எந்த குற்றத்துக்கு என்ன தண்டனை? தமிழகத்தில் மதுவிலக்கு திருத்த சட்டம் அமல்.. இதோ 12 மேஜர் பாயிண்ட்
சென்னை: தமிழகத்தில் மதுவிலக்கு திருத்த சட்டம் 2024 என்பது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் தான் இந்த மதுவிலக்கு திருத்த சட்டம் 2004ன் படி எந்தெந்த குற்றங்களுக்கு எவ்வளவு ஆண்டு சிறை தண்டனை என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 12 பாயிண்டுகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் இறந்தனர். இதையடுத்து கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 29 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவுக்கு நேற்று ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து இன்று முதல் தமிழகத்தில் மதுவிலக்கு சட்ட திருத்தம் 2024 என்பது அமலுக்கு வந்துள்ளது. இந்த மதுவிலக்கு சட்ட திருத்தம் 2024ன் மூலம் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மற்றும் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 1937 ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் பல்வேற திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதால் இந்த புதிய மதுவிலக்கு சட்ட திருத்தம் 2024 என்பது குற்றம் செய்வோருக்கு அதிக தண்டனையை வழங்க உள்ளது. அதன் விபரம் வருமாறு:
முதல் பாயிண்ட்: 1937 ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ் 100 லிட்டருக்கு மேல் சட்டவிரோதமான மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து வைத்திருத்தல், சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்தல், சட்டவிரோதமாக மதுபான ஆலை அல்லது மதுபான நொதி வடிப்பாலையினை கட்டுதல், விற்பனைக்காக சட்டவிரோதமாக மதுபானத்தை பாட்டிலில் அடைத்தல் உள்ளிட்டவற்றுக்கு தற்போது அதிகபட்சமாக 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில் இனி 3 ஆண்டு முதல் 7 ஆண்டு வரை கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது.
2வது பாயிண்ட்: ஐம்பது லிட்டருக்கு மேல் நூறு லிட்டர் வரை சட்டவிரோதமாக மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து அல்லது வைத்திருத்தல் குற்றத்துக்கு அதிகபட்சமாக 6 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இனி இரண்டு ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
3வது பாயிண்ட்: ஐம்பது லிட்டர் வரையிலான சட்டவிரோதமான மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து அல்லது வைத்திருத்தல், சட்டவிரோதமாக மதுபானம் அருந்துதல் மற்றும் வாங்குதல், இந்த குற்றங்களுக்கு பணம் செலவழித்தல், உரிமம் இன்றி மது அருந்த அனுமதித்தல் உள்ளிட்டவற்றுக்கு 3 ஆண்டு சிறை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. இனி ஓராண்டுக்கு குறையாத மூன்று ஆண்டு வரையிலான சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
4வது பாயிண்ட்: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு வகை மதுபானம், வெளிநாட்டு மதுபானம், நொதிபானம் மற்றும் நொதித்த பழரச மதுவகை போன்ற அறிவிக்கப்பட்ட மதுபானங்களில் போக்குவரத்து, வைத்திருத்தல் தொடர்பான குற்றங்களுக்கு சட்டவரோத மதுபானம் வைத்திருத்தல் என்ற குற்றத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டு வந்தது. இனி இந்த குற்றத்துக்கு ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
5வது பாயிண்ட்: மதுவை உட்கொள்வதால் இறப்பை ஏற்படுத்தும் சட்டவிரோதமான மதுபானம் தொடர்புடைய குற்றங்களுக்கு ஆயுட்காலத்திற்கு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய்க்கு குறையாத அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இனி ஆயுட்காலத்துக்கு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் ரூபாய்க்கு குறையாத அபராதம் விதிக்கப்படும்.
6வது பாயிண்ட்: மதுவை உட்கொள்வதால் இறப்பை ஏற்படுத்தாத பிற கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் சட்டவிரோத மதுபானம் தொடர்புடைய குற்றங்களுக்கு இதுவரை 10 ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் ரூ.7000 அபராதம் விதிக்கப்பட்டது. இனி 5 ஆண்டு முதல் ரூ.10 ஆயிரம் வரையிலான கடுங்காவல் சிறை மற்றும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.
7 வது பாயிண்ட்: மனிதர்கள் அருந்துவதற்கு ஏற்றத்தக்க வகையில் இயல்பு மாற்றப்பட்ட சராவியை மாற்றினால் அல்லது மாற்ற முயற்சி செய்தால் 3 ஆண்டு வரை கடுங்காவல் சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இனி 3 முதல் 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
8 வது பாயிண்ட்: மது அருந்துவதற்கு உரிமம் இல்லாத இடங்களை பயன்படுத்தும் குற்றத்திற்கு புதிய பிரிவாக அந்த குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட இடம் வேறு எவரும் பயன்படுத்தாமல் தடுப்பதற்காக பூட்டி சீல் வைக்கப்படும்.
9 வது பாயிண்ட்: மதுபானம் தொடர்பான விளம்பரங்களை செய்தல் குற்றத்துக்கு 6 மாதம் வரையிலான சிறை தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இனி 2 முதல் 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
10வது பாயிண்ட்: பிரிவு 7 ன் படி கூட்டுச்சதி குற்றத்துக்கு, 4வது பிரிவின் கீழ் பெருங்கற்றங்களுக்காக 3 ஆண்டு வரையிலான கடுங்காவல் சிறை தண்டனை ரூ.10 ஆயிரம் வரையிலான அபராதம் மற்றும் 4ம் பிரிவின் கீழ் சிறு குற்றங்களுக்கு 3 மாதங்கள் வரையிலான சிறை தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இனி 4ம் பிரிவின் கீழ் குற்றத்துக்காக பரிந்துரைக்கப்பட்ட அதே தண்டனை மற்றும் சட்டத்தின் வகை முறைகளை தவிர்க்க அல்லது பயனிழக்க செய்ய சதி செய்ததற்காக ஒன்று முதல் 3 ஆண்டு வரையிலான சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்
11வது பாயிண்ட்: பிரிவு 11ன் கீழ் இச்சட்டத்தில் வேறு வகையில் வகை செய்யப்படாத குற்றங்களுக்க இதுவரை 6 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது 500 ரூபாய் வரை அபராதம் ்ல்லது இரண்டும் விதிக்கப்பட்டு வந்தது. இனி ஓராண்டு முதல் 3 ஆண்டு வரையிலான சிறை தண்டனை மற்றும் ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.
12வது பாயிண்ட்: பிரிவு 24-டின் படி குற்ற செயல்களை இணக்கமாக தீர்த்து கொள்வதற்காக 10,000 ரூபாய்க்கு மேல்படாமால் ஆனால் ரூ.1000க்கு குறையாமல் பெருங்குற்றங்களை தவிர இதர குற்ற செயல்களை இணக்கமாக தீர்த்து கொள்வதற்கு கூட்டு கட்டணம் விதிக்கப்பட்டது. ஆனால் புதிய திருத்த சட்டத்தின்படி ரூ.25 ஆயிரத்துக்கு மேற்படாமல் ஆனால் ரூ.1000க்கு குறையாமல் பெருங்குற்றங்களை தவிர இதர குற்ற செயல்களை இணக்கமாக தீர்த்து கொள்வதற்கு கூட்டு கட்டணம் வசூலிக்கப்படும்.
இதுதவிர மேற்கூறிய குற்றங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து அசையும் சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும். கள்ளச்சாராயம் தொடர்பான மோசமான குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களிடம் இருந்து அவர்களது நன்னடத்தைக்கான பிணைய பத்திரத்தை பெற இச்சட்டத்தின் கீழ் நிர்வாக நடுவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications