"தமிழக சட்டசபை மரபு என்ன!" தேசிய கீதம் வாசிக்கவில்லை என்ற ஆளுநருக்கு Ex சபாநாயகர் ஆவுடையப்பன் பதில்
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் ஆரம்பத்தில் தேசிய கீதம் வாசிக்கப்படவில்லை என்று ஆளுநர் ரவி கூறியிருந்த நிலையில், இது தொடர்பாக முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு அடுத்த வாரம் தனது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநரின் உரையுடன் தான் தொடங்கும்.

அதன்படி இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இன்று கூட்டத்தொடர் ஆளுநரின் உரையுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவையில் நடந்தது முற்றிலும் வேறாக அமைந்தது.
மறுப்பு: இன்று காலை வழக்கம் போலச் சட்டசபை கூடிய நிலையில், ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசிக்க மறுத்துவிட்டார். அதற்கு அவர் இரண்டு காரணங்கள் சொல்லியிருந்தார். அதாவது பொதுவாக ஆளுநர் உரை என்பது அரசின் பாலிசி உரை தான். இதை அரசு தான் தயார் செய்து கொடுக்கும்.. அதை ஆளுநர் வாசிக்க மட்டுமே செய்வார். ஆனால், தமிழக அரசின் உரையில் உள்ள சில கருத்துகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் எனவே இதை வாசித்தால் அரசியல் சாசன பதவியை கேலிக்குள்ளாக்குவதாக அமையும் எனக் குறிப்பிட்டார்.
அதைவிட முக்கிய காரணமாகத் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதாவது தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் வாசிக்கப்பட வேண்டும் எனத் தான் குறிப்பிட்டதாகவும் இருப்பினும் தொடக்கத்தில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்த இரண்டு காரணங்களையும் குறிப்பிட்ட ஆளுநர் ரவி தனது உரையை வாசிக்கவே இல்லை. தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் விடுவது இதுவே முதல்முறை.
மரபு என்ன: இதற்கிடையே தமிழ்நாடு சட்டசபையின் மரபு என்ன.. ஆளுநர் செயல்பாடுகள் சரியா என்பது குறித்து முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாகத் தனியார் டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து.. அதன் பிறகு சட்டசபை நடவடிக்கைகள்.. முடிவில் தேசிய கீதம். இதுதான் நடைமுறை.. தமிழ்நாடு சட்டசபையின் நடைமுறை இதுதான். அனைத்து விஷயங்களிலும் தமிழ்நாடு அரசுக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்ற முடிவில் ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.
முதல்வர் ஸ்டாலின் சொன்னது போல ஆளுநரின் இதுபோன்ற செயல்பாடுகள் திமுகவுக்கு நல்லதுதான்.. எங்கள் குற்றச்சாட்டுகள் சரி என்பதற்கு இது வலுசேர்க்கிறது. அவர் எப்போதும் அரசுக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்ற மனநிலையில் உள்ளார். ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் என்று நாங்கள் சொல்வதற்கான காரணமே இதுதான்.

மாற்ற வேண்டும்: நியமன பொறுப்பில் இருக்கும் ஒருவர் மரபுக்கு எதிராக நடந்து வருகிறார். தனக்கு விதிவிலக்கு இருக்கிறது என நினைத்துக் கொண்டிருக்கிறார். எனவே, அவரை மாற்ற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மரபு இருக்கும்.. அதன்படி தமிழ்நாட்டில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து.. அதன் பிறகு சட்டசபை நடவடிக்கைகள்.. முடிவில் தேசிய கீதம். இதுதான் மரபு.. இந்த மரபை அவரால் மாற்ற முடியாது" என்று அவர் தெரிவித்தார். கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் தமிழக சட்டசபையின் சபாநாயகராக இருந்தவர் ஆவுடையப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications