8.45 - 11.. உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனதும் முதல் வேலை இதுதான்.. ரெடியான பிளான்! என்ன நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அமைச்சராக பொறுப்பேற்க உள்ள உதயநிதி ஸ்டாலின் இன்று பல்வேறு சந்திப்புகளை, பயணங்களை மேற்கொள்ள உள்ளார்.

தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட உள்ளது. உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ இன்று தமிழ்நாடு அமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

இவருக்கு விளையாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் இன்று அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலை 9.30 மணிக்கு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார்.

அமைச்சர் உதயநிதி

அமைச்சர் உதயநிதி

அமைச்சராக பொறுப்பேற்க உள்ள உதயநிதி ஸ்டாலின் இன்று பல்வேறு சந்திப்புகளை, பயணங்களை மேற்கொள்ள உள்ளார். அதன்படி இன்று காலை 8.45 மணிக்கு அவர் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளார். அவரிடம் நேரில் வாழ்த்து பெறுகிறார். பின்னர் அங்கிருந்து உதயநிதி ஸ்டாலின் 9 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு செல்லவிருக்கிறார். இதற்காக உதயநிதி ஸ்டாலின் தனது சொந்த காரை, அதாவது தனி காரை பயன்படுத்த உள்ளார். அதன்பின் 9.30 மணி அமைச்சராக பதவி பிரமாணம் ஏற்கிறார்.

ஸ்டாலின் குடும்பத்தினர்

ஸ்டாலின் குடும்பத்தினர்

ராஜ்பவனில் நடக்கும் இந்த விழாவில் ஸ்டாலின் குடும்பத்தினர் உட்பட 500 நபர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த நிகழ்ச்சிக்காக அழைப்பு சென்றுள்ளது. கூட்டணி தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு சென்றுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இங்கே பதவி ஏற்பு முடிந்ததும் உதயநிதி ஸ்டாலின், அங்கே இருப்பவர்களிடம் ஆசி வாங்க உள்ளனர். அவரிகளிடம் சில நிமிடங்கள் பேசி வாழ்த்து பெற இருக்கிறார். இந்த நிகழ்விற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு சென்று உள்ளது. ஆனால் எடப்பாடி இதில் கலந்து கொள்வது சந்தேகம்தான்.

புதிய அரசு கார்

புதிய அரசு கார்

அதன்பின் உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய அரசு கார் வழங்கப்பட உள்ளது. அமைச்சராக பதவி ஏற்ற பின் வழங்கப்படும் அரசு கார் அவருக்கு வழங்கப்பட உள்ளது. இந்த காரில் 10 மணிக்கு அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு செல்கிறார். அங்கு உதயநிதி ஸ்டாலின் இருவரின் நினைவிடத்திலும் மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்வில் 500 தொண்டர்கள் வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் 10.15 மணி அளவில் தலைமைச் செயலகத்திற்கு உதயநிதி ஸ்டாலின் செல்கிறார். அங்கு தனியாக அமைச்சராக கையெழுத்து போட்டு முறையாக பொறுபேற்க உள்ளார். அதன்பின் தன்னுடைய அமைச்சரவை அலுவலகத்திற்கு உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக செல்ல உள்ளார்.

புதிய அறை

புதிய அறை

அவருக்காக புதிய அறை ஒன்று தயார் செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 3 நாட்களாக இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 10.30 மணிக்கு பெரியார் திடலில் மரியாதை செலுத்துகிறார். இதையடுத்து 11 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் இல்லத்திற்கு சென்று அங்கு அவரின் குடும்பத்தினரிடம் மரியாதையை செலுத்த உள்ளார். அவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவிக்க உள்ளார். பின்னர் 11. 30 மணிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு உதயநிதி ஸ்டாலின் செல்ல உள்ளார். அங்கு குடும்பத்தினரை சந்திக்க உள்ளார். கனிமொழி எம்பி உள்ளிட்டோரை இங்கு உதயநிதி ஸ்டாலின் சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சி.ஐ.டி காலணி

சி.ஐ.டி காலணி

அதன்பின் 11.45 மணிக்கு சி.ஐ.டி காலணியில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் இல்லத்திற்கு உதயநிதி ஸ்டாலின் செல்கிறார். அங்கும் குடும்பத்தினரை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற உள்ளார். அமைச்சராக பதவியேற்றவுடன், பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார் உதயநிதி. அமைச்சர் ஆனதும் உதயநிதியின் முதல் வேலை இதுதான் என்று கூறப்படுகிறது. அமைச்சரானதும் கோட்டையில் உள்ள தனது அறைக்கு வரும் உதயநிதியை சந்தித்து வாழ்த்துச் சொல்லவிருக்கிறார்கள் அமைச்சர்கள். இதற்காக விலை உயர்ந்த பொக்கேக்களுக்கு அமைச்சர்கள் அனைவரும் ஆர்டர் கொடுத்துள்ளனர்.

முதல் கையெழுத்து

முதல் கையெழுத்து

இந்த நிலையில், அமைச்சர் பொறுப்பேற்றதும் தனது துறை சார்ந்து முதல் கையெழுத்து போடுகிற வைபவம் நடக்க வேண்டும் என உதயநிதிக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவித்துள்ளனர். அதனால், அவர் துறை சார்ந்து புதிய அறிவிப்புகள் செய்யவும், என்ன மாதிரியான அறிவிப்புகளை செய்வது எனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாம். அமைச்சரான பின் இந்த வாரம் அவரின் சொந்த தொகுதியான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை உதயநிதி பார்வையிட திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+