அகவிலைப்படி என்றால் என்ன? இந்த டிஏ அறிவிப்புகளை பார்த்தாலே அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைவது ஏன்?
சென்னை: அகவிலைப்படி என்றால் என்ன? இந்த அறிவிப்புகளை பார்த்தாலே மத்திய அரசு ஊழியர்களும், தமிழ்நாடு அரசு ஊழியர்களும் மகிழ்ச்சி அடைவது ஏன்? என்பதை பார்ப்போம்..
அகவிலைப்படி என்றால் என்ன?: அகவிலைப்படி என்பது மக்கள் மீதான பணவீக்கத்தின் தாக்கத்தைத் தணிக்க, அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தின் ஒரு பகுதியாக அலவன்ஸ் ஆக வழங்கப்படும் தொகையாகும். இதை தூய தமிழில் சொல்வது என்றால், கொடுப்பனவு ஆகும். அதாவது, நாட்டின் பணவீக்க விகிதத்தின் அடிப்படையில் ஒரு ஊழியரின் டிஏ (அலவன்ஸ்) சதவீதம் உயர்த்தப்படுகிறது. அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பள சதவீதத்தைப் பயன்படுத்தி அலவன்ஸ் (டிஏ) தீர்மானிக்கப்படுகிறது.

அகவிலைப்படி என்பது மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அலவன்ஸ் தருகிறது
தமிழக அரசும், ஒவ்வொரு ஆண்டும் 2 முறை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்கி வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்த பிறகு, தமிழக அரசு ஊழியர்களுக்கு மாநில அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்.
அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) ஆகியவற்றை கடந்த மார்ச் 7ம் தேதி அன்று, 4 சதவீதம் உயர்த்தியது.. அதாவது 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியது. கடந்த ஜனவரி 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அமைச்சரவை அறிவித்திருந்தது. இந்த உயர்வால் 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும், 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் பயனடைவார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 17-ந் தேதி அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார். அதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டிருந்தது. அதன்பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் அகவிலைப்படி உயர்வு அறிவித்தார். இதனால் 42 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 1.7.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனிடையே மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்த ஒரே வாரத்தில் தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது.
இதன்படி தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், " மக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் பல முன்னோடித் திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வகையில் நடைமுறைபடுத்துவதில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையே அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் கனிவுடன் பரிசீலித்து, 1.7.2023 முதல் மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 1.1.2024 முதல் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநில (தமிழக) அரசு பணியாளர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி 50 சதவீதமாக 1.1.2024 முதல் உயர்த்தி வழங்க உத்தரவிட்டிருக்கிறார்.
தமிழக அரசின் இந்த அகவிலைப்படி உயர்வால் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ.2,587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.
இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பள உயர்வு கிடைக்கும் என்பதால், அரசின் இந்த அறிவிப்பை பல்வேறு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றுள்ளன.
-
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications