சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடிதூள்! வந்துவிட்டது ஆட்டோமெடிக் நிலப் பட்டா முறை.. இனி ஒரு நாள் கூட லேட் ஆகாது! எப்படி செயல்படும்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ் நிலம் இணையதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வருவாய்த் துறைக்கான புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தி வைத்தார். இதன் மூலம் உட்பிரிவு சார்ந்த மனுக்கள் குறைந்து, விரைவாகவும் எளிதாகவும் பட்டா கிடைக்கும்.

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளையும் டிஜிட்டல் முறையில் மாற்றப் பல நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் முறைகேடு, தேவையற்ற தாமதம் தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும், அனைத்துமே டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படுவதால் முறைகேடுகளும் கணிசமாகக் குறையும். அதன் ஒரு பகுதியாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் புதிதாக இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமலஹாசன் வாங்கிய மொத்த சம்பளம்!? வெளியான தகவல்கள்பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமலஹாசன் வாங்கிய மொத்த சம்பளம்!? வெளியான தகவல்கள்

 புதிய மென்பொருள்

புதிய மென்பொருள்

வருவாய்த் துறையின் கீழ் இருக்கும் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்ககத்தின் தமிழ் நிலம் இணையதளத்தில் புதிய மென்பொருள் நிறுவப்பட்டுள்ளது. இந்த புதிய மென்பொருளைச் சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குவது மற்றும் அதற்கான பட்டா மாறுதல் செய்யும் வகையில் இந்த புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சிகள், நகராட்சிகளில் வருவாய் தொடர்பாகவும் இந்த புதிய மென்பொருள் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

 எளிதாக பட்டா

எளிதாக பட்டா

பொதுவாக வீட்டுமனைப் பிரிவில் மனைகளைக் கிரயம் செய்யும் போது, தற்போதுள்ள நடைமுறைப்படி ஒவ்வொரு மனுதாரரும் உட்பிரிவு செய்ய, தனித்தனியே மனு பெறும் சூழல் நிலவி வருகிறது. இப்படி ஒரே மனைப் பிரிவில் இருக்கும் பல வீட்டு மனைகளை நில அளவை செய்து உட்பிரிவு செய்ய, நில அளவர் பல நாட்களில் தனித்தனியே மனை இருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டி உள்ளது. இப்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய மென்பொருள் மூலம் மனைப் பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உட்பிரிவு செய்து, உரிமையாளர் பெயரில் பதிவு செய்யப்படும். இதன் மூலம் உட்பிரிவு கோரி தனித்தனியாக வரும் மனுக்கள் தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் உட்பிரிவு சார்ந்த மனுக்கள் குறைந்து, விரைவாகவும் எளிதாகவும் பட்டா கிடைக்கும்.

 தானாக மாற்றப்படும்

தானாக மாற்றப்படும்

இதுவரை, உட்பிரிவு செய்யப்பட்ட மனைப் பட்டாக்களுக்கு புதிய சர்வே எண்களை ஒதுக்குவதற்கு, சர்வே கட்டாயம் என்று இருந்த நிலையில், இப்போது அந்த நிலை மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த புதிய மென்பொருள் நகர மற்றும் ஊரமைப்பு இயக்குநரகம் (டிடிசிபி) மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட நிலத்திற்குத் தானாகவே சர்வே எண்ணை ஒதுக்கும். பின் மென்பொருளால் உருவாக்கப்பட்ட இந்த துணை பிரிவுகளின் நிலப் பட்டங்கள் உரிமையாளர் பெயருக்கு தானாகவே மாற்றப்படும்.

 சில நிமிடங்களில் மாற்றப்படும்

சில நிமிடங்களில் மாற்றப்படும்

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "அங்கீகரிக்கப்பட்ட மனையில் இருந்து ஒருவர் ப்ளாட்டை வாங்கும் போது, அது தானாக புதிய உரிமையாளருக்கு மாற்றப்படும். தமிழ்நிலம் போர்ட்டலுடன் நிலப் பதிவு மென்பொருளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், சொத்தை புதிய ஒனருக்கு பதிவு செய்த சில நிமிடங்களிலேயே பெயர் மாற்றப்பட்டுள்ளது ஆன்லைனில் பிரதிபலிக்கும்" என்றார்.. ஒவ்வொரு ஆண்டும் லேஅவுட்களில் உட்பிரிவு மாற்றங்களுக்காக 1.5 லட்சம் விண்ணப்பங்கள் வருகின்றன. சர்வேயர்களுக்கு இப்போது பற்றாக்குறை இருக்கும் நிலையில், தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது இந்த புதிய மென்பொருள் தேவையில்லாத காலதாமதத்தைக் குறைக்கும்..

 பெரிதும் பயன்படும்

பெரிதும் பயன்படும்

பட்டா மாறுதலுக்குத் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதாகப் பல தரப்பினரும் புகார் தெரிவித்தனர்.. கடந்த ஆண்டு பட்டா மாறுதலுக்கான நில அளவை முடிக்க நில அளவைத் துறை 30 நாள் கெடு விதித்தது. இருப்பினும், போதிய கணக்கெடுப்பாளர்கள் இல்லாததால், லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் இன்னும் கூட தாமதம் ஆகியே வருகிறது.. அவர் மேலும் கூறுகையில், "ஒவ்வொரு முறையும் பட்டா பரிமாற்றத்திற்கு நில உரிமையாளர் விண்ணப்பிக்கும் போது, ​​சர்வேயர் நேரில் சென்று கணக்கெடுக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இப்போது அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

 பெயர் மாற்றம்

பெயர் மாற்றம்

2021ஆம் ஆண்டில், வருவாய்த் துறை பட்டாவை தானாகப் பெயர் மாற்றும் முறையை அறிமுகப்படுத்தியது. கடந்த ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி வரை 1,59,600 பட்டாக்கள் இப்படி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பூங்காக்கள், பள்ளிகள் ஆகியவற்றின் நிலப் பகுதிகள் தமிழ்நிலம் போர்ட்டலில் அரசு சொத்தாகக் குறிக்கப்படும். இந்த இடங்களுக்குப் பெயர் மாற்றம் முடக்கப்படும் என்பதால், இதுபோன்ற இடங்களை ஏமாற்றி விற்பதும் தடுக்கப்படும்.

English summary
Chief Minister MK Stalin launched a new software for Tamilnilam portal: Tamilandu govt steps to eliminate the need for surveyors to survey land parcels for issuing pattas for subdivided land.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X