வெறும் ரூ.5000 போடுங்க போதும்.. ரூ.8 லட்சம் கிடைக்கும்.! தபால் நிலையத்தில் கலக்கல் சேமிப்பு திட்டம்
சென்னை: தபால் நிலையங்கள் இப்போது நமக்குப் பல அட்டகாசமான சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அதன்படி வெறும் 5 ஆயிரம் செலுத்தி 8 லட்சம் கிடைக்கும் திட்டம் குறித்துப் பார்க்கலாம்.
நமது நாட்டில் இப்போது மாத சம்பளம் பெரும் மிட்டில் கிளாஸ் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது.
இப்படி வருவாய் ஓரளவுக்கு உயர்ந்து வருவதால், இந்தியர்கள் பலரும் பல விதத்தில் தங்கள் பணத்தைச் சேமித்து வைக்கவே விரும்புகின்றனர். வரும் காலம் கருதி இப்படி அவர்கள் சேமித்து வைக்கிறார்கள்.

தபால் நிலையம்: இருப்பினும், வங்கியில் சேமிப்பு கணக்கில் இருந்தால் வட்டி குறைவாகவே கிடைக்கும். நாம் போட்ட பணம் குறையாதது போலத் தெரிந்தாலும், வட்டி குறைவாக வருவதால் விலைவாசி உயர்வுடன் ஒப்பிட்டால் நமக்குக் கிடைக்கும் பணம் குறைவாகவே இருக்கும். இதனால் கடந்த சில ஆண்டுகளில் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் பண்டு உள்ளிட்டவற்றில் அதிகம் முதலீடு செய்கிறார்கள். கொரோனா காலகட்டத்தில் இது பல மடங்கு அதிகரித்தது.
ஆனால், இதுபோன்ற முதலீடுகளில் ஆபத்து இருக்கவே செய்கிறது. ஏனென்றால் இந்த முதலீடுகள் பங்குச் சந்தையுடன் தொடர்புடையது. எனவே, பங்குச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் காரணமாக நமது முதலீடு பாதிக்கும் அபாயம் இருக்கவே செய்கிறது. மேலும், இதில் முதலீடு செய்யப் பங்குச் சந்தை குறித்த அடிப்படை புரிதலும் தேவை. இதன் காரணமாக இளைஞர்கள் பலரும் FD மற்றும் RD பக்கம் திரும்பியுள்ளனர்.

சேமிப்பு: இருப்பினும், FD, RDகளிலும் கூட பல வங்கிகளில் வட்டி விகிதம் குறைவாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் வங்கிகளைத் தபால் நிலையங்களும் சில ஆண்டுகளாக வங்கி சேவையை வழங்கி வருகிறது. அதன்படி தபால் நிலையங்களிலும் FD மற்றும் RDக்கள் இருக்கவே செய்கிறது. இவை 100% பாதுகாப்பானது என்பதாலும் இதில் வட்டி ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதாலும் பலரும் இதையே தேர்வு செய்கிறார்கள்.
இதற்கான வட்டி விகிதம் முதலில் 5.8 சதவீதமாக இருந்த நிலையில், 2023 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வட்டி விகிதம் 6.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் FD மற்றும் RDகளில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. FDகளில் நாம் பெருந்தொகையை முன்கூட்டியே டெபாசிட் செய்ய வேண்டும். அதேநேரம் RDகளில் மாதம் ஒரு முறை செலுத்தலாம். பொதுவாக FDகளுடன் ஒப்பிடுகையில் RDகளில் வட்டி சற்று குறைவாகவே இருக்கும்.
பொதுவாகவே RDக்களில் ரெகுலர் ரெக்கரிங் டெபாசிட், ப்ளெக்ஸி ரெக்கரிங் டெபாசிட் என இரண்டு வகை உள்ளன. ரெகுலர் ரெக்கரிங் டெபாசிட்களில் முதல் மாதம் தொடங்கி கடைசி மாதம் வரை ஒரே தொகையைத் தொடர்ச்சியாகச் செலுத்த வேண்டும். அதேநேரம் ப்ளெக்ஸி ரெக்கரிங் டெபாசிட்டில் நாம் தேவைக்கேற்ப ஒவ்வொரு மாதம் கட்டணத்தைக் கூட்டி அல்லது குறைத்துச் செலுத்த முடியும்.

8 லட்சம் வருமானம்: அது சரி விஷயத்திற்கு வருவோம். இதில் தான் நம்மால் சிறுக சிறுக பணத்தைச் சேமித்தால் லட்சக் கணக்கில் சேமிக்க முடியும். இப்போது போஸ்ட் ஆபிஸில் வட்டி விகிதம் 6.2%ஆக உள்ள நிலையில், மாதம் வெறும் ரூ.5 ஆயிரம் டெபாசிட் செய்தால் போதும். இப்படியே 5 ஆண்டுகள் செய்தால் நமக்கு வட்டியுடன் சேர்ந்து 3.52 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
அதேநேரம் இதை மேலும் 5 ஆண்டுகளுக்கு அதாவது ஒட்டுமொத்தமாக 10 ஆண்டுகள் போட்டால், நமக்கான மொத்த வருவாய் 8.32 லட்சமாக அதிகரிக்கும். இதில் எப்படி இணைய வேண்டும், வட்டி விகிதங்கள் துல்லியமாக எவ்வளவு உள்ளிட்ட தகவல்களைத் தெரிந்து கொள்ள அருகே உள்ள தபால் நிலையத்திற்குச் செல்லுங்கள்.












Click it and Unblock the Notifications