வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு.. ரஷ்யா முதல் திமோர்-லெஸ்டே நாடு வரை .. எதார்த்தம் என்ன?
சென்னை: நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற போதும், அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் பல்லாயிரம் மாணவர்கள் தவிக்கிறார்கள். நீட் தேர்வில் வென்றவர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கவும் விரும்புகிறார்கள். ஆனால் ரஷ்யா முதல் திமோர்-லெஸ்டே நாடு வரை எதார்த்தம் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி மறுகூட்டல் முடிவுகளும் வெளியாகி விட்டன. அண்மையில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளும் வெளியாகிவிட்டன. பல பெற்றோர்கள் மருத்துவக் கல்லூரிகளில் தங்களின் பிள்ளைகளைச் சேர்க்க தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் சுமார் 4500 பேர் தான் தமிழ்நாட்டில் மருத்துவம் சிலர் எப்பாடுபட்டாவது தன் பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்பி மருத்துவம் படிக்க வைத்துவிட வேண்டும் என்றும் முயன்று வருகின்றனர்.

ஆனால் தமிழ்நாட்டில் அரசுக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 5,225 இடங்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 3,300 இடங்களும் இருக்கின்றன. அதற்குமேல் வென்ற பல்லாயிரம் மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர முடியாத நிலை இருக்கிறது. இவர்கள் மருத்துவம் படிக்க இன்னொரு வருடம் காத்திருந்து நீட் தேர்வு எழுதி அதில் நல்ல மதிப்பெண் பெற்றால் தான் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர முடியும். இல்லாவிட்டால் பல லட்சம் செலவு செய்து தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சேர வேண்டிய நிலை ஏற்படும். சமானிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினரால் அந்த அளவு செலவு செய்ய முடியாது. அப்படியான சூழலில் பல பெற்றோர் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க வைக்க ஆசைப்படுகிறார்கள்.
ஆனால் வெளிநாடுகளில் மருத்துவப் படிப்புகள் தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு இருக்கும். வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கலாமா, படிப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன, அங்கீகாரம் மற்றும் படித்து முடித்த பின்னர் நாடு திரும்பும் மருத்துவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன என்பது போன்ற பல கேள்விகள் இருக்கும். இவற்றிற்கு கல்வியாளர்கள் கூறும் தகவல்களை பார்ப்போம்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மருத்துவம் எந்த நாட்டில் போயும் படிக்க முடியாது. அடுத்ததாக நம் நாட்டில் இருந்து வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க ஆசைப்படுவோர் அதிகமாக செல்வது ரஷ்யாவிற்குத்தான்... ஆனால் ரஷ்யாவை பொறுத்தவரை முழுமையாக நமது எம்எம்சி அங்கீகாரம் உள்ள கல்லுரியா என்பதை அறிந்து செல்ல வேண்டும். அதேபோல் அங்கு முழுமையாக ஆங்கில வழியில் எம்டி (அந்த ஊரில் எம்பிபிஎஸ் படிப்பை எம்டி என்று அழைப்பார்கள்) சொல்லித்தருகிறார்களா என்பது முக்கியம். அதேபோல் முழுமையாக ஆங்கில வழி இல்லாமல் பாதி வருடங்கள் ரஷ்ய மொழி, பாதி வருடங்கள் ஆங்கில மொழி என்று இருக்கும்.. அப்படி இருக்கக்கூடாது என்கிறார்கள் கல்வியாளர்கள். முழுமையாக ஆங்கில வழியில் இருக்க வேண்டும் என்றும், அப்படி இருந்தால் தான் நம் நாட்டு மெடிக்கல் கவுன்சில் அனுமதிக்கும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
அதேபோல் ரஷ்யாவில் மருத்துவ படிப்பை பொறுத்தவரை 6 ஆறுவருடங்கள் என்கிறார்கள். இண்டர்ன்ஷிப் ஒரு வருடம் இருக்குமாம். அதேபோல் அந்த நாட்டில் மருத்துவராக பதிவு செய்து வர வேண்டும். அப்போது தான் இந்தியாவில் மருத்துவராக பிராக்டீஸ் செய்ய முடியும். அதற்கு ரஷ்ய மொழியில் வைக்கப்படும் தேர்வில் வெற்றி பெற வேண்டும். ரஷ்ய மொழியில் பேச எழுத படிப்பதற்கான தேர்வில் வென்றால் தான் அந்த அங்கீகாரம் கிடைக்கும். எல்லாவற்றையும் முடித்துவர ஏழு வருடம் வரை ஆகும் என்கிறார்கள். அதன்பிறகு இந்தியா வந்தால், இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் FMGE (Foreign Medical Graduate Examination) தேர்வில் வெற்றி பெற வேண்டும். அதில் வெற்றி பெறாதவர்கள் மருத்துவர்களாக முடியாது. எனவே இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பிலிப்பைன்ஸை பொறுத்தவரை முழுமையாக அங்கீகாரம் இருக்கிறதா என்பதை அறிந்து செல்வதே நல்லது என்கிறார்கள் கல்வியாளர்கள். அங்கீகாரம் இல்லாத கல்லூரிகள் அதிக அளவில் செயல்படுவதால் அதை முழுமையாக அறிந்து செல்ல வேண்டும் என்கிறார்கள். இதேபோல் ஜார்ஜியா, உக்ரைன், திமோர்-லெஸ்டே உள்பட எல்லா வெளிநாட்டிற்கும் பொருந்தும்.
திமோர்-லெஸ்டே நாட்டில் மருத்துவ படிப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி சென்னை கிண்டியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதிர்ல திமோர்-லெஸ்டே நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் அங்குள்ள பல்கலைக் கழகங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள பல்வேறு நிறுவனங்களும் கலந்துகொண்டு பேசினார்கள். திமோர்-லெஸ்டே இருக்கும் மூன்று பல்கலைக்கழகங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டன.

அப்போது இண்டோமேட் எஜிகேசன் கேர் நிறுவனத்தின் டைரக்டர் டாக்டர்.ராஜாதங்கப்பன் மற்றும் செயின் குலுக் இண்டர்நேஷனல் டைரக்டர் டாக்டர்.ஐசிலின் பாஸ்கர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். இங்கு வந்துள்ள திமோர்-லெஸ்டே இருக்கும் மூன்று பல்கலைக்கழகங்களும் வருங்காலத்தில் மருத்துவம் படிக்க ஒரு முக்கியமான இடங்களாக இருக்கும். திமோர்-லெஸ்டே நாட்டில் இந்தியாவில் என்ன பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறதோ, அது என்னதான் அங்கேயும் பின்பற்றப்படுகிறது. இந்த படிப்பு நான்கரை வருடங்கள் இருக்கிறது. அதற்குப் பிறகு இன்டர்ன்ஷிப் போன்றவையும் அங்கு கிடைக்கிறது.
இந்தியாவில் படிக்கும் அதே மருத்துவம் திமோர்-லெஸ்டே நாட்டில் குறைந்த கல்வி கட்டணத்தில் கிடைக்கிறது. மேலும் அங்கிருக்கும் கல்வி முறை குறித்து கல்வியாளர்கள் ஆய்வு செய்து நன்றாக இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் 400 இடங்கள் இருக்கிறது. திமோர்-லெஸ்டே மருத்துவ படிப்பதன் மூலம் இந்தியாவில் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற எளிதாக இருக்கும். அங்கிருக்கும் சூழல் தென்னிந்தியாவை போல் இருக்கும், அங்குள்ள பல்கலைக்கழகங்களில் இந்திய உணவுகள் வழங்கக்கூடிய விடுதிகளும் இருக்கிறது" என்றார்..
வெளிநாட்டில் மருத்துவம் படிக்க செல்வோர் கவனிக்க வேண்டியவை: அதே நேரம் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க செல்வோர் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், ஆங்கில வழியில் கல்வி இருக்க வேண்டும். அதேபோல் வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுப்பதில் முக்கியச் சிக்கல் மொழிப் பிரச்னையாக உள்ளதால் ஆங்கிலம் பேசும் சூழல்கள் இருந்தால் சிக்கல் இருக்காது. ஆனால் ஆங்கிலம் பேசாத நாடுகளில் பாடங்களை ஆங்கிலத்தில் கற்றாலும், உடன் படிக்கும் மாணவர்களுடன் உரையாடுவது, சிகிச்சை அளிக்கும் நோயாளிகளுடன் உரையாடி, அவர்களின் பிரச்னைகளைப் புரிந்து சிகிச்சை அளிப்பதற்குச் சிரமப்படும் சூழல் ஏற்படும். அதேபோல் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க போகும் முன்பு மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் உள்ளதா, எத்தனை வருடங்கள் ஆகும். சாப்பாடு, ஹாஸ்டல் பீஸ், டியூசன் பீஸ் உள்பட எல்லாவற்றுக்கும் சேர்த்து எவ்வளவு செலவாகும் என்பதை முழுமையாக அறிந்து செல்ல வேண்டும். அதேபோல் கல்வியாளர்களிடம் இதுபற்றி முழு ஆலோசனை பெற வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications