Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவரை வர வையுங்க.. நைசாக நூல் விடும் எடப்பாடி.. திமுகவிற்கு எதிரா இப்படி ஒரு வியூகமா? ஆ அதிருதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவிற்கு எதிராக 2024 லோக்சபா தேர்தலை மனதில் வைத்து எடப்பாடி பழனிசாமி முக்கியமான வியூகம் ஒன்றை வகுத்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு அரசியலில் எப்போது என்ன நடக்கும்.. யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள்.. யார் யார் கூட்டணியை விட்டு பிரிவார்கள் என்பதெல்லாம் யூகிக்கவே முடியாது. அந்த வகையில்தான் கடந்த சில நாட்களாகவே கூட்டணி குறித்த பல்வேறு கருத்துக்களை பேசி வருகிறார் திருமாவளவன். இவர் பேசும் கருத்துக்கள் எல்லாம் தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் பாமக - திமுக இணைந்தால் அந்த கூட்டணியில் இருக்க மாட்டோம் , அதேபோல் பாஜக இருக்கும் கூட்டணியில் இணைய மாட்டோம் என்று திருமாவளவன் எம்பி தெரிவித்தார். சென்னையில் பாஜகவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது திருமா இதை தெரிவித்தார்.

விவாதம்

விவாதம்

அதில், பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். அது திமுக கூட்டணியாக இருந்தாலும் அந்த கூட்டணியில் இருக்க மாட்டோம். அவர்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் இருக்க மாட்டோம். இந்தியாவில் யாருக்காவது இப்படி சொல்ல தைரியம் இருக்கிறதா?, தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த யுத்தம் விடுதலை சிறுத்தைகளுக்கும் பாஜகவிற்கு இடையிலான யுத்தம். நான் கருத்தியல் ரீதியாக சவால் விடுகிறேன். கருத்தியல் ரீதியாக மோதிக்கொள்ள தயாரா? கருத்தியல் ரீதியாக சண்டை போட தயாரா? ஓட ஓட விரட்டி அடிப்போம், என்று கூறினார். திமுக - பாமக நெருக்கம் ஆகி வருவதாக செய்திகள் வந்த நிலையில்தான் திருமா இப்படி கூறினார். அதாவது திமுகவிற்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுப்பது போல அவரின் பேச்சு இருந்தது.

எடப்பாடி பாராட்டு

எடப்பாடி பாராட்டு

அதோடு இல்லாமல் எடப்பாடியையும் இடை இடையே பாராட்டி பேசி இருந்தார். சில நாட்களுக்கு முன்புதான் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு வழக்கில் வென்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். முத்தாய்ப்பாக நேற்று பாஜக அதிமுக கூட்டணி குறித்து திருமா வெளிப்படையாக பேச தொடங்கினார்.அதில், திமுக முதுகில் ஏறி சவாரி செய்து வெற்றிபெற பாஜக முயற்சி செய்கிறது. அதிமுக இல்லாமல் தனித்து போட்டியிட பாஜகவிற்கு தைரியம் இல்லை. பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் அதிமுகவுக்கு எந்தப் பயனும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுக கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்து இருக்கிறார் அதிமுக மாஜி செல்லூர் ராஜு.

 கூட்டணி

கூட்டணி

இது எல்லாம் அதிமுக - விசிக கூட்டணி உருவாகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் மீண்டும் திருமா கொடுத்த ஸ்டேட்மென்ட் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதன்படி நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று விளக்கம் அளித்தார். அதோடு அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற எடப்பாடி பழனிசாமியை வாழ்த்துவதற்கு பதிலாக விசிக தலைவர் எம்பி திருமாவளவன் அவரை பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ததில் சங் பரிவார், பாஜகவின் பின்னணி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் அதிகாரப்பூர்வமான பொதுச் செயலாளராக செயல்படக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தனது சாதுரியத்தால் இந்த இடத்தை அடைந்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை பாஜக தேர்வு செய்திருக்கிறது.

அதிமுக

அதிமுக

இந்த தேர்விற்கு பாஜகதான் காரணம். பாஜகவின் ஒவ்வொரு அணுகுமுறையில் இது வெளிப்படையாக தெரிகிறது. நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றிருக்கிறார்கள் என்கிற தோற்றம் உருவாக்கப்பட்டாலும், பாஜக சங்பரிவார்களின் ஆதரவுப் பின்னணியும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. சட்ட ரீதியாக எடப்பாடி வென்றார் என்பதை தாண்டி அவர் நீதிமன்றம் வாயிலாக வென்றார் என்பதை தாண்டி பாஜகவின் சப்போர்ட் காரணமாகவே வென்றார் என்பதே முக்கியம் என்று கூறி உள்ளார். அதாவது திருமா முதல்முறையாக எடப்பாடியை பாஜக மூலமாக வென்றார் என்று வெளிப்படையாக விமர்சனம் செய்துள்ளார்.அதிமுகவுடன் நெருங்குவதாக கருதப்பட்ட திருமா மீண்டும் அதிமுகவுடன் டிஸ்டன்ஸ் காட்ட தொடங்கி இருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

கூட்டம்

கூட்டம்

இப்படிப்பட்ட நிலையில்தான் திமுகவிற்கு எதிராக 2024 லோக்சபா தேர்தலை மனதில் வைத்து எடப்பாடி பழனிசாமி முக்கியமான வியூகம் ஒன்றை வகுத்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி எப்படியாவது திருமாவை அதிமுக கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி முயன்று வருகிறாராம். அதிமுக - பாமக உறவு நன்றாக இல்லை. பாஜகவுடனும் அதிமுக சுமுகமாக உறவில் இல்லை., ஒருவேளை பாஜகவுடன் உறவு முறிந்தால் விசிகவை கொண்டு வர வேண்டும். திருமாவை அதிமுக கூட்டணிக்கு இழுக்க வேண்டும் என்று எடப்பாடி தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்ல தொடங்கி உள்ளாராம்.

நெருக்கம்

நெருக்கம்

முக்கியமாக அதிமுக மீது தற்போது கொங்கு கட்சி.. ஒரு ஜாதிக்கான கட்சி என்ற பிம்பம் உள்ளது. அதை உடைக்க வேண்டும். முக்கியமாக தலித் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளை பெற வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறாராம். அப்படி அவர்களின் வாக்குகளை பெற வேண்டும் என்றால் அதற்கு பாஜகவை விரட்டிவிட்டு விசிகவை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலும் எடப்பாடி பழனிசாமி இருக்கிறாராம். ஒருவேளை பாஜகவுடன் 2024ல் மோதல் ஏற்பட்டு கூட்டணி முறிந்தால் விசிகவை தட்டி தூக்க எடப்பாடி ஆயத்தம் ஆகி வருகிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+