44 ஐபிஎஸ்னா சும்மாவா? அந்த உளவுத்துறை ரிப்போர்ட்.. கூண்டோடு ஆக்சன் எடுத்த ஸ்டாலின்.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் எதிர்பார்க்கப்பட்டபடியே ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என்று முன்பே ஒன்இந்தியா தமிழ் சார்பாக செய்தி வெளியிட்டு இருந்தோம். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.

ஆட்சிக்கு வந்த புதிதில் எல்லா ஆட்சியையும் போல தலைமை செயலாளர் தொடங்கி டாப் அதிகாரிகள் வரை பலர் மாற்றப்பட்டனர்.அதேபோல் முதல்வர் ஸ்டாலினுக்கும் தனியாக ஆலோசகர்கள் அறிவிக்கப்பட்டனர். இதெல்லாம் வழக்கமாக நடக்கும் விஷயம்தான்.

அதிகாரிகள் மாற்றம்

அதிகாரிகள் மாற்றம்

ஆனால் அதன்பின் பெரிதாக அதிகாரிகள் மாற்றம் செய்யப்படவில்லை. ஒரு சில துறைகளில் செயலாளர்கள் மாற்றப்பட்டனர். மற்றபடி பெரிய மாற்றம் நடக்கவில்லை. சென்னை ஆணையகரகம் மூன்றாக பிரிக்கப்பட்ட நிலையில், அதற்கான ஆணையர்கள் அப்போது நியமிக்கப்பட்டனர். மற்றபடி பெரிய அளவில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றமும் நடக்காமல் இருந்தது. இந்த நிலையில்தான் விரைவில் ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் நடக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தோம்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

அதன்படி தற்போது தமிழ்நாட்டில் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தாம்பரம் காவல்துறை ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் ரவி ஓய்வு பெற்ற காரணத்தால் ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு தாம்பரம் ஆணையாரக கூடுதல் பொறுப்பு வழங்கி காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவிட்டு இருந்தார். தற்போது முறைப்படி தாம்பரம் காவல்துறை ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கண்ணன் மாற்றம்

கண்ணன் மாற்றம்

முன்னதாக தென் சென்னை காவல்துறையின் கூடுதல் ஆணையராக இருந்த என். கண்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு இருந்தார். தற்போது காத்திருப்பு பட்டியலில் இருந்த கண்ணன் ஆயுதப்படை ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஐபிஎஸ் வருண்குமார் மதுரை அமலாக்கப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐஜியாக தேன்மொழி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

 நடந்தது என்ன?

நடந்தது என்ன?

இப்படி திடீரென ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட என்ன காரணம் என்று போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். அதன்படி சில அதிகாரிகளின் செயல்பாடு சரியில்லை என்று உளவுத்துறை சார்பாகவும் முதல்வர் தரப்பிற்கு பர்ஃபார்மன்ஸ் ரிப்போர்ட் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சில ஐபிஎஸ் அதிகாரிங்கள் தங்கள் துறைகளில் செயல்படும் விதம் சரியாக இல்லை, சிலர் சொதப்புகிறார்கள் என்று ரிப்போர்ட் சென்றுள்ளது.

மேலிட உத்தரவு

மேலிட உத்தரவு

இதெல்லாம் போக சில ஐபிஎஸ் அதிகாரிகள் முந்தைய அதிமுக ஆட்சி தலைவர்கள் சிலருடன் நெருக்கமாக உள்ளனர். இன்னும் சிலர் மேலிட உத்தரவிற்கு ஏற்ப நடப்பது இல்லை. ஆளும் அரசின் கொள்கைகளுக்கு எதிராக சிலர் நடப்பதாகவும் புகார்கள் மேலிடத்திற்கு சென்றுள்ளன. அதிலும் கடந்த 1 மாதமாக சென்னை உட்பட சில இடங்களில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் காரணமாக சட்ட ஒழுங்கு ரீதியாகவும் முதல்வர் தரப்பிற்கு சில புகார்கள் சென்றுள்ளன.

ஜெயக்குமார் மாற்றம்

ஜெயக்குமார் மாற்றம்

இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் தற்போது ஐபிஎஸ் அதிகாரிகள் தூக்கியடிக்கப்பட்டு உள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஜெயக்குமாரை கைது செய்த சுந்தரவதனம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வண்ணாரப்பேட்டை டிசியாக இருந்த சுந்தரவதனம் கரூர் எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது போக சைபர் கிரைம் செல் உருவாக்கப்பட்டு உள்ளது. இது போக மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக மகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை கமிஷனராக பாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+