அன்புமணி கேம் ஓவர்? இப்படி ஒரு சங்கடமான நிலையா! எம்பி பதவி முடிவுக்கு வருது? இனி என்ன ஆகுமோ?
சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் ராஜ்ய சபா எம்பி பதவி முடிவிற்கு வர உள்ளது. இதனால் அவருடைய அடுத்த மூவ் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலை , அதன்பின் நடந்த 2021 சட்டசபை தேர்தலை அதிமுக - பாமக ஆகியோர் ஒன்றாக எதிர்கொண்டார்கள். அதன்பின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலிலேயே இவர்களின் கூட்டணி முறிந்துவிட்டது.

அதன்பின் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று பாமக கூறி வருகிறது. அதன்படியே 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி வைக்கவில்லை.
கடுமையான குற்றச்சாட்டு: 2021 சட்டசபை தேர்தலின் போதே அதிமுக தலைவர்கள் சிலர் பாமக போட்டியிடும் தொகுதிகளில் சரியாக வேலை செய்யவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சிகளுக்காக தேர்தல் வேலை செய்வதில்லை, பாமக அதிமுகவிற்கு உதவுவது போல, அதிமுக பாமகவுக்கு உதவவில்லை என்று பாமக தலைவர்கள், நிர்வாகிகள் சட்டசபை தேர்தலின் போதே அதிமுகவிடம் கடிந்து கொண்டனர். தற்போது இதே விஷயத்தை காரணம் காட்டி ராமதாஸ் அதிமுகவை விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் நேரத்தில் நிர்வாகிகளை எடப்பாடி "கண்ட்ரோல்" செய்யவில்லை என்று ராமதாஸ் வெளிப்படையாக குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை. அதிமுகவிற்கு ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை. இதனால் தேர்தல் நேரத்தில் அதிமுக நிர்வாகிகள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. நிர்வாகிகளை சரியாக கட்டுப்படுத்த எடப்பாடிக்கு தெரியவில்லை. இதனால் எடப்பாடியுடன் கூட்டணி வைப்பதில் பலன் இல்லை என்று கூறி ராமதாஸ் அதிமுகவுடனான கூட்டணியை விமர்சனம் செய்துள்ளார். எடப்பாடியை வெளிப்படையாக விமர்சனம் செய்துவிட்டு ராமதாஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளார்.
எம்பி பதவி: பாமக தலைவர் அன்புமணி அதிமுக கூட்டணியில் இல்லை என்றாலும் அதிமுக தயவில் இருந்த எம்பி பதவியில் நீடித்தார். அதிமுக எம்எல்ஏக்கள் உதவியோடு கிடைத்த ராஜ்ய சபா எம்பி பதவியில் அவர் தொடர்ந்து நீடித்தார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் ராஜ்ய சபா எம்பி பதவி முடிவிற்கு வருகிறது. இதனால் அவர் எம்பி பதவி இல்லாமல் தொடரும் நிலை ஏற்பட்டு உள்ளது. இன்னும் 9 மாதங்களில்.. அதாவது 2025 ஜூன் 25ம் தேதியுடன் அன்புமணியின்மாநிலங்களவை எம்பி காலம் முடிவடைகிறது.
அதிமுக கொடுத்த MP சீட் அது. மறுபடியும் MP ஆக வேண்டுமென்றால் திமுக,அதிமுக கூட்டணிகளில் இடம் பெற வேண்டும். இதனால் அவருக்கு மிகப்பெரிய தர்மசங்கடம் ஏற்பட்டு உள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலை , அதன்பின் நடந்த 2021 சட்டசபை தேர்தலை அதிமுக - பாமக ஆகியோர் ஒன்றாக எதிர்கொண்டார்கள். அதன்பின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலிலேயே இவர்களின் கூட்டணி முறிந்துவிட்டது.
அதன்பின் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று பாமக கூறி வருகிறது. அதன்படியே 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி வைக்கவில்லை. இப்போது எம்பி பதவி இல்லாததால் மீண்டும் திராவிட கட்சிகள் பக்கம் பாமக செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications