சென்னை புறநகர் மாறுகிறதா? தாம்பரத்தையே "வட்டமிடும்" எடப்பாடி பழனிசாமி.. திமுக இதை எதிர்பார்க்கலையே

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறது அதிமுக.. அந்தவகையில் இப்போதும் இன்னொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

சென்னை தாம்பரம் மாநகராட்சியை பொறுத்தவரை, மொத்தம் 5 மண்டலங்கள் , 70 வார்டுகள் இங்கிருக்கின்றன.. 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகிறார்கள். எனினும், தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகியும், 70 வார்டுகளில் உள்ள தெரு பெயர் பலகைகள், இதுவரை மாற்றப்படாமலேயே உள்ளது.

Tambaram Chennai Suburban Edappadi Palanisamy

எனவேதான், 5.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2500 தெருக்களில் புதிய தெரு பெயர் பலகைகள், 2300 தெருக்களில் ஏற்கனவே உள்ள பெயர் பலகைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் அமைக்கும் பணிகள் கையில் எடுக்கப்பட்டன.

தெற்கு ரயில்வே: அதேபோல, தாம்பரம் ரயில் நிலைய வளாகம் பல்வேறு நவீன வசதிகளுடன் ரூபாய் 1000 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதன்மூலம், இந்த ரயில் நிலையத்தில் கழிவறைகள், டிஜிட்டல் பலகைகள், எஸ்கலேட்டர்கள், புதுப்பிக்கப்பட்ட இருக்கைகள், வேளச்சேரி சாலை, ஜிஎஸ்டி சாலை என இருபக்கமும் பிரமாண்ட முகப்புகள், வாகனங்கள் வந்து செல்லும் வழி, நடை மேம்பாலங்கள், பார்க்கிங் வசதி, குடிநீர் வசதிகள், விளக்குகள், நடைமேடைகள் அனைத்தும் உலக தரத்தில் சீரமைக்கப்பட உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், தாம்பரம் உள்ளிட்ட சென்னையின் புறநகரில் அடிப்படை வசதிகளை திமுக அரசு செய்து தரவில்லை என்று கூறி, அதிமுக போராட்டத்தை அறிவித்திருக்கிறது. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உள்ளதாவது:

தாம்பரம்: "திமுக அரசு மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் எவ்வித அக்கறையும் காட்டாமல், வெற்றுத் தம்பட்டம் அடித்து வருவதில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகித்தி வருகிறது. அந்த வகையில், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் சிட்லபாக்கம்-செம்பாக்கம் பகுதிகளில், பல்வேறு அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக ஆட்சியில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிட்லபாக்கம் ஏரி மேம்பாட்டு பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தி.மு.க. ஆட்சியின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மாடம்பாக்கம் ஏரியில் பெரிய கிணறுகள் அமைத்து சிட்லபாக்கம்-மாடம்பாக்கம் மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கப்பட்டு வந்தன.

கிணறுகள்: இந்நிலையில், கடந்த 6 மாதகாலமாக குடிநீர் விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாடம்பாக்கம் ஏரி முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் கிணறுகளை சுற்றி கழிவுநீர் தேங்கி, குடிநீரின் தன்மை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

சிட்லபாக்கம் பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களின் நிலைமை படுமோசமாக உள்ளதோடு, ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடி வருகிறது. குப்பை சேகரிப்பு என்பதே இல்லாததால் மக்கள் பலவித வியாதிகளுக்கு ஆட்பட்டு வருகின்றனர்.

குப்பைகள்: சிட்லபாக்கம் ஜெயேந்திரர் தெருவில் அரசுக்கு சொந்தமான பெரிய கிணற்றில் இருந்து கோடை காலத்தில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. தற்போதைய தி.மு.க. ஆட்சியில் இந்த கிணற்றில் குப்பைகள் கொட்டப்பட்டு பாழடைந்து வருகிறது.

தாம்பரம் மாநகராட்சி பகுதிகள் முழுவதும் சொத்துவரி கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. மக்களின் பல்வேறு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றத் தவறிய தி.மு.க. அரசையும், மாநகராட்சியையும் கண்டித்தும், பாதாள சாக்கடை திட்டத்தினை அமல்படுத்த வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக் கிழமை) மாலை 4 மணியளவில், 'சிட்லபாக்கம் முதல் மற்றும் இரண்டாம் பிரதான சாலை சந்திப்பில்' மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஆர்ப்பாட்டம்: செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராசேந்திரன், தலைமையில் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா முன்னிலையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+