அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி.. இனி "இந்த" பொருளுக்கு தட்டுப்பாடே இல்லையாம்.. அரசு அதிரடி
சென்னை: ரேஷன் கடைகளில் கூடுதலாகவும், இலவசமாகவும் 2 பொருட்களை வழங்கப்போவதாக செய்திகள் கசிந்தநிலையில், இப்போது கோதுமை குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
விரைவில் தீபாவளி பண்டிகை வரப்போகிறது.. எனவே, தீபாவளியை முன்னிட்டு, அடுத்த 2 மாதங்களுக்கு ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்குவது குறித்து, அரசு பரிசீலித்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகி இருந்தது.

இப்போதைக்கு அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், கிலோ 25 ரூபாய் விலையில் அதிகபட்சம், 2 கிலோ சர்க்கரை, கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய் லிட்டர் பாமாயில் 25 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அக்டோபர், நவம்பர் மாதங்களில், ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது..
பண்டிகை சீசன்: இதற்காக, நுகர்பொருள் வாணிப கழகம், அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவைப்படும், 60,000 டன் துவரம் பருப்பு, 1 லிட்டர் பாக்கெட் கொள்ளளவில், 6 கோடி லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்ய உள்ளதாம்.
அதுமட்டுமல்ல, பண்டிசை சீசன் துவங்க உள்ளதால், உணவு தானியங்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. அதனால், அனைத்து கார்டுதாரர்களுக்கும் அடுத்த 2 மாதங்களுக்கும், ரேஷனில் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்கலாமா என்பது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன. இப்போது அடுத்த குட்நியூஸ் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு: அதாவது, மத்திய அரசு, கடந்த மாதம் தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை, 1,038 டன்னாக குறைத்திருந்தது.. இதனால், அனைத்து கார்டுதாரர்களுக்கும் கோதுமை வழங்க முடியாத நிலைமையும் ஏற்பட்டது.. இது தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு கலக்கத்தையும் தந்தது.. இதையடுத்து, தமிழக அரசு இந்த விஷயத்தை கையில் எடுத்தது.
"தமிழகத்திற்கு வழக்கம் போல கோதுமை வழங்க வேண்டும்" என்று தமிழக உணவுத் துறை சார்பில், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.. அத்துடன், இதுதொடர்பாக, தமிழக அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகளிடம் நேரிலும் பேசினார்கள்.. இதற்கு பிறகுதான், தமிழகத்துக்கு 8500 டன் கோதுமையை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
முன்னுரிமை: இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, "முன்னுரிமை கார்டுதாரர்கள் எண்ணிக்கை தவறாக கணக்கிடப்பட்டு, அதற்கு ஏற்ப கோதுமை ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. இது, மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தவறு சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து, தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கியதுபோலவே, மாத மாதம், 8,500 டன் கோதுமையை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications