"என்ன மாதிரியான கட்சி இது.. கரூரில் இருந்து தவெக நிர்வாகிகள் ஓடியது ஏன்.." சென்னை ஐகோர்ட் காட்டம்
சென்னை: அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகளை வகுக்க கோரித் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை ஐகோர்ட் நீதிபதி கரூர் துயரத்தைக் குறிப்பிட்டு காட்டமான கருத்துகளைக் கூறினர். அதை மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு எனக் குறிப்பிட்ட நீதிபதி, தவெக என்ன மாதிரியான கட்சி என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.
கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது மிக மோசமான ஒரு சம்பவம் நடந்தது.. அங்குக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்திருந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தை போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே இது தொடர்பாகப் பல வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகளை வகுக்கக் கோரி பி.எச்.தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விசாரணை
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி மிகக் காட்டமான கருத்துகளைத் தெரிவித்தார். முதலில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு நீதிபதி செந்தில் குமார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்
வழக்கு விசாரணையின் போது, விஜய் பிரச்சார வாகனம் வந்தபோது இரண்டு வாகனங்களை இடித்து விழுந்ததைப் பார்த்தீர்களா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். ஏன் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யவில்லை என்றும் வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் ஏதேனும் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா என்றும் கேள்வி எழுப்பினார்.
வேதனை
நீதிபதி மேலும் கூறுகையில், "அங்கு நடந்த சம்பவத்தின் வீடியோவை பார்க்கும்போதே மிகுந்த வேதனையாக இருக்கிறது. இந்த சம்பவத்தில் இதுவரை இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.. இவ்வளவு நடந்த பிறகும் காவல் துறை கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியாது.
முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என அனைவரும் சம்பவ இடம் சென்றுள்ளனர்.. பாதிக்கப்பட்டோரை நேரில் பார்த்துள்ளனர். இந்த நிகழ்வு நடந்த பின் குடியரசு தலைவர், பிரதமர், முதலமைச்சர் என அனைவரும் வருத்தம் தெரிவித்தனர். எல்லாக் கட்சிகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், நிகழ்வை ஏற்பாடு செய்த கட்சியினர் மொத்தமாக வெளியேறி இருக்கிறார்கள்.
தலைமைப் பண்பே இல்லை
உலகமே இந்தச் சம்பவத்தைப் பார்த்திருக்கிறது.. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள், தலைவர் எல்லாரும் தொண்டர்களை, ரசிகர்களை, மக்களைக் கைவிட்டுப் பொறுப்பற்ற முறையில் வெளியேறியுள்ளனர்.. இந்த நிகழ்ச்சியின் தலைவர் மொத்தமாக மறந்து விட்டார்" என்றார். மேலும், அவருக்குத் தலைமைப் பண்பே இல்லை என்றும் நீதிபதி கூறினார். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றும் அரசு அமைதியாக இருக்கக் கூடாது என்றும் கூறிய நீதிபதி, கரூரில் நடந்த சம்பவத்தை மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு (Man made disaster) என்று குறிப்பிட்டார்.
தவெக என்ன மாதிரியான கட்சி
கரூர் பிரச்சாரத்திற்குப் பல்வேறு விதிமுறைகள் கொடுக்கப்பட்டதாகவும் அதில் இரு நிபந்தனைகள் மட்டும் பூர்த்தி செய்யப்பட்டன என்றும் மீதமுள்ள நிபந்தனைகள் மீறப்பட்டன என்றும் அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, "என்ன மாதிரியான கட்சி இது.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தவெக கட்சிக்கு என்ன தடையாக இருந்தது?" என்று மிக காட்டமான கேள்விகளை எழுப்பினார்.
-
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
விஜய்யின் பெயரை கூட தவறாக சொன்ன கர்நாடகா அமைச்சர்.. இப்படி செய்வாருனு யாரும் எதிர்பார்க்கலை -
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார் -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
"டாஸ்மாக் கடைகளில் MRP-ஐ மீறி 1 ரூபாய் கூட வாங்க கூடாது.. தவறு செய்தால் டிஸ்மிஸ்”.. அமைச்சர் அதிரடி! -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம்











Click it and Unblock the Notifications