ஆளுநர் ரவி வெளிநடப்பு.. "நீங்க என்ன நினைக்கறீங்க?" வந்து விழுந்த கேள்வி! தமிழிசை சொன்ன பதிலை பாருங்க
சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபையில் இருந்து தேசிய கீதம் பாடும் முன்னரே ஆளுநர் வெளியேறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், இது குறித்து புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் எழுப்பியனர்.
இந்தாண்டில் முதல் சட்டசபை கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் சட்டசபை தொடங்கியது. இருப்பினும், அவர் அரசு உரையை அப்படியே வாசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தமிழக அரசு அளித்த உரையில் சில வார்த்தைகளை அவர் நீக்கியும் சேர்த்தும் பேசியதாகப் புகார்கள் எழுந்தன. குறிப்பாகத் தமிழ்நாடு அரசு என்ற வார்த்தைக்குப் பதிலாக இந்த அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார்.

ஆளுநர் vs தமிழக அரசு
அதேபோல அண்ணா, பெரியார், அம்பேத்கர் ஆகிய பெயர்களைக் கொண்ட பத்தியையும் அவர் படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், ஆளுநர் பேசியது அவை குறிப்பில் ஏறக் கூடாது என்றும் அரசு கொடுத்த உரையைச் சட்டசபை அவை குறிப்பில் ஏற வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் கொண்டு வந்தார். முதல்வர் இந்த தீர்மானம் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர் அவையில் இருந்து கிளம்பினார். தேசிய கீதம் பாடுவதற்கு முன்னரே அவர் அவையில் இருந்து இப்படிக் கிளம்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரி
இது தொடர்பாகப் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இது குறித்த கேள்விக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசையும் பதிலளித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் விழா புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அனைத்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட காவல் துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய பொங்கல் விழா
பொங்கல் விழாவில் அலங்கரிக்கப்பட்ட பொங்கல் பானையில் வெள்ளம் பச்சரிசியிட்டு பெண்கள் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய உரி அடித்தல் கிராமிய நடனம், கரகாட்டம், பாரம்பரிய ஆட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகளில் பொங்கலோ பொங்கல் எனக் கோஷமிட்டபடி ஆளுநர் மாளிகையில் வலம் வந்து பொங்கல் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடினார்கள்.

ஆளுநர் தமிழிசை
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், "நாடு பெருமை கொள்ளும் வகையிலும், ஜி.20 நாடுகளின் மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நாடு முழுக்க நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல் கூட்டம் புதுச்சேரி நடைபெறுகின்றது.. அதனால் இதை ஜி.20 பொங்கல் விழாவாக நடத்தப்பட்டுள்ளது.

பால் விலையேற்றம்
மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றது. பால் விலையேற்றப்பட்டுள்ளது வலி மிகுதியாகத்தான். பெண் என்ற முறையில் எனக்கு வருத்தம் தான்.. எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்றாலும் கூட நிர்வாக ரீதியாக எடுக்கும் சில முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.. சில கோப்புகளை நாம் தாமதம் செய்வதாக எதிர்க்கட்சிகள் சொல்கிறார்கள். ஆனால், உண்மை இது இல்லை. எந்த கோப்பையும் நான் நிலுவையில் வைத்தது இல்லை.

ஆளுநர் விவகாரம்
ரேசன் கடைகள் திறக்கும் கோப்பு பரிசீலனையில் இருக்கின்றது. இதனால் தான் தாமதம் ஏற்பட்டுள்ளது. வேறு எந்த கோப்பும் நிலுவையில் இல்லை.. முதலமைச்சர் அறிவித்த அனைத்தைத் திட்டங்களுக்கான கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளேன்" என்றார். தொடர்ந்து மிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு இது குறித்து எந்த கருத்தும் கூற விரும்பவில்லை எனத் துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications