Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தான் மீது அணு குண்டை போடும் இந்தியா? போர் வந்தால் இந்த 6 விஷயம் கண்டிப்பாக நடக்கும்? ஷாக்கிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் இரண்டு அணு சக்தி நாடுகளில் எந்த நாட்டிற்கு அதிக அணு சக்தி உள்ளது என்று இங்கே பார்க்கலாம். அதேபோல் அணு போர் நடந்தால்.. என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

இந்தியா மீது அணு ஆயுதம் உட்பட பல வகையான ஆயுதங்களை பயன்படுத்த கூட பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று ரஷ்யாவிற்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி எச்சரித்து உள்ளார். ரஷ்யாவிற்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி விடுத்த எச்சரிக்கையில், இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தை பெரிதாக்கி வருகின்றன. இதில் தேவையின்றி பாகிஸ்தான் மீது பழி போடுகிறார்கள். அது தவறு. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதற்கு தேவையின்றி திட்டங்களை வகுக்கிறார்கள்.

லீக்கான ஆவணங்களின்படி பார்த்தால் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த போகிறது. இந்தியாவின் படைகள் பாகிஸ்தானில் சில செக்டார்களில் தாக்குதல் நடத்த திட்டங்களை வகுக்கின்றனர். இதற்கான ஆவணங்கள் கசிந்து உள்ளன. இந்தியா எங்களை தாக்க கூடாது. எங்களை தாக்க நினைத்தால் நாங்கள் திருப்பி தாக்குவோம்.

What will happen if India goes for Nuclear War against Pakistan 6 Major issues
Photo Credit:

அது பலமுனை தாக்குதலாக இருக்கும். யாருக்கு பலம் அதிகம் உள்ளது என்பது பெரிய விஷயம் இல்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தானைப் பொறுத்தவரை, எண்ணிக்கை பலம் குறித்த இந்த விவாதத்தில் நாங்கள் ஈடுபட விரும்பவில்லை. மரபுவழி மற்றும் அணுசக்தி ஆகிய இரண்டிலும் முழு அளவிலான சக்தியையும் நாங்கள் பயன்படுத்துவோம். அதற்கு தயாராகவே இருக்கிறோம், என்று ரஷ்யாவிற்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி எச்சரித்து உள்ளார்.

அணு ஆயுத போர்

அணுசக்தி திறன் அணு ஆயுதங்கள்:

இந்தியா: ~160
பாகிஸ்தான்: ~165

விநியோக அமைப்புகள்:

இந்தியா: நிலம், காற்று, கடல் சார்ந்தது
பாகிஸ்தான்: முதன்மையாக நிலம் மற்றும் வான் அடிப்படையிலானது இந்தியாவை விட பாகிஸ்தானிடம் கூடுதலாக 5 அணு ஆயுதங்கள் இருந்தாலும். இந்தியாவிடம் உள்ளது கூடுதல் பலம் வாய்ந்தது. அதோடு இந்தியாவில் உள்ள அணு ஆயுதங்கள் மூலம் அதிக தூரத்திற்கு தாக்க முடியும். அதோடு நிலம், காற்று, கடல் என்று 3 வழிகளில் தாக்குதல் நடத்த முடியும்.

அணு கோட்பாடு:

இந்தியா: தனியாக பயன்பாட்டுக் கொள்கை இல்லை
பாகிஸ்தான்: அறிவிக்கப்பட்ட கொள்கை இல்லை (தெளிவற்ற நிலைப்பாடு)

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒருவேளை போர் வெடித்தால், மனிதவளம், பாதுகாப்பு பட்ஜெட் மற்றும் நிலம், வான் மற்றும் கடல் படைகள், இராணுவ சொத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் கையே மேலோங்கி இருக்கும். ரஃபேல் போன்ற மேம்பட்ட போர் விமானங்கள், இரண்டு விமானம் தாங்கிகள், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள், விரிவான ஏவுகணை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வலையமைப்பு உள்ளிட்ட பெரிய மற்றும் நவீனமயமாக்கப்பட்ட ஆயுத பாதுகாப்பை இந்தியா கொண்டுள்ளது. அதிநவீன ராணுவ பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்த உள்ள காரணத்தால் இந்தியாவின் பாதுகாப்புத் துறையும் மிகவும் வலுப்படுத்தப்பட்டு உள்ளது.

நடக்க போகும் 6 விஷயங்கள்

இரண்டு நாடுகளுக்கு இடையே அணு போர் நடந்தால்.. என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

அதிக அளவிலான மரணங்கள்

இஸ்லாமாபாத், கராச்சி, டெல்லி மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் சில மணி நேரங்களுக்குள் மில்லியன் கணக்கானவர்கள் இறக்கக்கூடும். கதிர்வீச்சு விளைவு நீண்டகால பாதிப்புகளை, மரணங்களை, சுகாதார நெருக்கடிகளை ஏற்படுத்தும். மேலும் எண்ணற்றோர் தீக்காயங்கள், கதிர்வீச்சு நோய் மற்றும் கேன்சர் பாதிப்புகள், இயற்கை வள பாதிப்புகள் ஏற்படும்.

மொத்த உள்கட்டமைப்பு சரிவு

அணுசக்தி தாக்குதல்கள் முக்கிய உள்கட்டமைப்பை காலி செய்யும். மின்சார நெட்வொர்க்குகள், போக்குவரத்து, தகவல் தொடர்பு, மருத்துவமனைகள் அழிக்கப்படும். இரு நாடுகளின் பொருளாதாரங்களையும் அன்றாட செயல்பாட்டையும் முடக்கும். மீண்டு வர பல வருடங்கள் ஆகலாம்.

சுற்றுச்சூழல் விளைவு

அணு ஆயுத போர் வளிமண்டலத்தில் கடுமையான கசிவை வெளியேற்றி, தெற்காசியாவிலிருந்து வெகு தொலைவில் கூட பாதிப்பு ஏற்படும். முக்கியமாக உலகளாவிய காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும். உணவு உற்பத்தியை சீர்குலைக்கும்.

பாகிஸ்தான் தாக்கும்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டும் அணு ஆயுத திறன்களைக் கொண்டுள்ளன. ஒன்று தாக்கினால், மற்றொன்று கிட்டத்தட்ட நிச்சயமாக பதிலடி கொடுக்கும், இது பரஸ்பர அழிவுக்கு வழிவகுக்கும்.

உலகளாவிய பொருளாதார சரிவு

அணு ஆயுத போர் உலகளாவிய சந்தைகளை பாதிக்கும். குறிப்பாக ஆசியாவின் பொருளாதாரத்தில் பேரழிவிற்கு வழிவகுக்கும். சர்வதேச உறவுகள் ஆட்டம் காணும், மேலும் உலக சக்திகள் ராஜதந்திர ரீதியாகவோ அல்லது இராணுவ ரீதியாகவோ தலையிட்டு, பெரிய மோதலுக்கு வழிவகுக்கும். அதாவது சீனா, அமெரிக்கா, துருக்கி ரஷ்யா போன்றவை இதில் தலையிடலாம். அதாவது உலகப்போரை கூட உருவாக்கும்.

பீதி ஏற்படும்

பீதி, சட்டமின்மை, அகதிகள் நெருக்கடிகள் மற்றும் அரசாங்க ஆட்சி கவிழ்ப்பு, எமர்ஜென்சி போன்றவை ஏற்படலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+