சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சேவல்" குரூப்.. ஆடையின்றி பெண்களுடன் வீடியோ கால் பேச 700 ரூபாயாம்.. பகீரை கிளப்பும் ஆன்லைன் மோசடி

வாட்ஸ்அப் க்ரூப்களில் மோசடி செய்த நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: டிரஸ் இல்லாமல் இளம்பெண்களுடன் பேச 700 ரூபாயாம்.. இதுபோன்று, ஒரு ஆபாச வாட்சப் க்ரூப் மூலம் இளம்பெண்களின் புகைப்படங்களை காட்டி பண மோசடியில் ஈடுபட்ட நபர்களுக்கு போலீசார் வலைவீசி உள்ளனர்.

தற்போது லாக்டவுன் என்பதால், பெரும்பாலும் இளைஞர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலைமை உள்ளது.. எனவே, கையில் எந்நேரமும் செல்போன்கள் இருக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

நியாயமற்றது, பகுத்தறிவற்றது.. மத்திய அரசின் வேக்சின் கொள்கையை.. சரமாரியாக விமர்சித்த உச்ச நீதிமன்றம் நியாயமற்றது, பகுத்தறிவற்றது.. மத்திய அரசின் வேக்சின் கொள்கையை.. சரமாரியாக விமர்சித்த உச்ச நீதிமன்றம்

இதைதான் ஒருசில கும்பல்கள் ஆன்லைன்களில் மோசடியில் ஈடுபட்டு தங்களுக்கு சாதகமாக்கி கொண்டுள்ளனர்.. இளைஞர்களை குறி வைத்து ஒரு பெரிய நெட்வோர்க் ஆன்லைனில் வலம் வருகிறதாம்.

சேவல்

சேவல்

அந்த குரூப்புக்கு சேவல் என்று பெயராம்.. இந்த சேவல் குழுவில் சேர்ந்தவர்களுக்கு ஸ்பெஷல் சலுகை, அறிவிப்புகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படுகிறது.. இந்த எஸ்எம்எஸ்ஐ கிளிக் செய்தால், வீடியோ Video call Availabe என்ற மற்றொரு குரூப்புக்கு அழைத்து செல்லுமாம்.. அதில், இளம்பெண்களின் போட்டோக்கள் நிறைய ஷேர் செய்யப்படுகிறது.. அவர்களுடன் பேசுவதற்கு ஒரு கட்டணம், டிரஸ் இன்றி வீடியோ கால் பேசினால், அதற்கு ஒரு கட்டணமாம்.

 நிர்வாண வீடியோ

நிர்வாண வீடியோ

ஒரு மணி நேரம் வீடியோ காலில் பேசினால் 500 ரூபாய், டிரஸ் இன்றி ஒரு மணி நேரம் வீடியோ கால் மூலம் பேசினால் 700 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது... ஒவ்வொரு அறிவிப்புக்கும் ஒவ்வொரு காசு நிர்ணயித்துள்ளனர்.. இதை நம்பிய பல இளைஞர்கள் பணத்தை வாரி வாரி இறைத்துள்ளனர்.. ஆனால் பணத்தை செலுத்தியபிறகுதான், தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று இளைஞர்கள் உணர்ந்துள்ளனர்.

பணம்

பணம்

அதுமட்டுமல்ல, பணம் செலுத்தியவர்களை அந்த சேவல் குழுவில் இருந்து நீக்கப்பட்டு விடுகின்றனர்.. இதை பற்றி கேள்வி கேட்டால், அவர்கள் நம்பரையும் பிளாக் அந்த மோசடி கும்பல் செய்து விடுகிறதாம்.. இப்படி ஏராளமான இளைஞர்கள் பணத்தை இழந்து, ஏமாந்து போய் உள்ளனர்... யாரிடமும் இதை பற்றி விசாரிக்கவும் முடியாமல் புழுங்கி உள்ளனர்.

மோசடி

மோசடி

இதை பற்றி வீட்டிலும் சொல்ல முடியாமல், போலீசிலும் சொல்ல முடியாமல், மனக்குமுறலில் சிக்கி உள்ளனர்.. எனினும், இதையெல்லாம் மீறி இந்த சம்பவத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட ஒருவர், தற்போது இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்... இதையடுத்து, போலீசாரும் இது சம்பந்தமான விசாரணையில் இறங்கி உள்ளனர்... மோசடி கும்பலுக்கும் வலை வீசப்பட்டுள்ளது..

English summary
Whatsapp group Admin cheated money on private video
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X