சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீங்களே எதையாவது போடுவீங்களா? அதிரடி காட்டிய அன்புமணி ராமதாஸ்! அதிமுக - பாமக கூட்டணி வாய்ப்பில்லையா?

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக இணைப்புக்கு பாஜக தலைமை எப்படி தீவிரமாக முயன்று வருகிறதோ, அதேபோலவே பாமகவை மீண்டும் அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என விரும்புகிறது. ஆனால் அன்புமணி செய்தியாளர் சந்திப்பில் பேசிய பேச்சுக்கள் இரு தரப்பையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் இடைவெளி இருக்கும் நிலையில் தற்போது பல மாநிலங்களில் பாஜக தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டது. அந்த வகையில் தமிழகத்திலும் திமுகவுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க வேண்டும் என பாஜக தலைமை விரும்புகிறது.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தாலும் திமுகவுக்கு எதிராக பல இடங்களில் குறிப்பிட தகுந்த வெற்றி பெற்றது. பாமக பாஜக எம்எல்ஏக்கள் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சட்டசபைக்குள் நுழைந்தனர் அந்த வகையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் பாட்டாளி மக்கள் கட்சி பாஜக அதிமுக கூட்டணி தொடர வேண்டும் என பாஜக விரும்புகிறது.

காசி.. பெரியார்! பிரஸ்மீட்டில் கேட்ட ரிப்போர்ட்டர்! நாட்டுக்கு இது தான் தேவையா? கொந்தளித்த அன்புமணி! காசி.. பெரியார்! பிரஸ்மீட்டில் கேட்ட ரிப்போர்ட்டர்! நாட்டுக்கு இது தான் தேவையா? கொந்தளித்த அன்புமணி!

பாஜக தலைமை

பாஜக தலைமை

கூடுதலாக தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை கொண்டு வரவும் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி ஊரக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் தொடராத நிலையில் மீண்டும் அக்கட்சியை கூட்டணிக்கு கொண்டு வர பாஜக தலைமை விரும்புகிறது. பாமகவை பொறுத்தவரை விழுப்புரம்,அரியலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல வட மாவட்டங்களில் வலுவாக இருக்கிறது. குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

பாமக

பாமக

இடையில் அரியலூர் நீர்ப்பாசனத் திட்டம் காவிரி இணைப்பு திட்டம் உள்ளிட்ட விவகாரங்களுக்காக அவர் நடை பயணம் மேற்கொண்டது பாமகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் பாமக குறிப்பிடத் தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என அக்கட்சித் தலைமை நம்புகிறது. சட்டமன்றத் தேர்தலில் அச்சாரமாக நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளவும் அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டு இருக்கிறார். அதே நேரத்தில் பாமக, திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி சேருமா என்பது குறித்த யூகங்கள் கடந்து சில நாட்களாகவே அரசியல் களத்தில் பல யூகங்களை ஏற்படுத்தி வருகிறது.

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

ஒருபுறம் திமுகவுடன் அன்புமணி ராமதாஸ் கூட்டு சேருவார் எனவும் மறுபுறம் பாஜக தலைமையுடன் கூட்டு சேருவார் எனவும் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் பேசிய அன்புமணி ராமதாஸ்,"கூட்டணி குறித்து நான் எங்கேயும் பேசவில்லை. அதற்குள் நீங்களே ஒரு கூட்டணி இருக்கா? இல்லையா? என்பதை போட்டு உள்ளீர்கள். நான் சொன்னது என்ன என்றால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம். அதற்கு ஏற்ப வியூகங்களை 2024 பாராளுமன்ற தேர்தலில் அமைப்போம் என்று தான் சொல்லி இருக்கிறேன்.

திட்டவட்டம்

திட்டவட்டம்

இதில் நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை. எங்களுடைய நோக்கம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்குண்டான யுக்திகளையும், வியூகங்களையும் 2024 பாராளுமன்றத் தேர்தலின் போது எடுப்போம் என கூறியிருந்தார். இந்நிலையில் அன்புமணியின் இந்த பேச்சு தான் தற்போது பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. ஏற்கனவே பாமக தலைவராக அவர் பதவியேற்ற போது பாட்டாளி நல கூட்டணி எனக் கூறி வந்தார். திமுக அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக புதிய கூட்டணி ஒன்றை அமைக்க அவர் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

பாமக தலைமை

பாமக தலைமை

மேலும் பாமக தலைமையில் தான் கூட்டணி எனக் கூறிய அவர் பின்னர் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து கூட்டணி ஆட்சி முறை குறித்தும் பேசியிருந்தார். பாட்டாளி மக்கள் கட்சியை பொருத்தவரை 2026 சட்டமன்ற தேர்தல் தான் அன்புமணியின் குறியாக இருக்கும் நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் என்ன முடிவு எடுப்பார் என பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக யோசித்து வருகின்றன. ஒருவேளை தனித்துப் போட்டி என அன்புமணி ராமதாஸ் முடிவெடுத்தால் அது வட மாவட்டங்களில் அதிமுக பாஜகவுக்கு பின்னடைவாகவும், திமுகவுக்கு சாதகமாகவே அமையும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

English summary
Just as the BJP leadership has been actively trying for a merger over the AIADMK single leadership issue, it also wants to bring the PMK back into the AIADMK alliance. But Anbumani's speech at the press conference has shocked both sides.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X