"எப்படி இதை சாப்பிடறாங்க.." சைவம் சாப்பிடறவங்கள பார்த்தாலே எனக்கு பாவமா இருக்கும்.. ரஜினிகாந்த் கலகல

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சாருகேசி திரைப்பட அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் தனது இளமைக் காலம் குறித்தும்.. அப்போது உடல்நிலை எப்படி இருந்தது என்பது குறித்தும் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அப்போதும் சரி இப்போதும் சரி என்றும் வசூல் சக்கரவர்த்தியாக உள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இன்றும் கூட சிறியவர் முதல் பெரியவர் வரை பல கோடிக்கணக்கான ரசிகர்களைத் தன்வசம் வைத்துள்ளார். அவரது ஸ்டைலை கண்டு மயங்காத ரசிகர்களே இல்லை என்று சொல்லலாம். அந்தளவுக்கு டாப் நட்சத்திரமாக உள்ளார்.

ரஜினி

ரஜினி

ரஜினிகாந்த் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த.. சிவா இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படம் கடந்த 2021இல் கொரோனாவுக்கு மத்தியில் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்தச் சூழலில் இப்போது அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெய்லர் திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 பேச்சு

பேச்சு

இந்தச் சூழலில் சென்னையில் சாருகேசி திரைப்பட அறிமுக விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தனது இளமைக் காலம் குறித்தும்.. அப்போது உடல்நிலை எப்படி இருந்தது.. அதன் பிறகு மனைவி தன்னை எப்படி மாற்றினார் என்பது குறித்தும் நெகிழ்ச்சியான சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். குறிப்பாக அசைவம், சிகரெட், மது குறித்த அவரது பேச்சை அனைவரையும் கலகலப்பாகிவிட்டது. இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

 கெட்ட சினேகிதர்கள்

கெட்ட சினேகிதர்கள்

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரஜினி, "இப்போது எனக்கு 73க்கு வயதாகிறது. இந்த வயதில் நான் இந்தளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால் அதற்கு எனது மனைவிதான் காரணம். நடத்துநராக இருந்த காலத்தில் எனக்கு சில கெட்ட சினேகிதர்களுடன் கிடைத்த சகவாசம் காரணமாக எனக்கு சில கெட்ட பழக்கங்கள் வந்தது. நடத்துநராக இருந்த போதே.. நான் தினசரி இரண்டு வேளை அசைவம் அதுவும் மட்டன் தான் சாப்பிட்டு வந்தேன். மேலும், தினமும் மதுவும் குடித்து வந்தேன். சிகரெட்டும் கூட கணக்கே இல்லாமல் இருக்கும்.

 சைவத்திற்கு நோ நோ

சைவத்திற்கு நோ நோ

நடத்துநராக இருந்த போது இப்படி என்றால் இருந்தது.. அப்போது படத்தில் நடித்துப் பெயர் புகழ் வந்த பிறகு எந்தளவுக்கு இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். காலையிலேயே பாயா, ஆப்பம், சிக்கன் 65 தான் சாப்பிடுவேன்.. சைவம் சாப்பிடுபவர்களைப் பார்த்தாலே எனக்குப் பாவமாக இருக்கும். ஆடு, மாடு சாப்பிடும் இதை எப்படி சாப்பிடுகிறார்கள் என நினைப்பேன்.. ஆனால், இப்போது நிலைப்பாட்டை மாற்றியுள்ளேன்.

 சிகரெட், மது, நான் வெஜ்

சிகரெட், மது, நான் வெஜ்

சிகரெட், மது, நான் வெஜ் ஆகியவை மிகவும் மோசமான கலவை.. இந்த மூன்றையும் நீண்ட காலத்திற்கு அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டவர்கள் யாரும் எனக்குத் தெரிந்து 60 வயதைக் கடந்து வாழ்ந்தது இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்கள் படுக்கையில் படுத்த படுக்கையாகவே உள்ளனர். எழுந்து கூட நடக்க முடியாத நிலையிலேயே உள்ளனர். இதற்குப் பலரையும் உதாரணமாகச் சொல்லலாம்.

 அன்பால் மாற்றிய மனைவி

அன்பால் மாற்றிய மனைவி

இப்படி இருந்த என்னை அன்பாலேயே மாற்றியவர் எனது மனைவி.. இதுபோன்ற பழக்கங்களை யார் சொன்னாலும் உடனடியாக விட்டுவிட முடியாது. இருப்பினும், அன்பால் அவர் தான் என்னை மாற்றினார். உரிய மருத்துவர்களை அழைத்து வந்து அறிவுரை கொடுத்தார். திருமணத்திற்கு முன்பு நான் எப்படி இருந்தேன்.. திருமணத்திற்குப் பிறகு எப்படி இருந்தேன் என்பதை எனது படங்களைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். இதற்காகவே நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+