எத்தனால் vs மெத்தனால் என்ன வித்தியாசம்.. ஏன் மெத்தனால் குடித்தால் உயிரிழப்பு ஏற்படுகிறது தெரியுமா?
சென்னை: எத்தனால் vs மெத்தனால் என்ன வித்தியாசம்? ஏன் மெத்தனால் குடித்தால் உயிரிழப்பு ஏற்படுகிறது தெரியுமா? கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாரயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தனர்.

நேற்று காலையில் இருந்து சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. சிகிச்சையில் சேர்க்கப்பட்ட பலர் அடுத்தடுத்து கொத்துக்கொத்தாக உயிரிழந்தனர்.இதுவரை 35க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய இடங்களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதனிடையே கள்ளக்குறிச்சியில் பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி (49), போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 200 லிட்டர் விஷ சாராயம் கைப்பற்றப்பட்டு, அவை விழுப்புரம் மண்டல தடய அறிவியல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சோதனையில், அதில் மெத்தனால் கலந்துள்ளதாக கண்டறியப்பட்டிருக்கிறது.
பொதுவாக மெத்தனால் கலந்து தயாரிக்கப்படும் சாராயத்தை கள்ளச்சாராயம் என்று அழைக்கிறார்கள். டாஸ்மாக் கடைகளில் மற்றும் மதுபான பார்களில் விற்கப்படும் மதுக்களில் எத்தனால் தான் கலக்கப்பட்டிருக்கும்..
எத்தனால் என்றால் என்ன: எத்தனால் என்பது எத்தில் ஆல்கஹால் , தானிய ஆல்கஹால் என்று அழைக்கிறார்கள்.இதனை வெறும் ஆல்கஹால் அதாவது மதுஅருந்துவதற்கான ஆல்கஹால் என்று அழைக்கிறார்கள் . பெரும்பாலும் பழச்சாறுகளின் நொதித்தல் மூலம் எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது . புளிக்கவைக்கப்பட்ட சாற்றை சீல் செய்யப்பட்ட பாட்டிலில் அடைத்து சேமித்து வைக்கிறார்கள். கரும்பு, சோளம் (சோளம்), கோதுமை , கம்பு மற்றும் பார்லி போன்ற தானியங்களிலிருந்து எத்தனால் பொதுவாக தயாரிக்கப்படுகிறது . இயற்கையாக தயாரிக்கப்படும் ஒயின்களை போலவே எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இதை குறைவாக எடுத்துக்கொணடால் போதையும், அதிகமாக எடுத்துக்கொண்டால் உடல் ரீதியாக கடும் பாதிப்பு ஏற்படுத்தும். எனினும் இது போதை தரும் வஸ்துவாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
மெத்தனால் என்றால் என்ன: ஆனால் மெத்தனால் கலந்து தயாரிக்கப்படும் சாராயம் கள்ளச்சாராயம் ஆகும். மெத்தனால் (மெத்தில் ஆல்கஹால்) மரக்கட்டைகளில் இருந்து தயாரிக்கிறார்கள். மரத்தில் உள்ள சில கார்போஹைட்ரேட்டுகள் மெத்தனால் உருவாக காரணமாக இருக்கின்றன. மெத்தனாலை பொறுத்தவரை எத்தனாலை விட அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது. மெத்தனால் ஒரு காலத்தில் வாகனங்களில் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டது. இதனை மதுபானம் போல் அருந்தினால் கண் பார்வை தெரியாமல் போக வாய்ப்பு உள்ளது. அதேபோல் அதிகப்படியாக அருந்தியவர்கள் உயிரிழக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. அப்படித்தான் பாக்கெட் சாராயம் குடித்த ஏராளமானோர் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்துள்ளனர்.
எத்தனால் தயாரிப்பது சவாலானது: சுருக்கமாக சொல்வது என்றால் மெத்தனால் என்பது CH3OH மரபட்டைகளிலியந்து பெட்ரோலிய நாப்தாவிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது.இது நச்சுத்தன்மையுடையது. இது கள்ளச்சாரயம் ஆகும். ஆனால் எத்தனால் என்பது C2H5OH. இது தாவரபொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.சர்க்கரை ஆலைகளில் கரும்பு சாறெத்து அதை பதப்படுத்தும் போது வரும் கழிவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மெத்தனால் தயாரிப்பது மிக எளிது. ஆனால் எத்தனால் தயாரிக்க நிறைய செலவு ஆகும். அதை தயாரிக்கும் முறையும் மிகவும் கடினம் ஆகும். விலையும் அதிகமாகவே இருக்கும். அதனால் தான் பலர் விலைகுறைவாக கிடைக்கும் மெத்தனாலை சாராயம் என நினைத்து வாங்கி அருந்தி உயிரிழக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications