மோடி பார்க்கலைன்னா என்ன நடக்கும்? ஓபிஎஸ்ஸின் "பிளான் பி".. ஏர்போர்ட்டில் களமிறங்க போகும் வாரிசு?
சென்னை: சென்னை வரும் பிரதமர் மோடியை இன்று சந்திக்க முடியாத பட்சத்தில் ஓ பன்னீர்செல்வத்திடம் வேறு சில திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த வருடம் தமிழ்நாட்டில் நடக்க உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்.
இந்த நிலையில் சென்னை வரும் பிரதமர் மோடியை சந்தித்து அதிமுக விவகாரங்கள் பற்றி பேச எடப்பாடி, ஓ பன்னீர்செல்வம் இருவரும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேரம் இல்லை
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இரண்டு பேரையும் சந்திக்க பிரதமர் மோடி தயாரில்லை என்று கூறப்படுகிறது. இரண்டு தரப்பில் இருந்து இன்று மாலை பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இரண்டு பேருக்குமே இதுவரை நேரம் கொடுக்கப்படவில்லை. பிரதமர் மோடி இன்று மாலை ஆளுநரையும், சில பாஜக தலைவர்களையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

எடப்பாடி முயற்சிக்க மாட்டார்
இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி சந்திக்கவில்லை என்றால் நாளையும் அவரை சந்திக்க எடப்பாடி முயற்சி செய்ய மாட்டார் என்று கூறப்படுகிறது. இன்று சந்திப்பு நடக்கவில்லை என்றால் கண்டிப்பாக மீண்டும் எடப்பாடி தரப்பு இதற்கான முயற்சிகளை எடுக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. ஏனென்றால் ஏற்கனவே டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி முயற்சி எடுத்து தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் விடவில்லை
ஆனால் ஓ பன்னீர்செல்வம் கண்டிப்பாக மீண்டும் மோடியை சந்திக்க முயற்சி எடுப்பார் என்று கூறப்படுகிறது. இன்று சந்திப்பு நடக்கவில்லை என்றால் நாளை மீண்டும் மோடியை சந்திக்க ஓ பன்னீர்செல்வம் முயல்வார் என்கிறார்கள். அதாவது நாளை அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா நடக்கிறது. இது முடிந்த பின் பிற்பகலில் மோடி டெல்லிக்கு விமானத்தில் திரும்புகிறார். அப்போது சந்திக்க ஓ பன்னீர்செல்வம் முயல்வார் என்கிறார்கள்.
Recommended Video

ஏர்போர்ட்டில் சந்திக்க பிளான்
ஓ பி ரவீந்திரநாத் மூலம் இதற்காக ஓ பன்னீர்செல்வம் காய் நகர்த்தி வருகிறாராம். நாளை மோடியை ஏர்போர்ட்டில் சந்திக்க பிளான் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரை விமான நிலையத்தில் வழியனுப்ப சென்று அப்போது அவரிடம் சில நிமிடம் பேச ஓ பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடியை மோடி சந்திக்கவில்லை.. ஆனால் பாருங்க என்னை சந்தித்துவிட்டார் என்ற தோற்றத்தை உருவாக்குவதற்காக ஓ பன்னீர்செல்வம் தீவிரமாக முயன்று வருகிறார் என்று கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications