2 மாஸ்டர் பிளான்கள்.. வீடியோக்களை வெளியிட போறாராமே சசிகலா.. கிறுகிறுத்து போகும் அதிமுக..!
எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் அதிரடிகளை கண்டு கதிகலங்கி போயுள்ளாராம்
சென்னை: சசிகலா தொடர்பாக 2 விஷயங்கள் கசிந்து வரும் நிலையில், அதிமுக மேலிடம் கதிகலங்கி போயிருக்கிறதாம்.. அப்படி என்ன செய்ய போகிறார் சசிகலா?
சமீபத்தில் சசிகலா செய்தியாளர்களிடம் பேசியிருந்தார்.. 2 முறை பேட்டி தந்திருந்தார்.. 2 பேட்டிகளிலுமே முக்கிய விஷயத்தை மறைமுகமாக சொல்லி இருந்தார்.
கடந்த ஏப்ரல் 26-ம் தேதி சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார் சசிகலா.. முன்னதாக, ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்..

தனியாகவா?
அப்போது, செய்தியாளர்களிடம், "ஆன்மீக பயணத்தை நிறைவு செய்த நிலையில் விரைவில் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளேன். அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு தொடர்பாக விரைவில் மேல்முறையீடு செய்வேன்" என்று கூறியிருந்தார். அதேபோல, திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, உங்களுடைய அரசியல் பயணம் தனியாகவா? அல்லது கூட்டணி கட்சியுடனா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

எடப்பாடி பழனிசாமி
அதற்கு சசிகலா, "இங்கு தானே இருக்கீங்க.. பொறுத்திருந்து பாருங்க" என்றார்.. இந்த இரு விதமான பதில்களும் டிடிவி தினகரனுக்கு ஷாக் தந்ததோ இல்லையோ, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கதிகலங்கி போய்விட்டதாம். கோர்ட் தீர்ப்பு வந்ததும் ஒதுங்கி போய்விடுவார்கள் என்று பார்த்தால், இந்தம்மா மேல்முறையீடுக்கு போகிறார்களே என்று கலங்கி போய் சொல்கிறார்களாம். அதேசமயம், சசிகலா பேட்டியில் சொன்ன இந்த விஷயத்தையும் தாண்டி, வேறு சில அதிரடிகளை மேற்கொள்ள போகிறாராம்.

பங்களாவில் என்னாச்சு
குறிப்பாக, கொடநாடு சம்பவத்தைதான் கிண்ட போகிறாராம்.. அதை மக்களிடமும் கொண்டு போக போகிறாராம்.. அதாவது, "ஒரு தைரியமான தலைவியான, அம்மாவின் பங்களா அது.. அங்கு நுழைய யாருக்குமே அதிகாரம் கிடையாது.. அப்படிப்பட்ட பங்களாவில் கொலை, கொள்ளை நடந்துள்ளது.. இது ஆட்சியில் இருப்பவர்களுக்கு தெரியாமலோ, அல்லது உடன்பட்டோ நடந்திருக்காது.. இதுக்கு நீங்களே ஒரு நியாயம் வழங்குங்க என்று மக்களிடமே கேட்க போகிறாராம். அதாவது நீதிகேட்டு பயணமாம் இது..

ஜெயலலிதா
கொலை செய்யப்பட்ட ஓம்பகதூர் குடும்பத்துக்கு என்ன நீதி? என்றும் 234 தொகுதிகளிலும் நியாயம் கேட்க போகிறாராம் சசிகலா. அதுமட்டுமல்ல, தனக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன மாதிரியான உறவு இருந்தது? தங்கள் இருவருக்கு இடையிலான நட்பு, அன்பு குறித்தெல்லாம் குட்டி குட்டி வீடியோக்களாக வெளியிட போகிறாராம் சசிகலா.. அந்த அளவுக்கு அம்மாவுடன் நெருக்கமாக இருந்தும், சிறைக்கெல்லாம் போய், அவங்களுக்கே துரோகம் செய்துட்டாங்களே, இது நியாயமா? என்று அதிமுகவினரின் கோபத்தையும் எடப்பாடி பக்கம் திருப்பி விடப் போகிறாராம்..

இஸ்லாமிய குடும்பம்
ஏற்கனவே, வேளாங்கண்ணிக்கு சென்று கிறிஸ்தவ மக்களின் பார்வையை தன்பக்கம் திருப்பி விட்டார்.. மற்றொரு பக்கம் இப்தார் நோன்பில் கலந்து கொண்டு இஸ்லாமிய மக்களின் அன்பையும் பெற்றுள்ளார்.. பிறகு, தஞ்சை தேர்திருவிழாவில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நேரிலேயே சென்று ஆறுதலும் சொல்லிவிட்டு வந்துள்ளார்.. இப்படி அனைத்து தரப்பிலும் சசியின் வேகம் சூடுபிடித்து வரும் நிலையில், அவர் மேற்கொள்ளவிருக்கும், அடுத்தக்கட்ட காய் நகர்த்தலை கேள்விப்பட்டு, அதிமுக டீம் வெலவெலத்து போயுள்ளதாம்.. இதை முறியடிக்க ஏதாவது வழியிருக்கிறதா என்ற யோசனையில் எடப்பாடி தரப்பு இறங்கி வருவதாக தெரிகிறது..!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications