• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"அந்த" முயற்சியெல்லாம்.. அப்படியே நின்னு போச்சாமே.. அப்படின்னா சசிகலா.. ஓபிஎஸ்??!

|

சென்னை: ஓபிஎஸ் அப்படியே சசிகலா பக்கம் சாய்வதாக தெரிகிறதாம்.. அதனாலேயே அவர் மீது பாஜக அதிருப்தியில் இருக்கலாம் என்றும், சசிகலா இணைப்பை தற்போதைக்கு நிறுத்தி வைத்திருக்கலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

இவ்வளவு மாதங்களாக ஒரு பேச்சு இருந்து கொண்டே இருந்தது.. வலிமை பொருந்தி வரும் திமுகவை சமாளிக்க, சசிகலா தலைமையில் கட்சிகளை ஒன்றிணைக்கலாம் என்ற யோசனை பாஜக மேலிடத்துக்கு இருந்தது.

இது சம்பந்தமாக எடப்பாடியாரிடம் பேசப்பட்டதாகவும், ஆனால் அதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் தகவல்கள் கசிந்தன..

 பாஜக

பாஜக

எனினும், சசிகலா வந்தவுடன் இது சம்பந்தமான நடவடிக்கையை பாஜக எடுக்கும் அல்லது பிரதமர் சென்னை வந்த பிறகாவது இது தொடர்பாக ஏதாவது விஷயம் வெளிப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது எல்லாம் வெறும் யூகமாகவே பறந்துவிட்டது மட்டுமல்ல, பிரதமரை முதல்வர் மட்டும் தனியாக சந்தித்து பேசியது அதற்கு மேல் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது. எனவே, இப்போது, பாஜக என்ன நினைக்கிறது என்று தெரியவில்லை.. இது சம்பந்தமாக ஒருசில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது:

அதிமுக

அதிமுக

"அநேகமாக அமமுக, அதிமுக கட்சிகளை இணைக்கும் முயற்சி அப்படியே நின்றுவிட்டதாகவே தெரிகிறது.. மோடியை பொறுத்தவரை, சசிகலா தரப்பை வேண்டாம் என்று நினைப்பது போலவும் தோன்றுகிறது.. இதற்கு காரணம், அமமுக, அதிமுக வாக்குகள் ஒன்றாக இணைந்தால், திமுகவை காலி செய்துவிடலாம் என்றுதான் ஆரம்பத்தில் கணக்கு போடப்பட்டது..

 வாக்குகள்

வாக்குகள்

ஆனால், இப்போது அப்படி ஒரு மன நிலையில் பாஜக இல்லை.. டிடிவி தினகரன் அன்று பெற்ற வாக்குகள் அனைத்துமே பாஜகவுக்கு எதிரான வாக்குகள்தான்.. அதிமுகவுக்கு எதிரான வாக்குகள்தான்.. அப்படி இருக்கும்போது, அவரை இப்போது கட்சிக்குள் சேர்த்தால், அந்த வாக்குகள் எல்லாம் அதிமுக-பாஜக கூட்டணிக்கு எப்படி வரும்? நிச்சயம் திமுகவுக்குதானே அதுலாபமாக போய் முடியும் என்று எடப்பாடி தரப்பில் எடுத்து சொல்லப்பட்டதாம்.. அதனாலேயே சசிகலா வருகையை பாஜக தலைமை இப்போதைக்கு விரும்பவில்லை என தெரிகிறது.

 அதிருப்தி

அதிருப்தி

இதில் ஓபிஎஸ் விஷயத்தையும் இங்கே கவனிக்க வேண்டி உள்ளது.. அவர் லைட்டாக சசிகலா பக்கம் சாய ஆரம்பித்துள்ளது போல தெரிந்துள்ளது.. இவர் பாஜகவுடன் இணக்கமாகவேதான் ஆரம்பத்தில் இருந்துள்ளார்.. அக்கட்சி சொன்னபடிதான் அனைத்தையும் கேட்டு வந்துள்ள நிலையில், திடீரென சில உள்ளடி வேலைகளையும் ஓபிஎஸ் செய்ய ஆரம்பித்ததுதான், பாஜகவுக்கே கொஞ்சம் அதிருப்தியை தந்துவிட்டது போலும்..

 தனி விளம்பரம்

தனி விளம்பரம்

சசிகலாவுக்கு ஆதரவு தருவது என்பது, இனரீதியான பாசம், அல்லது விசுவாசம் எப்படி வேணும்னாலும் இது இருக்கலாம். இதைதவிர, தனி விளம்பரம் தந்ததும், எடப்பாடியாருக்கு எந்தவிதத்திலும் உறுதுணையாக இல்லாமல் இருப்பதும் உட்பட பல விஷயங்கள் பாஜக மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக, போகிற இடமெல்லாம் அதிமுகவை சரமாரியாக ஸ்டாலின் விமர்சித்து வரும் போது, அவை எதுக்குமே பதில் சொல்லாமல் ஓபிஎஸ் அமைதி காத்து வருவதும் டெல்லிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது.

 திடீர் ட்வீட்

திடீர் ட்வீட்

அதனாலேயே ஓபிஎஸ் மீதான அப்செட் மோடிக்கு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.. இது தெரிந்துதான் ஓபிஎஸ், மோடி வந்த மறுநாளே திடீரென ஒரு ட்வீட்டை போட்டு திமுகவை பல மாசம் கழித்து விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.. அதுமட்டுமல்ல, இப்படியே உள்ளடி வேலை பார்த்து கொண்டிருந்தால், ஓரங்கட்டுப்பட்டு விடுவோமா என்று நினைத்துதான், 2 நாள் முன்னாடி நடந்த அந்த கல்யாணத்தில் எடப்பாடியாரை தூக்கி வைத்து புகழ்ந்துள்ளார் என்றும் சொல்கிறார்கள்.. இருந்தாலும், இவர் யார் பக்கம் என்பது இப்போது வரை குழப்பமாகவே இருக்கிறது" என்றார்கள்!

 
 
 
English summary
Whats BJP planning about Sasiskala and OPS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X