சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டில் இன்று வானிலை எப்படி இருக்கும்? எங்கெல்லாம் மழை பெய்யும்.. சென்னை வானிலை மைய ரிப்போர்ட்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்று வானிலை எப்படி இருக்கும்.. மழை எங்கெல்லாம் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த வாரம்தான் புயல் தாக்கியது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த 'மாண்டஸ்' புயல் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு கரையை கடந்தது. மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்து வலிமை இழந்தது.

மாஸ் காட்டிய இந்தியா.. வெலவெலத்த சீனா! வடகொரியா மாடலா? 5,000 கிமீ பாயும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி மாஸ் காட்டிய இந்தியா.. வெலவெலத்த சீனா! வடகொரியா மாடலா? 5,000 கிமீ பாயும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி

புயல்

புயல்

அதி தீவிர புயலாக இருந்த இந்த மாண்டஸ் புயல் வலிமை குறைந்தது. கரையை கடந்த பின் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து வட தமிழக பகுதிகளில் நிலவி வந்தது. இதன் பின் மேலும் நகர்ந்த புயல் தற்போது அரபிக்கடலை நோக்கி சென்றுள்ளது. இதனால் இன்னும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இந்த புயல் காரணமாக பெரிய சேதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டதால், புயலால் ஏற்பட வேண்டிய சேதம் தவிர்க்கப்பட்டது. அதேபோல் மிகப்பெரிய அளவில் வெள்ளம் ஏற்படுவதில் இருந்தும் தமிழ்நாடு தப்பியது.

இன்று

இன்று

இதையடுத்து இந்த புயல் முழுவதாக அரபிக்கடலில் சென்று வலுவிழந்துவிட்டது. இதனால் ஏற்பட்ட மேகங்களும் மழையை கொடுத்துவிட்டதால் தமிழ்நாட்டில் தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. அடுத்த வாரம் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வரை தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் 18ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டு உள்ளது.

சென்னை

சென்னை

அதேபோல் 19ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை பெரிதாக மழை இருக்காது. பகல் நேரத்தில் வெயில் இருக்கும். மாலை நேரத்தில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். அதே சமயம் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

மீனவர்கள்

மீனவர்கள்

மீனவர்களை பொறுத்தவரை கடல் பெரிதாக கொந்தளிப்பாக இருக்காது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லலாம். இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் தொடங்கி காற்றின் வேகம் இன்று மாலை படிப்படியாக குறையக்கூடும்.

கடல்

கடல்

மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்றுசூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து நாளை காலை 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கும். மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து நாளை காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும், என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English summary
What will be the weather like in Tamil Nadu today? Chennai Meteorological Department update
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X