Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொத்தமாக மாறும் தமிழகம்.. "அந்த" இரண்டு துறைகள்தான் டார்கெட்.. மாநிலம் முழுக்க வரும் வாவ் மாற்றங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் சார்ந்து பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. இது தமிழ்நாடு அடுத்த கட்டத்திற்குச் செல்ல மிகப் பெரியளவில் உதவியாக இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

TANDIC எனப்படும் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தடம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிறது. கடந்த 4 ஆண்டுகளில் பாதுகாப்பு மற்றும் ஏரோஸ்பேஸ் சார்ந்த தொழிற்சாலைகளைத் தமிழ்நாட்டில் ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

 What is Tamil Nadu plans to get big investment in in defence and aerospace

இதன் மூலம் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் தமிழ்நாடு தன்னை முக்கியமான இடத்தில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்றே சொல்லாம். TANDIC சார்ந்த முக்கிய ஒப்புதல்களைத் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் கவனித்து வருகிறது.

ஐந்து மையங்கள்: புதிய பாதுகாப்பு உற்பத்தி மையங்களை ஏற்படுத்தச் சென்னை, கோவை, ஓசூர், சேலம் மற்றும் திருச்சி ஆகிய ஐந்து முனைகள் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கே சோதனை, சான்றிதழ் மையங்கள் மற்றும் ஏற்றுமதி வசதி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தொழிற்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா கூறுகையில், "தமிழ்நாடு சுமார் 17,000 கோடி முதலீட்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது. மத்திய அரசின் கொள்முதல் கொள்கையும் தளர்த்தப்பட்டவுடன் இது கணிசமாக மேலும் அதிகரிக்கும்.. விண்வெளி தொழில்நுட்பம், விமான வடிவமைப்பு மற்றும் உற்பத்தி, சிறிய விமான உற்பத்தி, ட்ரோன்கள், வெடி பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் தான் இப்போது முதலீடுகள் அதிகமாக வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.

சரியான திட்டம்: முதற்கட்டமாக இந்த தொழிற்சாலைகளுக்குத் தேவையான அடிப்பை பணிகளைத் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இந்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் வகையில் முதற்கட்டமாக 2022ஆம் ஆண்டில் தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழிற்சாலைகளுக்கான பாலிசி வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக அமைச்சர் டிஆர்பி ராஜா மேலும் கூறுகையில், "பெரிய அளவிலான விண்வெளி மற்றும் பாதுகாப்பு முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வரும் முன்பு.. இங்கே தேவையான உள்கட்டமைப்பை நாங்கள் ஏற்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ட்ரோன் டெஸ்டிங் மையம் அமைப்பது குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டோம். மேலும், இந்தியாவிலேயே டிரோன் கார்ப்பரேஷனை தொடங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு தான்.

இந்தியாவிலேயே ஐடி அதாவது தொழில்நுட்ப துறைக்குத் தாய் துறையாக விளங்கியது தமிழ்நாடு தான். வரும் காலங்களில் இந்த துறையில் மேலும் மேலும் முதலீடுகளை அதிகம் பெறத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.. ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்புத் துறையில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தலைநகராகத் தமிழ்நாட்டை மாற்றத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

பிளான் என்ன: கோவை, ஓசூர் மற்றும் திருச்சி நகரங்களைப் பாதுகாப்பு மற்றும் ஏரோஸ்பேஸ் சார்ந்த தொழிற்சாலைகளுக்கான மையமாகத் தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது. இதற்காக விரிவான திட்டத்தையும் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. இதில் திருச்சி கனரக உலோகம் தயாரிக்கும் பணிகளுக்குச் சிறந்த மையமாக இருக்கும் என்பதால் அங்கே சோதனை மையம் அமைக்கப்படும் என தெரிகிறது. சிறிய வகை ஆயுதங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அமைக்க மணப்பாறையில் ஒரு பெரிய நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டிக்டோ சிறப்புச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ஏற்கனவே சென்னை எலக்டிரானிக் ஹப்பாக இருக்கும் நிலையில், அதைச் சார்ந்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதேநேரம் ஓசூரில் பராமரிப்பு, பழுதுபார்க்கும் தொழிற்சாலைகள் அமைக்கும். கோவையில் ஜெனரல் இன்ஜினியரிங் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.

விரிவான திட்டம்: பெங்களூருக்கு அருகில் உள்ளதால் ஓசூருக்கு நல்ல வாய்ப்பு அமைகிறது. இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ்- ரோல்ஸ் ராய்ஸ் இணைந்து உருவாக்கும் விண்வெளி எஞ்சின் உதிரிப் பாகங்கள் திட்டம் ஓசூரில் வருகிறது அதேபோல டாடா டெக்னாலஜிஸ் உடன் இணைந்து மேம்பட்ட பாதுகாப்பு கருவிகள் உற்பத்திக்காக ரூ.166 கோடி மதிப்பில் மையத்தையும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு 46 கோடி ரூபாயை வழங்கும். மீத தொகையை டிக்கோவும் டாடாவும் இணைந்து வழங்கும்.

இவை தவிர வல்லம் வடகலில் ஒரு ஒருங்கிணைந்த பாதுகாப்பு சோதனை மையம் வருகிறது. இது ஆளில்லா டிரோன்கள் சோதனை செய்யப் பயன்படும். சூலூரில் விண்வெளி பூங்கா மற்றும் வாரப்பட்டியில் உதிரிப் பாகங்கள் உற்பத்தி பூங்கா அமைக்கவும் டிட்கோ திட்டமிட்டுள்ளது" என்றார். ஒரே இடத்தில் மொத்த திட்டத்தையும் குவிக்காமல் பல இடங்களில் அமைப்பது பெரிய தொழிற்சாலைகளைச் சார்ந்து உருவாகும் சிறு குறு தொழிற்சாலைகளுக்கு மிகப் பெரியளவில் உதவும் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+