ஜெய்பீம் சூர்யாவுக்கு சந்தானம் அறிவுரை..! யாரையும் உயர்த்திக் காட்ட யாரையும் தாழ்த்திக் காட்டாதீங்க..!
சென்னை: சினிமாவில் எதனை வேண்டுமானாலும் உயர்த்திக் காட்டலாம்; அப்படி உயர்த்திக் காட்டுவதற்காக இன்னொன்றை தாழ்த்தி காட்டக் கூடாது என ஜெய்பீம் திரைப்படத்தை முன்வைத்து நடிகர் சூர்யாவுக்கு நகைச்சுவை நடிகர் சந்தானம் அறிவுரை வழங்கி உள்ளார்..
Recommended Video
ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் திரை உலகம் பெரும்பாலும் நடிகர் சூர்யாவுக்கும் இயக்குநர் ஞானவேலுவுக்கும் ஆதரவாக இருக்கிறது. திரை உலக சங்கங்கள், இயக்கங்களும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
அரசியல் கட்சிகளில் பாமக, பாஜக தவிர அனைத்து கட்சிகளும் நடிகர் சூர்யாவை ஆதரிக்கின்றன. சென்னையில் நேற்று நடைபெற்ற சபாபதி படம் தொடர்பான நிகழ்ச்சியில் நடிகர் சந்தானமும் ஜெய்பீம் குறித்து பேசினார்.

உயர்ந்ததுன்னு பேசுங்க சரி...
சபாபதி பட நிகழ்வில் சந்தானம் பேசியதாவது: ஜெய்பீம் படமாக இருந்தாலும் எந்த படமானாலும் நாம் சொல்றது இதுதான்..நாம ஒரு கருத்தை சொல்றோம். பேசறோம்னா நான் இந்துயிசத்தை பற்றி பேசற.. இந்துன்னு பேசறன்னா நான் சூப்பர்.. உயர்ந்ததுன்னு என்ன வேணும்னாலும் பேசலாம். அது பிரச்சனை கிடையாது.

தாழ்த்தி பேசுவது தேவை இல்லை
ஆனா கிறிஸ்டியன் தப்பு.. அவன் தாழ்த்தப்பட்டவன்னு பேசக் கூடாது. எது நம்ம கருத்தோ அதை தூக்கி பேசலாம். அடுத்தவங்க ஹர்ட் பண்ற மாதிரி அவங்களை அமுக்கி பேசக் கூடாது. அது தேவையில்லாத விஷயம்.

ஜெய்பீம் தப்புதான்
சினிமாங்கிறது 2 மணிநேரம் லைட் ஆப் பண்ணிட்டு எல்லாரும் எல்லா ஜாதிக்காரர்களும் மதத்துக்காரங்களும் பார்க்கிறது. அங்க இது தேவைப்படாத விஷயம். நீங்க இந்துமதத்தை தூக்கிகாட்டுங்க.. அல்லது எதை பிடிச்சிருக்கோ அதை தூக்கி காட்டுங்க. அது பிரச்சனை கிடையாது. ஆனா அடுத்தவனை தாழ்த்தி காட்டாதீங்க.. இந்து மதம் சூப்பர்னா அதை சொல்லுங்க.. அதுக்காக கிறிஸ்டியானிட்டியை தாழ்த்த கூடாது.. அதுதான் என் கருத்து. நாம எதனை வேணும்னாலும் தூக்கி பேசலாம்.. அது பிரச்சனையே இல்லை. இவ்வாறு சந்தானம் பேசினார்.

சந்தானத்துக்கு எதிர்ப்பு
சந்தானத்தின் இந்த பேச்சு கடுமையான விவாதப் பொருளாகி இருக்கிறது. தாம் நடித்த படங்களில் உருவங்களை வைத்து மிக இழிவாக கேலி செய்து பேசியவர் சந்தானம்; மாற்று திறனாளிகளைக் கூட சைடு ஸ்டாண்டு என கிண்டலடித்தவர் சந்தானம். சினிமாவில் மற்றவர்களைத் தாழ்த்திக் காட்டக் கூடாது என நடிகர் சந்தானம் அட்வைஸ் செய்வதை அவர் முதலில் கடைபிடிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications