2009 டூ 2019.. கடைசி 3 லோக்சபா தேர்தலில்.. தமிழ்நாட்டில் பதிவான வாக்கு சதவிகிதம் எவ்வளவு? இதோ லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் 39 லோக்சபா தொகுதிகளுக்கு இன்று தேர்தல் தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை மையப்படுத்தி வாக்களர்களிடையே விழிப்புணர்வு செய்யப்பட்டு வரும் நிலையில், கடைசி 3 லோக்சபா தேர்தலில் (2009 முதல் 2019) தமிழ்நாட்டில் பதிவான வாக்கு சதவீதம் என்னவென்று இங்கே பார்க்கலாம்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் இன்று காலை தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடந்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் 21 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரேதேசம் என மொத்தம் 102 தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தல் தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் ஓட்டு போட்டு வருகின்றனர். தமிழகத்தில் 950 வேட்பாளர்களும், புதுச்சேரியில் 26 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

What is the percentage of votes recorded in Tamil Nadu in the last 3 Lok Sabha elections Here is the list

தேர்தலுக்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துவிட்டது. இதன் மூலம் இன்று ஜனநாயக திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு வாக்காளர்களும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. எப்படி இருப்பினும் வாக்கு சதவீதம் 70 முதல் 80 சதவீதம் என்ற அளவிலேயே பதிவாகி வருகிறது.

100 சதவீத வாக்குப்பதிவை மையப்படுத்தி வாக்களர்களிடையே விழிப்புணர்வு செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில், கடைசி 3 லோக்சபா தேர்தலில் எவ்வளவு வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது என்பதை இங்கு பார்க்கலாம்.

தமிழ்நாட்டில்: அதன்படி பார்த்தால், கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் 73.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதேபோல் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் 73.74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் 72.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
2009 - 73.02 சதவீத வாக்குகள்

2014 - 73.74 சதவீத வாக்குகள்

2019 - 72.47 சதவீத வாக்குகள்..

நாடு முழுவதும் எத்தனை சதவீதம்: இதேபோல், கடந்த 3 லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது என்பதை பார்க்கலாம். அதன்படி, கடந்த 2009- ஆம் ஆண்டு தேர்தலில் 67.40 சதவீத வாக்குகளும், கடந்த 2014 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 66.44 சதவீத வாக்குகளும், கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் 58.21 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

2009 - 67.40 சதவீத வாக்குகள்

2014 - 66.44 சதவீத வாக்குகள்

2019 - 58.21 சதவீத வாக்குகள்..

தற்போது நடக்கும் லோக்சபா தேர்தலானது கடந்த முறையை போலவே 7 கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்டமாக இன்று தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இதேபோல் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. மக்கள் ஓட்டு போட்டு வருகின்றனர். தமிழகத்தில் சுயேட்ச்சை மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் என மொத்தம் 950 பேர் களம் காண்கிறார்கள். இதில் ஆண் வேட்பாளர்கள் 874 பேரும், பெண் வேட்பாளர்கள் 76 பேரும் அடங்குவர்.

முன்னதாக லோக்சபா தேர்தலையொட்டி, வாக்குசாவடிகளுக்கு மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள், வாக்காளர்களுக்கு விரல்களில் வைக்கப்படும் மை என 21 பொருட்கள் கொண்டு செல்லும் பணி நடைபெற்றது. தமிழ்நாட்டில் மொத்தம் 68,321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6.23 கோடி.

இதில், ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடி. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடி ஆகும். மற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 8,467. இதேபோல் முதல் முறை வாக்காளர்கள் 10.92 லட்சம். 80 வயதுக்கு மேல் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 6,14,002 ஆகும். இந்த லோக்சபா தேர்தலில், தேர்தல் பணிகளில் மட்டும் 3.32 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.

இன்று தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மட்டுமின்றி நாடு முழுவதும் 102 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடந்து வருகிறது. அதன் படி, தமிழ்நாடு (39), ராஜஸ்தான் (12), உத்தரப் பிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), மகாராஷ்டிரா (5), அசாம் (5), உத்தரகாண்ட் (5), பீகார் (4), மேற்கு வங்கம் (3), அருணாச்சல பிரதேசம் (2), மணிப்பூர் (2), மேகலா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1),சிக்கிம் (1), சத்தீஸ்கர் (1), திரிபுரா (1), அந்தமான் நிக்கோபார் தீவுகள் (1), ஜம்மு மற்றும் காஷ்மீர் (1), லட்சத்தீவு (1), புதுச்சேரி (1) என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+