2 நாட்களுக்கு முன் கூட நல்லா இருக்கேன்னு சொன்னாரே.. டாடாவிற்கு என்ன ஆனது? மரணத்திற்கு என்ன காரணம்?
சென்னை: இந்தியாவின் டாப் தொழிலதிபர்களின் ஒருவரான ரத்தன் டாடா இன்று காலமானார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டாடா மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரத்தன் நேவல் டாடா இந்தியாவின் டாப் தொழிலதிபர்களின் ஒருவர். டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆவார். அவர் 1990 முதல் 2012 வரை டாடா குழுமத்தின் தலைவராகவும், அக்டோபர் 2016 முதல் பிப்ரவரி 2017 வரை இடைக்காலத் தலைவராகவும் இருந்தார். அதன் அறக்கட்டளைகளுக்குத் தொடர்ந்து தலைமை தாங்கி வருகிறார். 2008 ஆம் ஆண்டில், 2000 ஆம் ஆண்டில் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷன் பெற்ற பிறகு, இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷண் பெற்றார்.

டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்செட்ஜி டாடாவின் மகன் ரத்தன்ஜி டாடாவால் தத்தெடுக்கப்பட்ட நேவல் டாடாவின் மகன்தான் ரத்தன் நேவல் டாடா. கார்னெல் பல்கலைக்கழக கட்டிடக்கலை கல்லூரியில் கட்டிடக்கலையில் இளங்கலை பட்டம் பெற்றவர் டாடா. அவர் 1961 இல் டாடாவில் சேர்ந்தார், அங்கு அவர் டாடா ஸ்டீல் கடை தளத்தில் பணிபுரிந்தார். 1991 இல் டாடா சன்ஸ் ஓய்வு பெற்றவுடன் ஜே.ஆர்.டி. டாடாவின் தலைவராக அவர் பின்னர் பதவியேற்றார். அவரது பதவிக்காலத்தில் டாடா குழுமம் டெட்லி, ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் கோரஸ் ஆகியவற்றை கையகப்படுத்தியது. டாடா தனது வருமானத்தில் சுமார் 60-65% தொண்டுக்கு நன்கொடையாக அளித்து, உலகின் மிகப்பெரிய தொண்டு புரிபவர்களின் ஒருவராக இருக்கிறார்.
மரணம்: இந்த நிலையில் இந்தியாவின் டாப் தொழிலதிபர்களின் ஒருவரான ரத்தன் டாடா இன்று காலமானார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டாடா மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
https://www.oneindia.com/elections-common/index.php.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் மரணம் அடைந்தார். சிகிச்சை பலனின்றி 9ம் தேதி இரவு 11.45க்கு அவர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவர் தனது உடல்நிலை சரியாக இருப்பதாக கூறி இருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், எனது உடல்நிலை குறித்து சமீபத்தில் பரவி வரும் வதந்திகளை நான் அறிவேன், மேலும் இந்த கூற்றுக்கள் ஆதாரமற்றவை என்பதை அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். எனது வயது மற்றும் உடல்நிலை காரணமாக நான் தற்போது மருத்துவ பரிசோதனை செய்து வருகிறேன். இதை பற்றி கவலைப்பட எந்த காரணமும் இல்லை. நான் நல்ல உடல் மற்றும் மனநிலையுடன் இருப்பதோடு, பொதுமக்களும் ஊடகங்களும் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன், என்று கூறி இருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் ரத்தன் டாடா உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வயோதிகம் காரணமாக சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். நீண்ட நாட்களாக வயோதிகம் காரணமாக அவரின் உடலில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாகவே அவர் மரணம் அடைந்தார். மற்றபடி அவரின் மரணத்திற்கு வேறு முக்கியமான நோய் காரணங்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. அவரின் மறைவிற்கு உலகம் முழுக்க பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications