வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி 15 நிமிடங்களில் மாயமாகும் மெசேஜ்! மெட்டா அதிரடி முடிவு
சென்னை: உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் மெசேஜ் ஆப்பாக வாட்ஸ்அப் உள்ளது.. இது தனது யூசர்களின் தனியுரிமையை மேம்படுத்துவதற்காகவும், பயன்பாட்டை எளிமையாக்குவதற்காகவும் அடிக்கடி புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அப்படித்தான் இப்போதும் Disappearing Messages அதாவது டிஸ்பியரிங் மெசேஜ் என்ற ஆப்ஷனை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.. அதை பற்றிதான் இங்கே சுருக்கமாக பார்க்க போகிறோம்.
முக்கியமான மற்றும் எதிர்பாராத மாற்றத்தை மெட்டா நிறுவனம் தற்போது திட்டமிட்டுள்ளது. அனுப்பப்படும் மெசேஜ்கள் தானாகவே மறைந்துவிடும் கால அவகாசத்தில் 15 நிமிடங்கள் என்ற புதிய தேர்வை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த போகிறதாம்.

வாட்ஸ்அப் பயனர்கள்
பொதுவாக நாம் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பினால், நாம் அனுப்பும் அந்த மெசேஜ் தானாக மறைய வேண்டும் என்றால், அதற்கான கால அளவை 24 மணிநேரம், 7 நாட்கள் அல்லது 90 நாட்கள் என இந்த 3-ல் ஒன்றை தேர்ந்தெடுப்போம். இதுதான் தற்போது நடைமுறையில் உள்ளது.
ஆனால் பல நேரங்களில் பயனர்கள் மிகக் குறுகிய காலத்திற்கு மட்டும் ஒரு தகவலை பகிர விரும்புவார்கள். உதாரணமாக, ஒரு ரகசிய குறியீடு, தற்காலிக முகவரி அல்லது ஒரு போட்டோ அனுப்பும்போது அது நீண்ட நேரம் சேமிப்பில் இருக்க வேண்டிய அவசியம் இருப்பதில்லை. இந்த தேவையை பூர்த்தி செய்யும் விதமாகவே 15 நிமிடங்கள் என்ற மிகக் குறுகிய கால அவகாசத்தை வாட்ஸ்அப் கொண்டு வர போகிறதாம்.
15 நிமிடங்களில் மாயமாகும் மெசேஜ்
இந்த புதிய வசதி பயன்பாட்டிற்கு வரும்போது, பயனர்கள் தங்களது சாட் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று டிஸ்பியரிங் மெசேஜ் தேர்வில் 15 நிமிடங்கள் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து வைத்து கொள்ளலாம்.. இப்படி செய்ததுமே, நீங்கள் அனுப்பும் எந்தவொரு மெசேஜும் சரியாக 15 நிமிடங்களில் தானாகவே அழிந்துவிடும்.
இது செல்போனில் சேமிப்பு இடத்தை மிச்சப்படுத்தும்.. அதுமட்டுமல்லாமல் ஒருவருடைய தனிப்பட்ட உரையாடல்கள் தேவையின்றி மற்றவர்கள் கைகளில் கிடைப்பதையும் தவிர்க்க உதவும். குறிப்பாக, மிக முக்கியமான தகவல்களை ஷேர் செய்யும் நபர்களுக்கு இந்த 15 நிமிட கால அளவு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
மெட்டா சூப்பர் வசதி
மெட்டா நிறுவனம் இந்த வசதியை முதற்கட்டமாக Beta பீட்டா பதிப்பு யூசர்களுக்கு சோதனை முறையில் வழங்க தொடங்கியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என 2 தளங்களிலும் இதற்கான சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததும், உலகெங்கிலும் உள்ள அனைத்து யூசர்களுக்கும் இந்த புதிய அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் பாதுகாப்பிற்காக லாக் சாட் (Locked Chat) மற்றும் சீக்ரெட் கோட் (Secret Code) போன்ற வசதிகளையும் ஏற்கனவே வலுப்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப் ரூல்ஸ்
இந்த 15 நிமிட டைமர் வசதி, வாட்ஸ்அப் தளத்தை இன்னும் வேகமான மற்றும் பாதுகாப்பான உரையாடல் களமாக மாற்றும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
தேவையற்ற மெசேஜ்களை மேனுவலாக டெலீட் செய்யும் வேலையை இது வெகுவாகக் குறைக்கும். இனிவரும் காலங்களில் இது போன்ற இன்னும் பல நுணுக்கமான நேரக் கட்டுப்பாட்டு வசதிகளை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஜிட்டல் உலகில் தகவல்கள் திருடப்படுவதை தவிர்க்கவும், பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்யவும் இத்தகைய அப்டேட்கள் மிகவும் அவசியமான ஒன்றுதான்..!!!
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications