"ஆபரேஷன் சசி".. இதுதான் என் டார்கெட்... கிளியர் சிக்னல் தந்து.. திணற விடும் அமமுக!
சசிகலா வருகை குறித்து ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: அழுத்தம் திருத்தமாக தனது எதிர்காலத்தை சொல்ல ஆரம்பித்து விட்டார் சசிகலா.. இனி அடுத்தடுத்து என்னென்ன அதிரடியை நிகழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பையும் சேர்த்து கிளப்பி விட்டுள்ளார்.
காலையில் காரில் இருந்து கிளம்பும்போதே அதிமுக கொடி கட்டிய காரில்தான் ஏறினார் சசிகலா.. பிடிவாதமாக கர்நாடக எல்லை வரை பயணித்தார்.. திடீரென கவுன்சிலர் சம்பங்கி தன்னுடைய காரை கொண்டு வந்து சசிகலாவிடம் தந்தார்.. அந்த காரிலும் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது.. 3வது காரையும் சசிகலா மாற்றிவிட்டார்.
கழுத்தில் அதிமுக துண்டு போட்டுள்ளார்.. ஜெ.போலவே பச்சை கலர் புடவை உடுத்தி உள்ளார்.. உண்மையிலேயே சசிகலா சொல்ல வரும் மெசேஜ் என்ன? நேரடியாகவே அதிமுகவுக்கு செக் வைக்கிறாரா? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

அமமுக
முன்னதாக, தமிழ்நாடு எல்லைக்குள் கொடியுடன் வந்தால், அகற்றுவோம் என்று சொல்லி போலீசார் ஒரு நோட்டீஸை தரவும் அதை அமைதியாக பெற்றுக் கொண்டுள்ளது அமமுக தரப்பு.. இதற்கும் காரணம் இருக்கிறது.. ஒருவேளை கொடியை அகற்ற போலீசார் முனைந்தால், நிச்சயம் ஆதரவாளர்கள் கொந்தளிப்பார்கள், கைகலப்பு, பிரச்சனை, ஏற்பட வாய்ப்பு வரும்.. எல்லையிலேயே இப்படி தேவையில்லாத சிக்கலை தவிர்க்கவே நோட்டீஸை அமைதியாக வாங்கி கொண்டுள்ளனர்..

மாற்றம்
கார்களையும் அடுத்தடுத்து 3வது முறையாக மாற்றி கொண்டுள்ளனர். இதுபோன்று சாதுர்யமாக நடந்து கொண்டு தமிழக போலீசுக்கே டஃப் தந்துள்ளார் சசிகலா. அதேபோல, கழுத்தில் அதிமுக துண்டு அணிந்துள்ளார்.. அந்த துண்டுடனேயே வழியில் இருந்த ஒரு கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டுள்ளார்.. அதிமுக துண்டை யார் வேண்டுமானாலும் போடலாம்.. எந்த கட்சி துண்டையும் யாரும் போடக்கூடாது என்று சட்டம் இல்லை.. இப்படி கழுத்தில் துண்டு போட்டுள்ளதால், நான்தான் அதிமுக என்பதை மறுபடியும் தெளிவுபடுத்தி உள்ளார் சசிகலா.

பிரம்மாண்டம்
அதாவது, அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் சம்பந்தமே இல்லை என்று சவால் விடுக்கவும்தான், அந்த சவாலை காரில் கொடி, கழுத்தில் துண்டு போட்டு, இன்றே முறியடித்துள்ளார் சசிகலா. அதிமுகவையும், அதிமுகவினரையும் குறி வைத்து்ததான் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார் சசிகலா. அவருக்கு கூடும் கூட்டமும் பிரமாண்டமாக இருக்கிறது... ஒரு ஊழல் வழக்கில் சிறை சென்றவருக்கு அளிக்கப்படும் வரவேற்பு போலவே இது இல்லை.. மாறாக, 30 வருடம் அதிமுகவின் லாபியாக செயல்பட்டவருக்கு அளிக்கப்படும் மாஸ் வரவேற்பையே இது பிரதிபலிக்கிறது.

சிக்னல்
இதன் மூலம் அதிமுக தலைமைக்கு நேரடியாகவே சவால் விடுத்துள்ளார் சசிகலா... இதன்மூலமாகவே இனி அடுத்து அவர் செய்யப் போகும் வேலையையும் சிக்னலிட்டுக் காட்டி விட்டார்.. தி நகர் வீட்டில் நிர்வாகிகளை சந்திக்க போகிறார்.. இன்று மட்டுமல்ல, இனி எப்போதுமே அங்கு தான் அவர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும், அதிமுகவில் உள்ள பெருந்தலைகளை உள்ளே இழுக்கும் வேலையை சசிகலா அதிரடியாகவே ஆரம்பிக்கலாம் என்றும் தெரிகிறது.
-
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications