1000 ரூபாய் ஸ்டாலின் அறிவித்தாரே.. எப்போது கிடைக்கும் தெரியுமா?.. அமைச்சர் நாசர் சொன்ன முக்கிய தகவல்
1000 ரூபாய் எப்போது வழங்கப்படும் என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்
சென்னை: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது? என்று அமைச்சர் நாசர் முக்கிய தகவலை சொல்லி உள்ளார்.. அத்துடன் திமுக ஆட்சி பொறுப்பேற்ற இந்த 8 மாத காலத்தில் பால் உற்பத்தி அதிகரித்து பால் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது என்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய ஆவின் பால் பண்னையில் நாள் ஒன்றுக்கு சுமார் 70 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதனை காரைக்குடி பால்பண்ணையின் மூலம் குளிரூட்டப்பட்டு, பதப்படுத்தி இரண்டு மாவட்ட நுகர்வோர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

ஆவின் பொருட்கள்
இதில், ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க ஆவின் பால் குளிரூட்டும் மற்றும் பால் பொருள் உற்பத்தி நிறுவனம், விற்பனை மையங்களில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட உள்ள 900 வீடுகளுக்கான இடத்தையும் அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டனர்...

அமைச்சர் நாசர்
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் நாசர் சொன்னதாவது: "கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக முந்தைய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது முதல்வரின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது.. அந்த வகையில் ஆவினில் நடைபெற்ற முறைகேடான நியமனங்கள் தொடர்பாகவும் பணி நியமனங்களுக்காக மூன்று கோடி ரூபாய் வசூலித்தது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆவின்
ஆவினில் கடந்த ஆட்சியில் 36 லட்சம் என்ற அளவில் இருந்த உற்பத்தியானது, இப்போது, 41 லட்சமாகவும், 25 லட்சம் என்ற அளவில் இருந்த விற்பனை 28 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் கோரிக்கைகளை கேட்டு வருகிறோம். கூடுதலாக 5 பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். உற்பத்தியை கூட்ட இயந்திரங்கள் மற்றும் வசதிகளை மேம்படுத்துவது குறித்து கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

திட்டம்
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் செயல்படுத்துவார்.. பிற திட்டங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைபடுத்துவதை போல் அதையும் முதல்வர் செயல்படுத்துவார்... அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.. கடந்த ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக விதிகளை மீறி பணி நியமனம் பெற்ற 236 பேர் மீது உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்.. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அடுக்கடுக்காக ஊழல் புகார் குவிந்து உள்ளது.... விரைவில் அதுகுறித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.
-
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications