மாஸ்டர் பிளானை இறக்கும் தமிழக அரசு.. மொத்தமாக மாறும் "பறக்கும் ரயில்கள்.." இதுதான் விஷயமே! சூப்பர்ல

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இயங்கி வரும் பறக்கும் ரயில்களில் வெகு விரைவில் மிகப் பெரிய மாற்றம் வர உள்ளது. இது நகரில் நாம் பயணிக்கும் முறையை முற்றிலுமாக மாற்றியமைக்கப் போகிறது.

இந்தியாவிலேயே வலுவான பொது போக்குவரத்தைக் கொண்ட ஒரு நகரமாகச் சென்னை இருக்கிறது. பஸ், புறநகர் ரயில்கள், பறக்கும் ரயில்கள், மெட்ரோ என பல்வேறு வகையான பொது போக்குவரத்தைக் கொண்டிருக்கிறது.

 What is the plan for Tamilnadu govts CUMTA on taking over MRTS

நமது நாட்டில் வேறு எந்தவொரு நகரிலும் இவ்வளவு விரிவான பொது போக்குவரத்து இல்லை என்றே சொல்லாம். மேலும், அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப இவற்றை மேம்படுத்தவும் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பறக்கும் ரயில்கள்: இதில் முக்கியமானது பறக்கும் ரயில்கள் என்று அழைக்கப்படும் எம்ஆர்டிஎஸ் ரயில்களும் முக்கிய பங்கு இருக்கிறது. கடந்த 1997இல் இந்த பறக்கும் ரயில் சேவை முதலில் ஆரம்பிக்கப்பட்டது. நாட்டிலேயே இதுபோல பாலம் அமைக்கப்பட்டு, அதன் மீது ரயில்கள் இயக்கப்பட்டது அதுவே முதல்முறை.. முதற்கட்டமா கடற்கரை மயிலாப்பூர் வரை ரயில் சேவை தொடங்கப்பட்ட நிலையில், 2007இல் அது வேளச்சேரி வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது.

இந்த பறக்கும் ரயில்களில் தென்னக ரயில்வே மூலம் இயக்கப்பட்டு வந்த நிலையில், அதன் சேவை திருப்திகரமாக இல்லை என்று நீண்ட காலமாகவே புகார் இருந்தது. இந்தச் சூழலில் தான் இந்த பறக்கும் ரயில்களைச் சென்னை மெட்ரோ நிர்வாகம் எடுத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இருப்பினும், பின்னர் அதிலும் மாற்றம் ஏற்பட்டு, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் ஏற்படுத்தப்பட்டு, அது இந்த பறக்கும் ரயில்களை இயக்கும் என முடிவு செய்யப்பட்டது.

ஒப்பந்தம்: இது தொடர்பாகத் தென்னக ரயில்வே மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. தற்போது எப்படி இருக்கிறதோ அதேபோல இதை ஒப்படைக்கத் தென்னக ரயில்வே சம்மதித்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் அரசு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. பறக்கும் ரயில்களைப் பெருநகர ஆணையம் எடுத்து நடத்த ஏதுவாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி ஒரு ஆண்டிற்குப் பறக்கும் ரயிலின் செயல்பாடுகள் தொடர்ந்து தெற்கு ரயில்வே கவனிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில அரசால் வாங்கப்படும் பெட்டிகளை இந்த ஆணையமே இயக்கும். ஒரு வேலை அவை இந்திய ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டால், அதற்கான தொகையை இந்தியன் ரயில்வே மாநில அரசுக்குத் திருப்பி அளித்துவிடும். இந்த பறக்கும் ரயில்களின் கட்டமைப்பை மாநில அரசு கையில் எடுத்த பிறகு, அதன் உட்கட்டமைப்பைச் சென்னை மெட்ரோவுக்கு இணையாக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

மொத்தம் மாறும்: அந்த இடைப்பட்ட காலத்தில் பறக்கும் ரயில்களை இயக்க ஏதுவாக தென்னக ரயில்வே தனது ரயில் பெட்டிகளை முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்கும். அதன் பிறகும் கூட குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்திவிட்டு அந்தப் பெட்டிகளை இந்த ஆணையம் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

இந்த பறக்கும் ரயில்கள் கடைசியாகச் சென்னை கடற்கரையில் சென்று முடிவடைகிறது. அங்கிருந்து தென்னக ரயில்வே புறநகர் ரயில்களையும் இயக்கும் நிலையில், இரண்டையும் சிக்கல் இல்லாமல் இயக்குவது குறித்தும் விரிவாக இந்த ஒப்பந்தத்தில் விளக்கப்பட்டுள்ளது. அங்கே ரயில் டிராக்குகளை பயன்படுத்துவது, கவுன்டர் அமைப்பது, ரயில் வருகை புறப்பாடு குறித்த அறிவிப்புகளை வெளியிடுவது என அனைத்து குறித்தும் இதில் விளக்கப்பட்டுள்ளது.

பக்கா பிளான்: புறநகர் ரயில்களில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிப்பது, ஸ்டேஷன்களில் புதிய கடைகளை அமைத்து வருவாயை அதிகரிப்பது எனப் பல திட்டங்கள் வர உள்ளது. இது சென்னையின் பொது போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+