பிற்கு தினசரி நூற்றுக்கணக்கான நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள் கொண்டு வரப்படுகின்றன. அவற்றுக்கு முறையான மருத்துவம் பார்க்காததால், இறந்து போகின்றன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார். முரளீதரன் போலவே மேலும் சிலரும், நாய், பூனை இறந்துபோனது குறித்த புகார்கள் வந்தவண்ணம் இருந்ததால், சென்னை வேளச்சேரி புளுகிராஸ் அமைப்பில் அதிரடி ஆய்வு நேற்று மேற்கொள்ளப்பட்டது..
காஞ்சிபுரம் மாவட்ட விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட குழுவினர் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். அப்போது அங்கு கண்ட காட்சிகளை கண்டு அதிகாரிகள் வெலவெலத்து போய்விட்டார்கள்.
துர்நாற்றம்: உள்ளே நுழைந்ததுமே, அந்த இடம் முழுவதுமே கடும் துர்நாற்றம் வீசியிருக்கிறது.. 21 நாய்க்குட்டிகள், 15 பூனைக்குட்டிகள் இறந்த நிலையில் கிடப்பதை பார்த்து அதிகாரிகளுக்கு தூக்கிவாரிப்போட்டுள்ளது.. அதேபோல அங்கிருந்த மூட்டைகளில், உயிருள்ள நாய் குட்டிகள் அடைத்து வைத்திருப்பதை பார்த்து பதறிப்போய்விட்டனர். விலங்குகளுக்கும், பறவைகளுக்கு உரிய பராமரிப்பும் அளிக்கப்படாமல் இருப்பதை அறிந்து அதிர்ந்து போனார்கள் அதிகாரிகள்.
இதில் கொடுமை என்னவென்றால், நாய்க்குட்டிகளுக்கு வைத்திருந்த உணவுகளை எலிகள் சாப்பிட்டு கொண்டிருந்தனவாம்.. அதேபோல, கெட்டுப்போன பால், பருப்பு, சுகாதாரமற்ற உணவுகளை, இத்தனை நாளாக அந்த விலங்குகளுக்கு சாப்பாடாக போட்டு வந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்..
பறவைகள்: இந்த இடத்துக்கு தினசரி நூற்றுக்கணக்கான விலங்குகள் பறவைகள் கொண்டு வரப்படுமாம்.. அப்படி கொண்டுவரப்படும் விலங்குகளிலும், பறவைகளிலும் 50-க்கும் மேற்பட்டவை உடனே இறந்துவிடுவாம்.. இறந்துவிடும் பறவைகள், விலங்குகளை அங்கேயே தீ வைத்து எரித்திருக்கிறார்கள்.. இதெல்லாம் ஆவணங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
விலங்குகளும், பறவைகளும் காரணமின்றி இறந்துவிழும்போது, கருணைக்கொலைகளை செய்தும், அந்த விலங்குகளை கொன்றுள்ளது அம்பலமாகியிருக்கிறது.. ஒவ்வொரு மாதமும் 20க்கும் மேற்பட்ட விலங்குகள் கருணைக்கொலை செய்திருக்கிறார்கள்..
விலங்குகள்: விலங்குகளுக்கு நோய் வந்துவிட்டால், அதற்கும் உரிய சிகிச்சை தராமல் இருந்திருக்கிறார்கள்.. 500க்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகளுக்கு வெறும் 4 டாக்டர்கள்தான் பணியில் இருந்திருக்கிறார்கள். எந்த ஆவணங்களையும் முறையாக பராமரிக்காமலும் இருந்திருக்கிறார்கள்.. விலங்குகளின் குடும்ப கட்டுப்பாட்டு ஆவணமும் முறையாக பராமரிக்கப்படவில்லையாம்.. இன்னும் இதுபோல ஏகப்பட்ட விதிமீறல்கள் நடந்துள்ளதை அதிகாரிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் சொல்லும்போது, வேளச்சேரி, புளுகிராசில் தினமும் 50க்கும் மேற்பட்ட விலங்குகள் இறந்திருக்கின்றன. ஆனால், அதற்கான காரணங்கள் என்னவென்று தெரியவில்லை.
ஆவணங்கள்: ஆவணங்களும் முறையாக பராமரிக்கவில்லை. விலங்குகள் கருணைக்கொலை செய்திருக்கிறார்கள்.. விலங்குகளின் இருப்பிடங்களும் சுகாதாரமாக பேணப்படவில்லை..
விலங்குகளை சரியாக பராமரிக்கவில்லை. நிர்வாகத்திடம் மேலும் பல ஆவணங்களை கேட்டிருக்கிறோம்.. அதனையும் ஆய்வு செய்து, இறுதியில் மத்திய விலங்குகள் நல வாரியத்திடம் சமர்ப்பிக்க போகிறோம். அதன்பிறகே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்கள்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications