மகளிருக்கான உரிமைத் தொகை.. திமுக அரசு எப்போது அமல்படுத்தும்.. மக்கள் நீதி மய்யம் கேள்வி!
சென்னை: மகளிருக்கான உரிமைத் தொகையான ரூ.1000 வழங்கும் வாக்குறுதியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தி உள்ளது.
வீட்டில் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையினை அரசு கொடுக்க வேண்டும் என்று முதன்முதலில் பேசியது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் தான். அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை கொடுப்போம் என்று தேர்தல் அறிக்கையும் அக்கட்சி சார்பாக வெளியிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தேர்தல் அறிக்கை வெளியிட்ட திமுக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஊக்கத்தொகை என்ற வார்த்தையை மாற்றி உரிமைத் தொகை என்று ரூ.1,000 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து ஆட்சியமைத்த திமுக அரசு, பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றினாலும், மகளிருக்கான உரிமைத் தொகை வாக்குறுதியை எப்போது நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
அதேபோல் திமுக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டிலும் மகளிருக்கான உரிமைத் தொகை பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. அதேபோல் எதிர்க்கட்சிகளும் திமுக அரசின் மகளிருக்கான உரிமைத் தொகை வாக்குறுதியை முன்வைத்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மகளிருக்கான உரிமைத் தொகையான ரூ.1000 வழங்கும் வாக்குறுதியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நீதி மய்யம் முதலில் முன்வைத்த "மகளிர் உரிமைத் தொகையானது" தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றது.
கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆமா; ஆட்சிக்கு வந்தபின், "அனைவருக்கும் வழங்க முடியாது. உரிமைத்தொகை பெறத்தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து வழங்குவோம்" என்று நிதியமைச்சர் கூறினார்.
Recommended Video
பின்னர் கடந்த பட்ஜெட்டின் போது, நிதிநிலைமை சரியானதும் வழங்கப்படும் என்று புது நிலைப்பாடு எடுத்தார் நிதி அமைச்சர். தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து விவாதிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நிதி அமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனாக் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications