வீரமணிக்கு பதிலடி தந்தாரே காமாட்சிபுரி ஆதீனம்.. இப்ப அரசுக்கு புது கோரிக்கை.. "குண்டாசில் போடுங்க"
கோவை காமாட்சிபுரி ஆதீனம் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளார்
சென்னை: மத நம்பிக்கையை தொடர்ந்து புண்படுத்துவோர் குறித்து காமாட்சிபுரி ஆதீனம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
2022-ம் ஆண்டுக்கான பட்டினப் பிரவேச விழாவில் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச்செல்வது மனித உரிமையை மீறிய செயல் என்று புகார் எழுந்தது.
தருமபுரம் ஆதீனத்தைப் பல்லக்கில் தூக்கி, சில தினங்களுக்கு முன்பு சென்றனர். தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் செல்ல கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இதனை கண்டித்திருந்தார்.

சங்கராச்சாரியார்
பெரியார் பேச்சைக் கேட்டு மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியே பல்லக்கை விட்டுக் கீழே இறங்கி நடந்து சென்றார். இடையில் கைவிடப்பட்ட பல்லக்கு பழக்கம் மீண்டும் ஏன்? திமுகவுக்கு எதிராக அரசியல் நடத்த எதிர்க்கட்சிகளுக்கு ஆயுதமாக இந்த விவகாரம் பார்க்கப்படுகிறது.. ரிக்ஷா இழுத்தோர் இப்போது ஆட்டோ ஓட்டுநர்களாக மாறியுள்ளனரே? என்று வீரமணி அப்போது காட்டமாக கூறியிருந்தார்.

வீரமணிக்கு பதில்
இதற்கு மூத்த ஆதீனங்களில் ஒருவரான காமாட்சிபுரி ஆதீனம் உடனடியாக பதிலளித்திருந்தார். "மனிதனை மனிதன் சுமப்பது தவறென நாங்களும் கூறுகிறோம், கடவுளாக இருக்கக்கூடிய குருவுக்கு பல்லக்கு தூக்கப்படுகிறது, ஆனால், சுமக்கிறார்கள் எனக்கூறக்கூடாது, பல்லக்கில் எழுந்தருளுகிறார் என்று சொல்ல வேண்டும் என வீரமணிக்கு பதில் தந்திருந்தார்.

ஆபாச வார்த்தை
இப்போது மத நம்பிக்கையை புண்படுத்துவோர் குறித்து அடுத்த விவகாரத்தை கொண்டு வந்துள்ளார் காமாசிபுரி ஆதீனம்.. காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இதை பற்றி சொன்னதாவது: பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோவில், உலகிலுள்ள சைவ பெருமக்களின் மூல ஸ்தானமாக திகழ்ந்து வருகிறது.. பல கோடிக்கணக்கான பக்தர்களின் மனதில் நிறைந்துள்ள நடராஜர் குறித்து, ஆபாச வார்த்தைகளால் ஒருவர் சித்தரித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

சிவனடியார்கள்
இது ஆதீன பெருமக்கள், சிவனடியார்கள், மடாதிபதிகள், பக்தர்களிடையே மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி வருகிறது.. தமிழகத்தில் இதுபோன்ற செயல்கள் அவ்வப்போது ஏற்பட்டு பெரும் பிரச்னைகளை உருவாக்குகின்றன... இதற்கு எதிராக ஹிந்துக்கள் போராட்டம் நடத்தினாலும் அதற்கு உரிய தீர்வு ஏற்படுவதில்லை... எனவே, மத நம்பிக்கையை புண்படுத்தும் இதுபோன்ற சமூக விரோதிகளை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க, அரசு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவது அவசியம்" என்று முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications