நீங்க பேசுனது சங்கடமாக இருக்கு.. ராஜ்மோகன் முகத்துக்கு நேராக சொன்ன அமைச்சர் புஸ்சி ஆனந்த்
சென்னை: தமிழ்நாடு நாள் நிகழ்ச்சியில் அமைச்சர் புஸ்சி ஆனந்த், ராஜ்மோகன், வன்னி அரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது ராஜ்மோகன் பேசியது குறித்து அமைச்சர் புஸ்சி ஆனந்த் பேசினார். நீங்க பேசியது எனக்கு சங்கடமாக இருப்பதாக புஸ்சி ஆனந்த் பேசியுள்ளார்.
தமிழ்நாடு நாள் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ராஜ்மோகன், வன்னி அரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழ் மொழி இனிமை குறித்தும் அவசியம் குறித்தும் பேசினார்.

ரூ.5 கோடி தருவதாக
இதற்கு முன் நான் யாரிடமும் சொல்லவில்லை.. தம்பி லயோலா மணிக்கு மட்டும்தான் தெரியும்.. இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியை எனக்கு கொடுக்குமாறும் ரூ.5 கோடி எனக்கு தருவதாகவும் ஒருவர் பேசினார். அதற்கு நான் சிரித்து கொண்டே ரூ.500 கோடி கொடுத்தாலும், யாருக்கும் பொருத்தமில்லாத பதவியை கொடுக்க மாட்டோம். அந்த பதவிக்கு பொருத்தமான புஷ்பவனம் குப்புசாமிக்கு ஒரு ரூபாய் கூட வாங்காமல் நியமனம் செய்தோம்.. என்று பேசியிருந்தார்.
என் உடலோடு திருக்குறள் புத்தகத்தை
உடலோடு சேர்த்து ஒரு திருக்குறள் புத்தகத்தையும் சேர்த்து வைத்து நல்லடக்கம் செய்யுங்கள் என்று உங்கள் அனைவரிடமும் கேட்டேன். ராஜ்மோகனுடைய கடைசி ரத்தம் சுண்டி.. எனது கடைசி மூச்சு நின்று போய் நான் ஒரு நிரந்தர ஓய்வுக்கு சென்ற பிறகு, என்னுடைய தம்பிகள், தங்கைகள் எல்லாரும் வந்து நின்று எனக்கு ஒரு வீர வணக்கம் முழக்கமிட்டு, என் நெஞ்சில் என்னுடைய ரத்தம் எல்லாம் நிறைந்து இருக்கக்கூடிய தவெக தொண்டர் படை வந்து நின்று, எனக்கு பிரியா விடை கொடுப்பீர்களே.. அப்போது என் உடலோடு திருக்குறள் புக்கை வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என கேட்டேன்.. என்றார்.
சங்கடமாக இருந்தது
இதையடுத்து பேசிய அமைச்சர் புஸ்சி ஆனந்த், ராஜ்மோகன் அண்ணன் சொன்னார்.. திருக்குறள் உடலை வைத்து என்னுடைய நல்லடக்கம் என பேசினார். அவர் அப்படி பேசும் போது எனக்கு ரொம்ப சங்கடமாக இருக்கிறது. ஏன் என்று சொன்னால் இன்னும் கல்வித்துறையில் ஊழல் இல்லாமல் மாற்றியிருக்கிறார் என ஒரு பெரியவர் என்னிடம் கூறினார். அதனால் நீங்க 100 வருஷம் நல்லா இருக்கனும்.
நாங்க எல்லாரும் இருக்கோம். உங்களை விட்டு விட மாட்டோம். எல்லாத்துக்கு மேல உங்க அண்ணன் தலைவர் உங்க கூட இருக்கிறார். அதனால் நீங்க பேசியது எனக்கு சங்கடமாக இருந்தது. நீங்க நூறாண்டுகள் அதற்கு மேலும் நீங்கள் வாழ வேண்டும் என இறைவனை பிரார்தனை செய்கிறேன்.. என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
