"நிர்வாண கண்ணாடி".. அப்பட்டமாக காட்டும் மாயக்கண்ணாடி.. கோயம்பேடு லாட்ஜில் நுழைந்த போலீஸ்.. 4 பேரா?
சென்னை: கோயம்பேடு லாட்ஜ்ஜூக்குள்ளேயே போலீஸ் நுழைந்து, 4 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்துள்ளது.. அவர்களிடம் கைப்பற்றப்பட்ட பொருட்களை கண்டு போலீசார் திகைத்து போயுள்ளார்கள்.
1981-ல் டைரக்டர் முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் நெற்றிக்கண்.. இதில் ரஜினிகாந்த் ஒரு சபலபேர்வழியாக நடித்திருப்பார்.
ஒரு காட்சியில் வெளிநாடு சென்று வந்த நண்பர், மாயக்கண்ணாடி ஒன்றை ரஜினிக்கு பரிசாக வழங்குவார்.. அந்த கண்ணாடி, எக்ஸ்ரே திறன் பெற்றது..

போலி கண்ணாடி: அதன்காரணமாக ஆடைகள் இன்றி உடம்பை காட்டும் குணம் கொண்டது என்று சொல்வார்.. கண்ணாடி அணிந்து யாரை பார்த்தாலும், அவர்கள் நிர்வாணமாக தெரிவார் என்பார். இந்த கண்ணாடியை வைத்துதான் சரிதாவை பார்ப்பார்.. அதன்பிறகு கதை நகரும்.. அதுபோலவே பாசிலின் பூவே பூச்சூடவா படத்திலும் இதே போல ஒரு கண்ணாடியை வைத்து நதியா எஸ்வி சேகரை சீண்டி விளையாடுவார்.. இதில் நகைச்சுவையாக இந்த மாயக்கண்ணாடி சீன் இடம்பெற்றிருக்கும்..
சினிமாவில் மட்டும் கேள்விப்பட்ட இந்த கண்ணாடி, நடைமுறையில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.. 2 வருடங்களுக்கு முன்பு, இப்படி ஒரு கண்ணாடியை வைத்துதான் தேனியில் ஒருவர் சிக்கினார்.. சபலிஸ்ட் ஒருவருக்கு, மாயக்கண்ணாடி தன்னிடம் இருப்பதாகவும், கண்ணாடியின் விலை ஒரு லட்சம் ரூபாய் என்றும் ஆசைகாட்டி உள்ளார்.. அந்த நபரும், 1 லட்சம் தந்து கண்ணாடியை வாங்கியுள்ளார்.. அந்த கண்ணாடியை எடுத்து மாட்டியதுமே, ஏமாந்து போயுள்ளார்.. அது ஒரு சாதாரண கண்ணாடி என்பது தெரியவந்தது..
லாட்ஜ் ரூமுக்குள்: இப்போது விஷயம் என்னவென்றால், சென்னையில் ஒரு கும்பல் வசமாக சிக்கியிருக்கிறது. கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்டு பின்பக்கம், ஒரு லாட்ஜில் 4 பேர் தங்கியிருந்திருக்கிறார்கள்.. சந்தேகத்திற்குரிய சில நபர்கள், அங்கு ரூம் போட்டு தங்கியிருப்பதாக, சிஎம்பிடி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.. அந்த தகவலின் பேரில் போலீஸார் லாட்ஜ் ரூமுக்குள் நுழைந்துள்ளனர்.. அங்கேயிருந்த 4 பேர்களையும் பிடித்து விசாரித்துள்ளனர்.. அவர்கள் வைத்திருந்த பொருட்களையும் சோதனையிட்டனர்..

அப்போது போலி கைத்துப்பாக்கி ஒன்று, 8 தோட்டாக்கள், கை விலங்கு, லீடிங் செயின், போலி அடையாள அட்டைகள் போன்றவை இருந்துள்ளதை கண்டு அதிர்ந்துள்ளனர்.. இதைதவிர, ஒரு பையில், கருப்பு அரிசி 50 கிராம் வைத்திருந்துள்ளார்கள்.. இது எதற்கு என்று தெரியவில்லை.. ஆனால், போலீஸ் கைப்பற்றியதில் 2 முக்கிய பொருட்கள் பெருத்த சந்தேகத்தை கிளப்பி உள்ளது.. ஒன்று, கோபுரகலசம், மற்றொன்று நிர்வாணமாக காட்டும் கண்ணாடிகள்..
நிர்வாண கண்ணாடி: இதையடுத்து 4 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.. இதில் சிவா என்பவர் பெங்களூரை சேர்ந்தவர்.. குபய்ப், ஜித்து, இர்ஷாத் ஆகிய 3 பேரும் கேரளாவை சேர்ரந்தவர்கள்.. இந்த 4 பேரும் ஒன்றாகவே ரூம் எடுத்து தங்கியிருந்ததால், இதற்கு முன்பும் இவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது.
ஆனால், கோபுர கலசத்தை யாரிடம் தர வந்தார்கள்? அல்லது கோபுர கலகத்தை கடத்தி கொண்டு போக வந்தவர்களா? என்று தெரியவில்லை.. எதிரில் இருப்பவர்களை நிர்வாணமாக காட்டுவதாக சொல்லி கண்ணாடிகளை விற்க வந்துள்ளனர்.. ஆனால், அந்த கண்ணாடிகளை சோதித்து பார்த்தபோது, அவைகளும் போலி என்று தெரியவந்துள்ளது.. இவர்களுக்கு பின்னால் இயங்கும் நபர்கள் யார் யார்? என்பது குறித்த விசாரணையை அந்த 4 பேரிடமும் போலீசார் நடத்தி கொண்டிருக்கிறார்கள்..!!!












Click it and Unblock the Notifications